No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, June 5, 2018

பொய்யர்கள் என்கிற புழுக்கள்!
பொய் என்றாலே புளுகுதல் என்றுதானே பொருள். வக்கீல்கள் என்கிற கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களுக்கு புளுகத் தெரியாதா என்ன?

ஆகையால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு தாங்களே பெரிதும் உதவியதாக பீலாக்களை பதிவிட்டும், தங்களைத் தாங்களே புகழ்ந்தும் கொள்கின்றனர்.

தங்களைப் புகழ்ந்து கொண்டால் மட்டும் போதாதே. தங்களின் நாறிய பிழைப்புக்கு உற்ற துணையாய் இருந்து கூட்டுக்களவாணித்தனம் செய்யும் நிதிபதிகளையும் புகழ வேண்டுமே!

ஆகையால், அம்மாவட்ட நிதிபதிபதிகளைப் பற்றியும் ஆகா, ஓஹோ என இஷ்டத்துக்குப் புளுகி தள்ளுகிறார்கள். பொய்யர்களுக்கு புளுக சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன?

உண்மை என்ன என்றால், இந்தியா முழுவதும் கைதிகளை அடைக்க சிறையில் இடமில்லை. அடைக்க வேண்டிய எண்ணிக்கையை விட கூடுதலாக அடைத்திருப்பது மனித உரிமை மீறல் என்று ஏற்கெனவே பிரச்சினை எழுந்துள்ளது. 

இதனால் மத்திய அரசு விசாரணை கைதிகளை தானே முன்வந்த விடுவிக்க முடிவு செய்துள்ளது பற்றி இன்றைய 05-06-2018 தினமணியின் தலையங்கத்தில் விரிவாக எழுதப்பட்டு உள்ளது.


இதில், தூத்துக்குடி கலவரத்தில் கைது செய்யப் பட்டவர்களை எங்கு அடைப்பார்கள்? 

ஆகையால், அரசடிமை காவலூழியர்கள் பதிந்த வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை நிதியடிமை நிதிபதிகள் பிணையில் விட்டு விட்டார்கள்.

இவர்கள் நீதிபதிகள் என்றால், அமைதிப் போராட்டம் நடந்த போதே, தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து இருக்க வேண்டும். இப்படி செய்திருந்தால், போராட்டம் நூறு நாட்களை தொட்டிருக்காது. மற்ற விபரீதங்களும் நடந்திருக்காது.

இதுபற்றி அரசை கேள்வி கேட்டவர்கள் யாரும், நிதிபதிகளை கேட்கவில்லையே ஏன்? கேட்க ஆண்மை இல்லையா... குற்றம் நடைபெறாமல் தடுக்கும் பொறுப்பு நிதிபதிகளுக்கு இருக்கா... இல்லையா?

மக்கள் போராட்டம் நடத்தி, அதில் குற்றங்கள் நிகழ்ந்து, மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தால்தானே, பொய்யர்களுக்கும் நிதிபதிகளுக்கும் பிழைப்பு நடக்கும்? இதுதானே இப்போது நடந்து கொண்டிருக்கிறது??

இதைத்தான் சத்தியவான் காந்தி, ‘‘இந்த விபச்சாரப் பொய்யர்கள் தங்களின் தொழிலை கைவிட்டால், அன்றே ஆங்கிலேய ஆட்சி சிசைந்துபோய் விடும்’’ என்று சொன்னார். இது இன்றைய ஆங்கிலேய வழி ஆட்சிக்கும் சாலப் பொருந்தும்.

மாவட்ட நிதிபதிகள் மாநில அரசுக்கு அடிமைகள் என்பதால் மாநில அரசை கேள்வி கேட்க முடியாததைப் போல, உயர்மட்ட நிதிபதிகள் மத்திய அரசின் அடிமைகள்.

ஆகையால் தான், நூறு நாட்கள் போராட்டம் நடந்தும், இதுபற்றி நிதிபதிகள் யாரும் முன்னரே தாமாக முன்வந்து கேள்வி கேட்கவில்லை என்பதோடு, ‘‘துப்பாக்கி சூடு நடந்தப் பின்னுங் கூட, நாங்களாக முன்வந்து விசாரிக்க மாட்டோம். வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கிறோம்’’ என சொல்லி விட்டார்கள்.

ஆனால், இந்த ஆண்மையற்ற நிதிபதிகள் மேடையில் பேசும்போது, உங்களது குறைகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் கூட, வழக்காக பதிவு செய்து, விசாரித்து நீதி வழங்குவோம் என்று புளுகுவார்கள் என்பார்கள்.

இவிங்களுக்கு மட்டும் எப்படிதான் இப்படி புளுக முடியுது என்றால், அவர்களது பிறப்பும், பிறவிக் குணமும் அப்படித்தான்!

இதைப்பற்றி எல்லாம் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் ஓர் அத்தியாயம் முழுவதும் எழுதி உள்ளேன்.

இந்த உண்மைகளை எல்லாம் பொய்யர்கள் எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே? 

ஆனால், வழக்கம் போலவே பொய்யர்கள் இதனை மூடி மறைத்து, நிதிபதிகளிடம் இரவு பகல் பாராமல் தாங்கள் வாதாடி விடுவித்ததைப் போலவும்.., 

இதற்கு நிதிபதிகளும் ஒத்துழைத்தது போலவும், பொய்யரடிமைகள் தங்களை தாங்களே புகழ்ந்தும், தங்களுக்கு மேலான நிதிபதி அடிமைகளைப் புகழ்ந்தும் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்த வருமானங்களுக்காக பதிவிட்டு வருகின்றனர்.

இதெல்லாம் தெரியாத அறிவுப்பூர்வமாக சிந்திக்க தெரியாத மாக்கள் பலர், உணர்ச்சி வசப்பட்டு ஆமாஞ்சாமி போட்டு வாழ்த்துகின்றனர். உணர்ச்சி வசப்பட்டாலே சிந்தனை அறிவு மழுங்கி விடும் என்பது இந்த மாக்களுக்கு எப்படி புரியும்?

வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட ‘‘விஷக் கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும்’’ என்றார் பகுத்தறிவுப் பெரியார்.

சத்தியவான் காந்தியோ விபச்சார தொழில் என்றார். விபச்சாரியிடம் போனால், கிருமியால் எய்ட்ஸ் என்னும் நோய் வந்து சாகத்தானே வேண்டும். 

இப்புளுகர்கள் மற்றவர்களது உரிமையைப் பற்றி கவலைப்படுவது ஒருபுறம் இருக்கட்டும். 

முதலில் 19-02-2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலும், இன்னபிற இடங்களிலும் காவலூழியர்களிடம் பொய்யர்கள் வாங்கிய தர்ம அடிகளுக்கு நீதியைப் பெற்று, காவலூழியர்களை சிறையில் தள்ளட்டும். பின்னர் மக்களுக்கு சட்ட உதவி செய்ததைப் பற்றி பு(ழு, ளு)கட்டும்!

ஆமாம், புழு என்பது எப்படி உங்களின் இரத்தத்தை குடித்து கொழுத்து உயிரைக் கொள்ளுமோ, அப்படியே பு(ழு, ளு)கர்களும் என்பதால், புழுவைக் கண்டால் எப்படி அருவெருப்பாக பார்ப்பீர்களோ அப்படித்தான் பு(ழு, ளு)கர்களையும் பார்க்க வேண்டும். 

ஏனெனில், புழுக்கள் உங்களின் இரத்தத்தை உறிஞ்சி உண்டு கொழுப்பதுபோல இவர்கள் உங்களது பொருளாதாரத்தைச் சுரண்டி, உங்களுக்கு கிடைக்க நியாயத்தைக் கொன்று, பின் அதன் வழியாக உங்களை கொல்லும் கொடும்புழுக்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

இப்பு(ழு, ளு)கர்களைப் பற்றி சான்றோர் பெருமக்கள் சொன்னது என்ன என்பதை விரிவாக அறிய விரும்புவோர் நீதியைத்தேடி... என்ற இணையப் பக்கத்தைப் படிக்கவும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம் - குறள் 77

பொதுவாக காயும் வெயிலைக் காண விரும்பும் புழுவானது, தன் இருப்பிடத்தை விட்டு தானாகவே வெளிவந்து வெயிலில் அகப்பட்டு அதன் சூடு தாங்க முடியால் சுருண்டு செய்துவிடும் என்பது குறளின் பொருள். அதாவது இப்புழுக்களைப் போல அறத்தோடு மோதுபவர்கள் அவர்களாகவே அழிவார்கள்; அறமே அவர்களை அழிக்கும் என்பது கருப்பொருள்.

இப்படித்தான், வக்கீல் என்கிற கூலிக்கு மாரடிக்கும் பொய்ப் புழுக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைத்து அவ்வப்போது வெளிவந்து தங்களின் புகழுக்காக எதையாவது புளுக இதுபோன்ற என்னுடைய  அறக் கட்டுரை கருத்துக்களால் அடிபட்டும், அசிங்கப்பட்டும் அழிகின்றனர். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)