சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, May 20, 2018

நீதியைத்தேடி... கட்டுரைகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா?!



சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற விரும்புவோருக்கு என்று நாங்கள் வாட்ஸ்அப் குழு எதையும் உருவாக்க வில்லை. விரும்பினால், நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் கட்டுரைகளை உங்களுடைய மின்னஞ்லுக்கு பெற முடியும்.

ஆமாம், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் சமூக மற்றும் சட்டஞ் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன. 

சூழ்நிலைக்கு தக்கவாறு அல்லது வாசகர்கள் கேட்ட கேள்விக்கு தக்கவாறு இந்தக் கட்டுரைகளின் இணையப்பக்க முகவரி இணைப்பை (யுஆர்எல்) முகநூல் உள்ளிட்டவைகளில் பதிவு செய்தால், அந்த இணைப்பைப் சொடுக்கி படிக்க வேண்டும் என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

ஆமாம், இது கூடவா தெரியாமல் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் 14-05-2018 அன்று முகநூலில் ஒரு பதிவை பதிவு செய்தேன். அதில் ‘பதிவு செய்யத் தெரியாதவர்கள் அல்லது பதிவு செய்வதில் பிரச்சினை இருக்கிறது என்பவர்கள் மட்டும் மின்னஞ்சல் முகவரியை உள்பெட்டிக்கு செய்தியாக அனுப்புங்கள்’’ என சொல்லி இருந்தேன். 

ஆனால், என்னுடைய தொடர் வழிகாட்டுதலில் ஒருவர் மட்டுமே பதிவு செய்துக் கொள்ள முடிந்ததே தவிர, மற்றவர்கள் எல்லாம் அவரவர்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து தரக்கோரி பின்னூட்டமாக கொடுத்து விட்டனர்.  

இப்படி கொடுத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 49 பேர். ஆனால், நான் நினைத்ததோ, இரண்டு மூன்று பேர் மட்டுந்தான். இதில் பலருக்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியில் சிறிய எழுத்து, பெரிய எழுத்து ஆகியவற்றை கூட சரியாக பதிவிடத் தெரியவில்லை என்பது கொடுமை.

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்ய சிரமப்படுகிறார்கள் என்றால், இவர்களுக்கெல்லாம் செய்துதர நான் எவ்வளவு சிரமப்பட வேண்டும்? என்ற சுய சிந்தனை இல்லாமல் போனதேன்?? என்ற இயல்பான கேள்வியை தவிர்க்க முடியவில்லை.  

ஆனாலும், ஒவ்வொன்றாக சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்களுடைய மின்னஞ்சலை கொடுத்து பதிவு செய்தேன்.  ஆனால், இதற்கு அடுத்ததாக அவரவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாததால், அப்படியே விட்டு விட்டார்கள் போலும்! 

எனவேதான், இதனை பதிவு செய்வது எப்படி என்பது பற்றி அடிப்படையில் இருந்து விவரிக்கும் இந்தப் பதிவை பலருக்கும் பயன்படும் என்ற வகையில் பதிவு செய்கிறேன்.  

இதேபோலவே, நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் தங்களின் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து விட்டால் பதிவிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், அவரவர்களது மின்னஞ்சலுக்கே வந்து விடும் என்பதும், ஓய்வு நேரத்தில் பொறுமையாக படித்துக் கொள்ளலாம், சேமித்தும் வைத்துக் கொள்ளலாம் என்பதும் தெரியவில்லை. இம்மின்னஞ்சலை யாருக்கேனும் அனுப்ப விரும்பினாலும் அனுப்பலாம்.

எனவே நீதியைத்தேடி... பதிவுகளைப் பெற விரும்புவோர் முதலில் நீதியைத்தேடி... தளத்தில் இந்த முகப்புப் பக்கத்திற்கோ அல்லது வேறு ஏதோவொரு பக்கத்திற்கோ செல்க.  


அங்கு மேலே என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கும் இடத்தில், உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து, Submit என்பதை அழுத்தினால், கீழே கண்டபடி ஒரு சிறியதும், புதியதுமான பக்கம் ஒன்று திறக்கும்.


இதில் நீங்கள் இயந்திரம் இல்லை; மனிதர்தான் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் I'm not a robot என்ற பகுதியில் சொடுக்கினால் டிக் மார்க் விழும். இதன் பிறகு இதற்கும் கீழேயுள்ள, "Complete Subscription Request" என்பதை அழுத்தினால் கீழேயுள்ளபடி செய்தி ஒன்று தோன்றும்.


இதில் "Close Window" என்பதை சொடுக்கினால், இந்தத்திரை மூடிக்கொள்ளும். இதன் பின் உங்களது மின்னஞ்சலை திறக்க வேண்டும். அதில் கீழே உள்ளபடியான செய்தி ஒன்று வந்திருக்கும்.


இதில் கட்டமிட்டு காட்டப்பட்டு உள்ளபடி ஒரு இணையப் பக்க முகவரி இணைப்பு இருக்கும். அதனை சொடுக்கினால் கீழேகண்டபடியான உறுதிச் செய்தி கிடைக்கும்.


இந்தச் செய்தியின் மூலம், நீங்கள் நீதியைத்தேடி... தளத்தில் உறுப்பினராகி விட்டீர்கள். ஆகையால், இந்த நேரத்தில் இருந்து, பதிவிடப்படும் எதுவும் உங்களுடைய மின்னஞ்சலுக்கு தானாகவே வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இதனை மேலும் உறுதி செய்து கொள்ள விரும்பினால், மீண்டும் நீதியைத்தேடி... தளத்தின் ஏதோவொரு பக்கத்தை திறந்தால், நீங்கள் முதலில் மின்னஞ்சல் முகவரியை பதிவிட்ட பகுதியின் கீழ், உங்களுடைய மின்னஞ்சலுக்கு என்று நீங்கள் வைத்துள்ள முகப்புப் படம் முதல் நபராக தோன்றும்.

உங்களுக்கு முன்பாக சேர்ந்தவர்கள் என அடுத்தடுத்து பதினான்கு பேரின் படம் மட்டுமே வெளியில் தெரியும். மற்றவர்களின் படம் மறைந்து விடும்.

மேலும் உறுதி செய்ய விரும்பினால், ஏற்கெனவே சேர்ந்து உள்ளவர்களின் படங்களுக்கு கீழே உள்ள "Follow"  என்பதை அழுத்தினாலும், உங்களது பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதை தெரிவிக்கும். அவ்வளவே!

இது தகவல் தொழில் நுட்ப காலம் என்பதால், எதையும் உலாப்பேசியிலேயே செய்யலாம் என நினைக்கிறார்கள். உலாப்பேசியில் இதனை சரியாக செய்ய முடியுமா என்பதை நான் சோதிக்கவில்லை. இதனை கணினி அல்லது மடிக்கணினி வழியாக எளிதில் செய்ய முடியும்.

மின்னஞ்சல் மூலம் பதிவுகள் வராமல் தடுக்க, நீதியைத்தேடி... தளத்தில் இருந்து உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் ஒவ்வொரு மின்னஞ்சலின் இறுதியில் வரும் "To stop receiving these emails, you may unsubscribe now" என்பதை சொடுக்கி வெளியேறி விடலாம்.

முக்கிய குறிப்பு: இது நீதியைத்தேடி... தளத்துக்கு மட்டுமல்ல; இப்படி வேறு எந்தவொரு இணையப் பக்கத்தில் இருந்து பதிவுகளைப் பெற விரும்பினாலும், இதுதான் வழிமுறை. பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

பிற்சேர்க்கை நாள் 21-05-2018 

இவ்வளவு விளக்கமாக எழுதிய பின்னருங்கூட, ஓரிருவரைத் தவிர பலரால் தங்களின் மின்னஞ்சலை பதிவு செய்துக் கொள்ள முடியவில்லை என்பதை அறிந்தேன். மேலும், இருவர் தங்களின் மின்னஞ்சல் முகவரியை நானே சேர்க்க வேண்டும் என்பதுபோல, இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் பதிவு செய்திருப்பதையும் பார்க்கலாம்.

எனவே, வழக்கம் போலவே எனது ஆராய்ச்சி புத்தியானது வேறு எளிய வழி எதுவும் இருக்கிறதா என ஆராயத் தொடங்கியதில், கை மேல் பலனும் கிடைத்தது.

ஆமாம், இதற்கு முன்பாக சொன்ன எதையுமே செய்யாமல், ஏற்கெனவே சேர்ந்து உள்ளவர்களின் படங்களுக்கு கீழே உள்ள "Follow"  என்பதை அழுத்தினால் கீழேயுள்ள படத்தில் உள்ளபடி தகவல் கிடைக்கிறது.


இதில் "Follow" என்பதை அழுத்தினால் நம்முடைய மின்னஞ்சலை சேர்த்து விடுகிறது. சேர்த்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்கிறது. இதெல்லாம், சொந்த கணினியில் செய்தது என்பது நினைவிருக்கட்டும். நீங்களும் செய்து பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)