அரசியல் வியாதிகள் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகளை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடக்கும்போது மட்டும், கட்சித்தாவல் தடைச் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஏற்பட்ட இழுபறியை அடுத்து இவ்விசயம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.
ஏனெனில், பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி ஏற்படும்போது தன் கட்சிப் பிரதிநிதிகள் கட்சித் தாவலில் ஈடுபட மாட்டார்கள் என்ற நம்பிக்கை எந்தவொரு கட்சிக்கும் இல்லை.
ஆகையால் தங்களது பிரதிநிதிகள் பேரம் பேசப்படுகிறார்கள் என்று அவர்களின் தலைவர்களே வெட்கமில்லாமல் சொல்கிறார்கள்.
இதற்கு ஒரே தீர்வாக மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், எந்தவொரு காரணத்துக்காகவும் கட்சித் தாவலில் ஈடுபட முடியாது.
அப்படி ஈடுபட்டால், மக்கள் பிரதிநிதித்துவமே இரத்தாகி விடும் என்பதோடு, வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரிதிநிதியாக போட்டியிட முடியாது என்ற சட்டத்தை கொண்டு வந்தாலே போதுமானது.
ஆனால், இதற்கு எந்த அரசியல் வியாதியும், தங்களின் சுயநலத்துக்காக ஒத்துவரவே மாட்டார்கள். ஆகையால், சட்டமாகாமல் சங்கடமாகத்தான் இருக்கும்.
இதுதவிர மகத்தான மக்களாட்சி மலர...! என்னென்ன செய்ய வேண்டும் என்ற கட்டுரையில் சொல்லியுள்ள கருத்துக்களும் சட்டமாக நடைமுறைக்கு வரவேண்டும். அப்போதுதான் மக்களாட்சியைப் பற்றி சிந்திக்கவே முடியும். பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment