No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, May 14, 2018

நூல்: ஆரோக்கியமே ஆனந்தம்மாமிசந்தின்னும் மனிதனும் தன்இனமே யென
எண்ணுமாம் பிணந்தின்னி கழுகு

என்று எனது பாணியில் நியாக் கு(ற, ர)ளாக சொல்வதைத் தவிர, அசைவ உணவை உண்பது குறித்து வேறு எதுவுமே சொல்லத் தேவையில்லை. 


ஒரு சட்ட ஆராய்ச்சியாளனாக பலரின் திறனை கண்டறிந்து அவர்களை அதற்கேற்ற வகையில் செல்ல அறிவுறுத்தி உள்ளேன். இந்த வகையில், 2009 ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகமான இரதியையும் இப்படியொரு வழிகாட்டு நூலையெழுத அறிவுறுத்தியதை அடுத்து எழுதப்பட்டு, என்னால் பூர்த்தி செய்யப்பட்டது.  

இச்சிறு வழிகாட்டி கையேட்டை முதலில் 2010 ஆம் ஆண்டில் நன்கொடை ரூ 20 க்கு பொதுவுடைமையாக வெளியிட்டோம். அதன் பிறகு, 2012 முதல் மதுரை காந்தி மியூஸிய வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம் சில கூடுதல் செய்திகளுடன் வெளியிட்டு நல்ல முறையில் விற்பனை செய்து வருகிறது. 

இந்த வகையில் இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளும், பொதுவுடைமை அடிப்படையில் நாம் வெளியிட்ட நோக்கமும் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சியே!

ஆனால், இரதியின் உரையில் பொதுவுடைமை என கூடுதலாக சொல்லப்பட்டு இருந்தாலும் வெளியீட்டாளர் சொல்ல வேண்டிய இடத்தில் உரிமைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பதோடு நாம் வெளியிட்ட தகவலும் சொல்லப்பட வில்லை. 

ஆகையால் ‘இதனை நாமே முதலில் பொதுவுடைமை அடிப்படையில் வெளியிட்டோம்’ என்பது (தெ, பு)ரியாமல், அவர்களுடையதை எடுத்து கூட்டிக்குறைத்து நாம் வெளியிட்டு இருக்கிறோம் என்று யாரும் தவறாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே இதனைச் சொல்ல வேண்டியதாயிற்று! 

இந்த நூலுக்கான அர்ப்பணிப்பு உரையில், ‘மரங்களை அழித்துத்தான் காகிதத்தை உற்பத்தி செய்கிறார்கள் என்பதற்காக, நூல்களை எழுதாமல் வாழ்ந்த மு. இராம கிருஷ்ணன் அவர்களுக்கு’ என்று இரதி சொன்னது தவறு. 

ஆமாம், 01-01-1901 அன்று பிறந்து விடுதலைப் போரில் பல்லாண்டு காலம் சிறைத்தவ வாழ்வை ஏற்றத் திரு. ம.கி. பாண்டுரங்கம் என்பவர் இயற்கை உணவு குறித்து ஆராய்ந்து "Man's Food Unveiled" என்றத் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, அவரே தமிழில் சொல்ல அதனை தமிழில் செம்மைப்பட எழுதியவர் திரு.மு. இராமகிருஷ்ணன் அவர்களே என்பது எனக்கு 2017 ஆம் ஆண்டில்தான் தெரிந்தது. 

ஆம், ‘எது மனிதனின் உணவு?’ என்றத் தலைப்பில் மூன்று நூல்களாக வெளியிட்டு உள்ளார்கள். இவை நான் காணவும் கிடைத்தன. முதல் பகுதியில் மு. இராம கிருஷ்ணன் ‘இயற்கை இனிய வாழ்வின் இயக்கம்’ என்றத் தலைப்பில் தனது உரையை எழுதியுள்ளார். 

இதில், ‘தங்களின் ஆங்கில நூலைத் தமிழ்ப்படுத்தி தமிழக மக்களுக்கு வழங்க வேண்டுமென வேண்டினேன். அதற்கு இசைந்தார்கள். அவர்கள் மொழி பெயர்த்துக் கூற இதனைச் செம்மையாகத் தமிழாக்கம் செய்யும் பேறு பெற்றேன்’ என்று சொல்லி இருப்பதன் மூலமே மு. இராமகிருஷ்ணனே தமிழில் மொழியாக்கம் செய்து உள்ளார் என்பதும், இவர் பாண்டுரங்கம் அவர்கள் சென்னையில் நடத்தி வந்த கன்யா குருகுலப் பள்ளியில் தமிழாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் நூலுக்கு திரு.வி.க மற்றும் இதே போன்றதொரு நூலை எழுதியதாக சொல்லியுள்ள தமிழக முன்னாள் முதல மைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்களும் அணிந்துரை எழுதி உள்ளனர். மற்ற இரு நூல்களிலும் இம்மூவரது உரைகள் எதுவுமே இல்லை, ஏனோ?  

பொதுவாக ஒரு நூலை மொழியாக்கம் செய்பவரின் பெயரும் ஆசிரியரின் பெயரோடு இடம்பெற வேண்டும். ஆனால், இம்மூன்று நூல்களிலும் மூல ஆசிரியரின் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. 

மேலும் முதல் நூல் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது என்ற விபரங்கூட இல்லை. ஆனால், இந்நூலுக்கு பத்திரிகைகள் எழுதிய மதிப்புரையில் இருந்து 1980 இல் வெளியிட்டு இருக்க வேண்டுமென நம்புகிறேன். இரண்டு மற்றும் மூன்றாவது நூல்கள் முறையே ஏப்ரல் 1984 மற்றும் ஜீன் 1984 இல் வெளிவந்து உள்ளன. 

காப்புரிமை பற்றி எதுவுமே குறிப்பிடப்படாத பெரும் மதிப்பு மிக்க இம்மூன்று நூல்களையும் சுமார் முப்பது ஆண்டுகளாக யாருமே மறுபதிப்பு செய்யவில்லை என்பது கொடுமை. ஆனால், அவர்களோ இதனைப் பின்பற்றுபவர்களால் இந்நூல் இந்தி போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற தங்களின் நம்பிக்கையை 3 வது நூலின் இறுதிப் பகுதியில் பதிவு செய்துள்ளார்கள்.  

அந்த அளவிற்கு ஒவ்வொன்றையும் ஆராய்ந்தும், அதன்படி வாழ்ந்தும் அனுபவத்தை எழுதி இருக்கிறார்கள் என்பதை தவிர வேறெதையும் இங்கு சொல்லி மாளாது. 

ஆமாம், மொத்தம் சுமார் 550 பக்கங்களுக்கு மேலுள்ள இம்மூன்று நூல்களைப் பற்றியும் இந்த உரையில் எப்படி என்னால் உரைத்திட முடியும்? 

ஆமாம், இன்றைய தமிழகத்தில் இயற்கை வாழ்வியல் குறித்து பேசும் அல்ல அல்ல பேசி பிழைத்துக் கொண்டு இருக்கும் மு. இராமகிருஷ்ணனின் தம்பி மு. வ. அப்பன் மற்றும் மகன் நல்வாழ்வு உள்ளிட்ட பெரும்பாழானோ ருக்கு, மு. இராமகிருஷ்ணனும் அவரெழுதிய இம்மூன்று நூல்களுமே வழிகாட்டி என்பது சொல்லித் தெரிய வேண்டியது அல்ல. 

ஆனால், அவரவர்களும் எழுதி உள்ள நூல்களில்கூட, இந்நூலைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் பட்டும்படாமலும், தொட்டுந் தொடாமலும் சொல்லி இருக்கிறார்கள். இவர்களது நூல்கள் ஒருசில வருடங்களுக்கு ஒரு பதிப்பு என்ற வகையில் மிக குறுகிய காலத்தில் பத்துப் பதினைக்கும் மேற்பட்ட பதிப்புகளாக வெளிவந்துள்ளன.  

முன்னோர்களின் நூல்களை எல்லாம் மறு பதிப்பாக வெளியிட்டால் நம் பிழைப்பு நாறிவிடும் என்று அஞ்சும் நிலை ஒருபக்கம் என்றால், மறுபுறமோ நானும் நூலெழுதி இருக்கிறேன் என்று பெருமைக்கு பீற்றிக் கொள்ள வேண்டுமே!

இதற்காக, பத்துப் பக்க(காகித)த்தை கூட அச்சடித்து நூலென சொல்லிக் கொள்கிறார்களே ஒழிய, இது போன்ற மகத்துவம் நிறைந்த நூல்களை வெளிக்கொண்டு வருவதில்லை. இது நம்மை நம்பி அரிய பொக்கிஷங்களை விட்டுச் சென்ற நம் முன்னோர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். இதனை பச்சையாகவே சாப்பிடுங்கள் என்று ஊருக்கு உபதேசம் செய்பவர்களே செய்யலாமா?

ஆமாம், இப்படி எந்தவொரு உண்மைகளை மறைக்க முயற்சிக்கும்போது, அவை மீண்டும் வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே எப்படியாவது என் கண்களில் படுகிறது போலும். எனவே, இதன் மூலம் வேறுவழியில் மறு(ம, ப) திப்பாக வெளி வருவதற்கான நிலையை காலங்கனிந்து உருவாக்கட்டும் என்று கருதி இதற்கான ஏற்பாடுகளை 18-04-2018 அன்று முன்னெடுத்து பேசினேன். 

அடுத்தநாளே இதன் மறு(ம, ப)திப்பு நூல் வெளிவந்து இருக்கு என அன்பர் ஒருவர் கொடுத்தார். 

ஆமாம், நான் ஏற்கெனவே சொன்னது போன்று, சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து இந்த வெளியீடு 2013 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாகவும், மூன்று நூல்களும் சேர்த்து ஒரே நூலாகவும், ஆயிரம் பிரதிகள்  வெளியிடப்பட்டு இதுவே இன்றுவரை கி(டை, ட)க்கிறது.

இதனை தியாகி ம. கி. பாண்டுரங்கம் அவர்களின் மகன் வழி தலைப்பெயர்த்தி வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால், ‘தாத்தா சொத்து தனக்கே’ என இந்நூலின் பதிப்புரிமையை உரிமை கொண்டாடி அச்சிட்டு உள்ளார். தாத்தாவே கொண்டாடாத உரிமையை, பெயர்த்தி நிச்சயமாக கொண்டாட முடியாது. ஆகையால், இது சட்டப்படி செல்லாது. மக்களிடம் கொண்டு செல்ல விரும்பும் எவரும் வெளியிடலாம்!     

மேலும், நான் முன்பே சொன்னதுபோல அவர்களே வெளியிட்ட முதல் பதிப்பு நூலில், பதிப்பு உரிமைகள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படாத நிலையில் மற்றும் பிற மொழிகளிலும் மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்து இருப்பதன் மூலமும் ‘தனக்கே பதிப்புரிமை என்பது, இந்நூலைப் பரப்பும் செயலல்ல; பாழ்ப்படுத்தும் செயலே!’ என்பது அச்சடித்த ஆயிரம் பிரதிகளே ஐந்தாண்டுகளாக கி(ட, டை)ப்பதற்கு ஆதாரம்!

மேலும் முதற்பதிப்பு 1980 - 1984 என்று சரியாக குறிப்பிடுவதற்கு பதிலாக 1984 என தவறாக அச்சிட்டு உள்ளார். 1984 இல் வெளியிட்ட நூலுக்கு, எப்படி 1980 - 1981 ஆம் ஆண்டுகளில் நாளிதழ்கள் மதிப்புரை எழுத முடியும் என்பதை, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடும் பெயர்த்தி யோசிக்கவில்லை போலும்!

பெயர்த்தியின் பதிப்புரையில் இருந்து, தாத்தா இந்நூலை 1939 ஆம் ஆண்டுகளிலேயே இயற்றிவிட்டது போலவும், சுதந்திரப் போராட்ட சிறையில் இருந்தபோது இயற்றியது போலவும், மனித உணவின் விளக்கம் என்ற நூலையும் எழுதி உள்ளார் என்பது போலவும், 85 வயது வரை வாழ்ந்துள்ளார் என்பது போலவும் நாமே அனுமானிக்க வேண்டியுள்ளது. 

தாத்தா சொத்து தனக்கே என்று கூறும் பெயர்த்தி அவரைப்பற்றிய முக்கியச் சங்கதிகளை எல்லாம் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரிய வேண்டாமா?

தலைப் பெயர்த்தியான இவரும், இவரது தந்தையும், இவரது குழந்தைகளும், தாத்தாவின் கொள்கைக்கு எதிரான ஆங்கில வழி மறுத்துவர்கள் என தெரிகிறது. இவரது தாயின் நினைவாக தொடங்கப்பட்டு உள்ள அன்னை நீலாஞ்சனி அறக்கட்டளை, வசந்தா மருத்துவமனை, வாணியர் தெரு, திருவண்ணாமலை - 606601 இன் மூலம் இந்த நூலை ரூ 300 விலையில் வெளியிட்டு உள்ளார்கள்.

இவ்வளவையும் ஆராய்ந்து சொல்வதற்கு காரணமே ‘எது மனிதனின் உணவு?’ என்ற இந்த நூலே உங்களுக்கு உள்ள அனைத்து சந்தேகங்களையும் போக்கி மிகுந்தப் பயனை அளிக்கும் என நம்புகிறேன். ஆரோக்கியமே ஆனந்தம் என்ற இச்சிறு நூல் அதற்கான வழியைக் (கா, கூ)ட்டும்.

‘இயற்கை உணவு உண்பவர்களுக்கு அவ்வளவாக வக்கிரபுத்தி இருக்காது’ என்பார்கள். ஆனால், இந்த உரையில் சொல்லப்பட்டு உள்ளபடி, ‘ஆரம்பம் முதல் எல்லாமே எதிர்மறையாக இருக்க காரணம் ஊருக்கே உபதேசம் செய்பவர்கள்’ என்றே கருத வேண்டியுள்ளது.

இவர்களுக்கே இவ்வளவு வக்கிரம் என்றால், சமைத்த சைவ அசைவ உணவு உண்பவர்கள் வக்கிரத்தில் எவ்வளவு உக்கிரமாக இருப்பார்கள் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
அன்புடன் 
வாரண்ட் பாலா
          20 ஏப்ரல் 2018

இது திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள இரண்டாம் பதிப்பின் உணர்வுரை!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

1 comment:

  1. How to get a copy of ‘எது மனிதனின் உணவு?’ book , sir?

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)