No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, May 13, 2018

நூல்: மாவட்ட நிர்வாக நீதிபதி என்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்
எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது. 

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும். காரணம், பயம் பற்றிக் கொண்டதே!

எனவே நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும். சில எலிகள் என்னை விட்டுவிடு என கையெடுத்து கூட கும்பிடும். எளிதில் விடவா பொறி வைத்துப் பிடித்தார்கள்? இதற்கு வேலை மெனக்கட்டு பொறி வைக்க வேண்டியது இல்லையே!

ஆகையால், என்னென்ன பாடுபடுத்தனுமோ அப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தி இறுதியில் ஏதோவொரு வகையில் உயிரை எடுத்து விடுவார்கள். 

இது நாசம் செய்யும் எலியாக இருந்தாலும், தந்திர நரியாக இருந்தாலும், பலம் வாய்ந்த புலியாகவே இருந்தாலும் பொறியில் சிக்கினால், எப்படி வெளி வருவது என்பதில் எல்லோருடைய நிலைமையும் இதுதான்!

இதுதான் சட்டப் பிரச்சினை என்ற சட்டப் பொறிக்குள் சிக்கும் மனிதர்களின் நிலையும் என்ப தால், சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இருந்தால், சிக்குவதற்காக திட்டமிட்டு வைக்கப்பட்ட எப்பொறி யிலும் அகப்படாமல் தப்பி விடலாம்; அப்படியே அகப் பட்டாலும், எளிதில் வெளிவந்து விடலாம்!

ஆமாம், இது எலியை முன்னிலைப்படுத்தி உங்க ளுக்காக சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா சொல்லும் எளிய உவமை!!

எனவேதான் சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதி, அவரே மிகப்பரந்த மனதோடு பொதுவுடைமை என அறிவித்து உள்ள ஏழு நூல்களும் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு கேர் சொசைட்டியால் வெளியிடப் பட்டு தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் உள்ள அனைத்துப் பொது நூலகங்களுக்கும் நன்கொடையாக கொடுக்கப்பட்டு உள்ளன. 

எனவே, உங்களது பகுதி நூலகத்தில் படித்துப் பயன் பெறுங்கள். தனிப்பட்ட முறையில் தேவைப்பட் டால், உரிய நன்கொடை செலுத்தி எங்களிடம் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இதுபோலவே, அவர் இன்னும் பல நூல்களை எழுத, நாங்கள் வெளியிட உள்ளோம்.  

இப்படி சரியான சட்ட விழிப்பறிவுணர்வு இருந் தால், நீதிமன்றத்துக்கே கூட சென்று நம் நியாயத்தைப் பெறுவது எளிதுதான் என்றாலும், எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டுமென்ற அவல நிலையை, அடிப்படை சட்ட அறிவில்லாத அரசூழியர்களும், பொய்யர்களும் தங்களின் சுயநலனுக்காக உருவாக்கி விட்டனர். 

இதனை தகர்த்து, நமக்கான நியாயத்தை அரசிடமே பெறவேண்டும். இதற்கு அரசூழியர்களின் சட்டக் கடமை கள் என்னவென்பதைப் பற்றி அறிய வேண்டும். அப்போது தான் நாம், நமக்கான ஊழியர்களை வேலை வாங்க முடியும். இல்லையேல், ஏய்த்து விடுவார்கள்; அல்ல அல்ல அவர்கள் ஏய்த்துப் பிழைக்க நட்டம் நமக்கே என்பதே இன்றைய நிலை. 

நீதித்துறையில் எப்படி நிதிபதிகள் இருக்கிறார் களோ அப்படியே அரசு நிர்வாகத்திலும் இருக்கிறார் கள். இவர்கள் சட்டப்படி நிர்வாக நிதிபதிகள் ஆவர். முதலில் இவர்களே நமக்குரிய உரிமைகளை செய்து தர வேண்டியவர்கள். 

ஆகையால் (நீங், மக்)கள் முதலில் இவர்களைத் தான் சட்டப்படி அணுக வேண்டும். அவர்கள் சட்டப் படி தங்களின் கடமையைச் செய்து உங்களது உரிமையை தராத போது மீட்டுத்தராத போது அல்லது பிரச்சினையைத் தீர்த்துத் தராதபோது, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு அவ்வூழியர்களிடம் இருந்து நிவாரணம் கோருவதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அவ்வூழியர் கள் சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார்கள். 

ஆனால், இப்படிச் செய்ய ஆரம்பித்தால், மக்களுக்கு பிரச்சினையே இல்லாமல் போய் விடுமே. ஆகையால், சட்ட விரோதத் தொழில் செய்யும் பொய்யர்கள் உட்பட பலரும் மக்களை எப்பொழுதும் பிரச்சினையிலேயே வைத்திருந்து பிழைக்க முடியாமல் போய் விடும் என்பதற்காக செய்வதில்லை. 

இவர்களைப் போலவே மக்கள் தங்களுக்கு உள்ளேயே மாறிமாறி சண்டைப்போட்டுக் கொண்டி ருந்தால், ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண் டாட்டம் என்பதுபோல, உங்களால் உங்களின் ஊழியர் களுக்கு கொண்டாட்டம்; உங்களுக்கோ என்றும் திண்டாட்டந்தான்’ என்பதை, இனியொரு போதும் மறந்து விடாதீர்கள். 

எனவே இவர்களை எப்படி வேலை வாங்குவது, வேலை செய்ய மறுக்கும்போது எப்படி வழக்குக்கு இழுப்பது என்று பற்றி திரு. வாரண்ட் பாலா அவர்கள் எழுதியுள்ள ‘நீதியைத்தேடி...’ நூல்களிலும் குறிப்பாக ‘மநு வரையுங்கலை!’ நூலிலும் விரிவாக அறிந்து அதன்படி செயல்படுங்கள். 

மிகமிக முக்கியமாக இவ்வூழியர்களுக்கான ஊழியப் பெயர்களை ‘மநு வரையுங்கலை!’ நூலில் முன் மொழிந்து உள்ளவாறே பயன்படுத்துங்கள். 

மேலும் உங்களது மாவட்டத்தில் எதற்காக யாரை அணுக வேண்டும், அவர்களின் அலுவலக தொடர்புகள் உள்ளிட்டவற்றை பெற மாவட்ட தலைமை ஊழியரின் அலுவலகத்தில் இதற்கென்றே பிரத்தியேக ஊழியராக உள்ள மக்கள் தொடர்பு ஊழியரை (பிஆர்ஓ) அணுகுங்கள்.

இவர்களின் தொடர்பு எண்கள் தமிழ்நாடு அரசின் இணையதளப் பக்கங்களில் கிடைத்தாலுங் கூட, இணையதளத்தை பார்க்க முடியாத சாதாரண மக்களை மனதில் கொண்டு இந்நூலின் இறுதியில் அனைத்து மாவட்ட மக்கள் தொடர்பு ஊழியர்களின் தொடர்பு எண்களை, அரசின் இணையத்தில் இருந்து எடுத்து, தற்போதுள்ள ஊழியர்களின் பெயரை மட்டும் நீக்கிவிட்டு அப்படியே கொடுத்து உள்ளோம். 

ஏனெனில், இந்த ஊழியர்கள் பணி மாறுதலைப் பெற்றாலும் அல்லது ஓய்வே பெற்றாலுங்கூட, அடுத்தடுத்து வரும் ஊழியர்களிடமும் இந்த தொடர்பு எண்களே நிரந்தரமாக இருக்கும் என நம்பலாம்.  

இதுபோலவே காவல்துறை இயக்குநர், தொழிலா ளர் நலன், போக்குவரத்து போன்ற மற்ற சில முக்கியத் துறைகளுக்குமான மக்கள் தொடர்பு ஊழியர்களின் தொடர்பு எண்களையும் கொடுத்து இருக்கிறோம். தேவைப்பட்டால், பிரச்சினையை சந்திக்கும் இடத்தில் இருந்தே அவர்களையும் தொடர்பு கொள்ளுங்கள். 

அதாவது காவல் நிலையத்துக்கு போகும்போது அல்லது அரசு போக்குவரத்துக் கலகப் பேருந்தில் பயணி க்கும் போது எதுவும் பிரச்சினை என்றால், அங்கிருந்த படியே தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.

அரசூழியர்களுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், கொடுக்காமலேயே காரியத்தை சாதிக்க ‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’ நூலில் சொல்லியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.


எது எப்படி இருப்பினும், உங்களின் பிரச்சினை யைத் தீர்க்க வேண்டிய உள்ளூர் கிராம நிர்வாக ஊழியர் (விஏஓ) முதல் உங்களின் மாவட்ட தலைமை ஊழியர் (கலெக்டர்) வரை அவர்களுக்குள்ள கடமைப் பொறுப்புகள் எல்லாம் அவரவர்களுக்கே தெரிவது இல்லை என்ற நிலையில் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவர்களை வேலை வாங்க எளிதாக இருக்கும் அல்லவா!  

எனவேதான், இவ்வூழியர்கள் எப்படி தோன்றி னார்கள் என்ற வரலாற்றில் இருந்து சொல்லும் இந்த நூலை அவர்கள் எந்த நோக்கத்திற்காக வெளியிட்டா ர்களோ அதே பொதுநலன் கருதி நல்லெண்ணத் தோடும், காப்புரிமைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை என்பதாலும் உள்ளதை உள்ளபடியே பொதுவுடைமையாக வெளியிடுகிறோம்.

ஏனெனில், இந்த நூலை வெளியிட்ட அறிவுச் சுடரகம் தற்போது இல்லையென தெரிகிறது. இதனை எழுதியவர்களும் இருக்கிறார்களா, இதன் திருத்திய பதிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளனவா என்பது உள்ளிட்ட எதுவுங்கூட தெரியவில்லை. தெரிந்தவர் கள் தக்க ஆதாரத்துடன் தெரிவித்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யலாம்.

இதுபோலவே முன்பு அரசே வெளியிட்டு, பின் வெளி யிடாமல் இருக்கிற கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நூல்களையும், திரு. வாரண்ட் பாலா அவர்களின் சட்ட ஆராய்ச்சி மேற்குறிப்புகளோடு உள்ளதை உள்ளபடியே வெளியிட உள்ளோம். 

இதற்கு தங்களால் இயன்ற ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கினால், அந்த நூல்களும்  விரைவில் வெளிவரும்.

இந்நூலுக்கான வெளியீட்டாளர் உரையில் இருந்து...

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)