ஆமாம், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் சமூக மற்றும் சட்டஞ் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.
ஆமாம், இது கூடவா தெரியாமல் இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் 14-05-2018 அன்று முகநூலில் ஒரு பதிவை பதிவு செய்தேன். அதில் ‘‘பதிவு செய்யத் தெரியாதவர்கள் அல்லது பதிவு செய்வதில் பிரச்சினை இருக்கிறது என்பவர்கள் மட்டும் மின்னஞ்சல் முகவரியை உள்பெட்டிக்கு செய்தியாக அனுப்புங்கள்’’ என சொல்லி இருந்தேன்.
ஆனால், என்னுடைய தொடர் வழிகாட்டுதலில் ஒருவர் மட்டுமே பதிவு செய்துக் கொள்ள முடிந்ததே தவிர, மற்றவர்கள் எல்லாம் அவரவர்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து தரக்கோரி பின்னூட்டமாக கொடுத்து விட்டனர்.
இப்படி கொடுத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 49 பேர். ஆனால், நான் நினைத்ததோ, இரண்டு மூன்று பேர் மட்டுந்தான். இதில் பலருக்கு தங்களுடைய மின்னஞ்சல் முகவரியில் சிறிய எழுத்து, பெரிய எழுத்து ஆகியவற்றை கூட சரியாக பதிவிடத் தெரியவில்லை என்பது கொடுமை.
இவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து பதிவு செய்ய சிரமப்படுகிறார்கள் என்றால், இவர்களுக்கெல்லாம் செய்துதர நான் எவ்வளவு சிரமப்பட வேண்டும்? என்ற சுய சிந்தனை இல்லாமல் போனதேன்?? என்ற இயல்பான கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும், ஒவ்வொன்றாக சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்களுடைய மின்னஞ்சலை கொடுத்து பதிவு செய்தேன். ஆனால், இதற்கு அடுத்ததாக அவரவர்களும் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாததால், அப்படியே விட்டு விட்டார்கள் போலும்!
எனவேதான், இதனை பதிவு செய்வது எப்படி என்பது பற்றி அடிப்படையில் இருந்து விவரிக்கும் இந்தப் பதிவை பலருக்கும் பயன்படும் என்ற வகையில் பதிவு செய்கிறேன்.
இதில் "Close Window" என்பதை சொடுக்கினால், இந்தத்திரை மூடிக்கொள்ளும். இதன் பின் உங்களது மின்னஞ்சலை திறக்க வேண்டும். அதில் கீழே உள்ளபடியான செய்தி ஒன்று வந்திருக்கும்.
இந்தச் செய்தியின் மூலம், நீங்கள் நீதியைத்தேடி... தளத்தில் உறுப்பினராகி விட்டீர்கள். ஆகையால், இந்த நேரத்தில் இருந்து, பதிவிடப்படும் எதுவும் உங்களுடைய மின்னஞ்சலுக்கு தானாகவே வந்து சேரும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதனை மேலும் உறுதி செய்து கொள்ள விரும்பினால், மீண்டும் நீதியைத்தேடி... தளத்தின் ஏதோவொரு பக்கத்தை திறந்தால், நீங்கள் முதலில் மின்னஞ்சல் முகவரியை பதிவிட்ட பகுதியின் கீழ், உங்களுடைய மின்னஞ்சலுக்கு என்று நீங்கள் வைத்துள்ள முகப்புப் படம் முதல் நபராக தோன்றும்.
உங்களுக்கு முன்பாக சேர்ந்தவர்கள் என அடுத்தடுத்து பதினான்கு பேரின் படம் மட்டுமே வெளியில் தெரியும். மற்றவர்களின் படம் மறைந்து விடும்.
மேலும் உறுதி செய்ய விரும்பினால், ஏற்கெனவே சேர்ந்து உள்ளவர்களின் படங்களுக்கு கீழே உள்ள "Follow" என்பதை அழுத்தினாலும், உங்களது பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதை தெரிவிக்கும். அவ்வளவே!
இது தகவல் தொழில் நுட்ப காலம் என்பதால், எதையும் உலாப்பேசியிலேயே செய்யலாம் என நினைக்கிறார்கள். உலாப்பேசியில் இதனை சரியாக செய்ய முடியுமா என்பதை நான் சோதிக்கவில்லை. இதனை கணினி அல்லது மடிக்கணினி வழியாக எளிதில் செய்ய முடியும்.
மின்னஞ்சல் மூலம் பதிவுகள் வராமல் தடுக்க, நீதியைத்தேடி... தளத்தில் இருந்து உங்களுடைய மின்னஞ்சலுக்கு வரும் ஒவ்வொரு மின்னஞ்சலின் இறுதியில் வரும் "To stop receiving these emails, you may unsubscribe now" என்பதை சொடுக்கி வெளியேறி விடலாம்.
முக்கிய குறிப்பு: இது நீதியைத்தேடி... தளத்துக்கு மட்டுமல்ல; இப்படி வேறு எந்தவொரு இணையப் பக்கத்தில் இருந்து பதிவுகளைப் பெற விரும்பினாலும், இதுதான் வழிமுறை. பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
பிற்சேர்க்கை நாள் 21-05-2018
இவ்வளவு விளக்கமாக எழுதிய பின்னருங்கூட, ஓரிருவரைத் தவிர பலரால் தங்களின் மின்னஞ்சலை பதிவு செய்துக் கொள்ள முடியவில்லை என்பதை அறிந்தேன். மேலும், இருவர் தங்களின் மின்னஞ்சல் முகவரியை நானே சேர்க்க வேண்டும் என்பதுபோல, இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் பதிவு செய்திருப்பதையும் பார்க்கலாம்.
எனவே, வழக்கம் போலவே எனது ஆராய்ச்சி புத்தியானது வேறு எளிய வழி எதுவும் இருக்கிறதா என ஆராயத் தொடங்கியதில், கை மேல் பலனும் கிடைத்தது.
ஆமாம், இதற்கு முன்பாக சொன்ன எதையுமே செய்யாமல், ஏற்கெனவே சேர்ந்து உள்ளவர்களின் படங்களுக்கு கீழே உள்ள "Follow" என்பதை அழுத்தினால் கீழேயுள்ள படத்தில் உள்ளபடி தகவல் கிடைக்கிறது.
இதில் "Follow" என்பதை அழுத்தினால் நம்முடைய மின்னஞ்சலை சேர்த்து விடுகிறது. சேர்த்தால் என்ன நடக்கும் என்பதையும் சொல்கிறது. இதெல்லாம், சொந்த கணினியில் செய்தது என்பது நினைவிருக்கட்டும். நீங்களும் செய்து பார்த்து விட்டு கருத்தை சொல்லுங்கள்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.