அந்துமணி அவர்களுக்கு வணக்கம்.
இன்றைய 18-03-2018 தினமலர் வாரமலரில் அடிப்படை கல்வியில் சட்டக்கல்வியை கொண்டு வருவது பற்றி சிந்தி்க்க வேண்டுமென சொல்லி இருந்தீர்கள்.
சமூகத்திற்கு சட்டக் கல்வியை போதிக்க வேண்டுமென கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சட்டங்களை ஆய்வு செய்து, எழு நூல்களையும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி உள்ளவன் என்ற முறையில், தங்களின் கருத்தை நானும் வரவேற்கிறேன்.
மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காத எழுதப் படிக்க தெரியாதவர்கள் கூட, கணக்கில் தெளிவாக இருப்பார்கள். இல்லையென்றால், பண விசயத்தில் ஏமாற்றி விடுவார்கள் அல்லவா?
இப்படி வேறெந்த பாடம் தெரியாவிட்டாலுங்கூட, தங்களின் சட்ட உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள கட்டாயம் சட்டந் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால், மக்கள் எல்லோருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு வந்து விட்டால், மக்களின் மீது அரசாங்கங்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாது. என்று சத்தியவான் காந்தியே எழுதி உள்ளார்.
ஆகையால், உலகில் உள்ள எந்தவொரு நாடும், தனது குடிமக்களுக்கு அடிப்படை கல்வியில் சட்டக்கல்வியை கொடுத்ததாக தெரியவில்லை.
எனவே, நியாயந்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம் என்றத் தத்துவத்தின் அடிப்படையில், நாமாகவே சட்டத்தைப் படித்து, நம் வாரிசுகளுக்கும் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டு. இதனை அச்சு ஊடகத்தில் இருக்கும் நீங்கள் எளிதாகச் செய்யலாம்.
உங்களுக்கு விரும்பமிருந்தால், நேரமிருக்கும்போது, நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வளம் வந்து பாருங்கள். சட்டங் குறித்த பல சங்கதிகள் புரியும். நன்றி!
இது தங்களின் சிறப்பு கவனத்திற்கு...
தங்களுக்கு கடிதம் எழுதிய முகமது மொய்தீன், ‘‘வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும், நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சட்டம் பற்றிய தெளிவான அறிவு உள்ளது’’ என எழுதியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.
இது சுத்தப் பொய். இதில், தங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர் போடும் கையெழுத்து எந்த சட்டத்தின் கீழ் வருகிறது? கட்சிக் காரருக்காக வாதாட தாக்கல் செய்யும் வக்காலத்து எந்த சட்டப் பிரிவின் கீழ் என கேட்டுப் பாருங்கள்.
அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்பது புரியும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment