No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, March 16, 2018

உதவி (செய்வ, கேட்ப)திலும் தேவை மிகுந்த எச்சரிக்கை!நியாயமாக வாழ நினைப்பவர்கள் சிக்கனமாகவும் இருப்பார்கள். ஆனால் எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. இதுவும் சாத்தியப்பட வேண்டும். 

ஐந்து கிமீ போக அரசுப் பேரூந்துக்கு காத்துக் கொண்டிருக்கும் போது, வந்து கை நீட்டி தர்மம் கேட்பார்கள். சரி ஒரு தேனீர் சாப்பிடட்டும் என நினைத்து, பத்து ரூபா கொடுத்தால், அடுத்து வரும் ஷேர் ஆட்டோவில் ஏறி அவர்கள் போவார்கள். 

இதுக்கு நாம போயிருக்கலாமே என்று எண்ணிக் கொண்டே, மீண்டும் காத்திருக்க தொடங்குவோம். 

உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அய்யா ஒரு ஃபோன் பேசனும் என்பார்கள். அந்த நம்பருக்கு போட்டு, இவரு பேர சொன்னா அப்படி யாரும் தெரியாது என்பார்கள். 

இதோடு விட்டால் பரவாயில்லை. ‘‘எவனோ எங்கிட்ட பேசனும்னு சொன்னா உடனே போன்போட்டு தருவியா நீ?’’ என இன்னும் கண்டகண்டபடி எல்லாம் ஏத்துவார்கள். 

அப்படி என்றால் என்ன அர்த்தம்? கேட்டவர் கையில் ஃபோனை கொடுத்தால், தூக்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். 

வெளியூரில் உள்ள குளத்தை கண்டதும் ஆனந்தக் குளியல் போடலாம் என நினைத்து, எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு குளிக்க ஆரம்பித்தால், அப்பாவியாய் வரும் சிறுவர்கள் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். 

அவர்களுக்கு நன்றாவே தெரியும் நீங்கள் வெளியூர், வெளிமாநிலக் காரர்கள் என்று. நீங்க ஜட்டியோட அவர்களை துரத்த முடியாது.

இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம். இதையெல்லாம் நீங்கள் நிச்சயம் சந்தித்து இருக்க வேண்டும்.

இதெல்லாம், அந்த நேரத்தில் நமக்கு கோப மூட்டினாலும் அடுத்த சில மணியிலோ, நாளிலோ அடங்கி விடும். ஆனால், சில சம்பவங்கள், நம் வாழ்க்கை அடங்கியப் பின்தான் அடங்கும். ஆகையால், வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட நேரிடும்.

உதவி ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டியதுதான். அதே நேரத்தில், யாருக்கு செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு செய்ய வேண்டும். 

இதனை பெற்றோர்கள் கடைப்பிடிப்பதோடு, தங்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளோடு வெளியூர்களுக்கு செல்லும்போது, இப்படிப்பட்ட அனுபவங்கள் எளிதில் கிடைக்கும். ஆகையால், குழந்தைகளுக்கு போதிப்பது மிகமிக எளிது. 


இதெல்லாம் சாதாரண சங்கதிகள். சட்ட சிக்கலுக்கு உரிய சங்கதியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், #பேட்டரி_வாங்கிக்_கொடுத்த_பேரறிவாளனின் சிறை வாழ்க்கையைச் சொல்லலாம். 

எச்சரிக்கை! எச்சரிக்கை!! 

ஆமாம், நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள், கடைசி வரை நம்மோடு நிப்பாங்க; கெட்ட காரியத்தை செய்யிறவங்க அவங்க  தப்பித்தால் போதும்னுதான் நினைப்பாங்க என்ற தத்துவப் பாடல் எப்போதும் நினைவில் நிற்கட்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)