No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, March 12, 2018

செல்லாத சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம்!2005 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த தறுதலைச் சட்டமாம், தகவல் பெறும் உரிமையைப் போலவே, அந்தாண்டே அமலுக்கு வந்த சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டமும், சமூகத்திற்கு கேடானதுதான். 

இப்படியொரு பயங்கரவாதச் சட்டம் இருப்பதும், இந்தச் சட்டம் நம்மூரிலேயே அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், அதில்தான் நாம் வேலை பார்க்கிறோம் என்பதும் யாருக்குமே தெரிவதில்லை.

ஆமாம், இந்திய சாசனம் உள்ளிட்ட மத்திய அரசின் எல்லா சட்டங்களிலும், ‘‘ஜம்மு காஷ்மீர்’’ நீங்களாக இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லப்பட்டு இருக்கும். இதையே பலர் சர்ச்சையாக பேசுவார்கள். 


ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் அமலில் உள்ள சில ஏக்கர் இடத்தில், வேறு எந்த சட்டமும் செல்லாது என சொல்லப்பட்டு இருக்கும். 

இதைப் பற்றி யாரும் பேசியதாக தெரியவில்லை. இப்படியொரு சட்டமும், அதன் சூட்சமும் தெரிந்தால்தானே பேசுவதற்கு?!

இப்படி, அரசமைப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களுக்கு உட்பட்டுதான் எந்தவொரு சட்டமும் இருக்க முடியும் என்ற நிலையில், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு எப்படி இருக்க முடியும். இப்படியொரு பயங்கரவாதச் சட்டம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருக்க வாய்ப்பே இல்லை. 

அதாவது கார்ப்பரேட்டுகள் தாங்கள் நினைக்கும் சட்ட விரோத செயல்கள் எதையும் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ள வசதியாக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதால், இதனை பண முதலைகள் உருவாக்கித் தந்த சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் என்றுதான் மிகச் சரியாக சொல்ல வேண்டும். 

இந்த சட்டத்தை விமர்சித்து, கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழில் மதிப்புரையும் எழுதி உள்ளேன்.

ஆமாம், அரசால் அத்தனை அத்தனை சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட (வீ, சூ)ழ்ச்சிக்கும் இதுவும் ஒரு காரணம் என்பது என் மேலோட்டமான பார்வை. 

ஆமாம், இந்த இடத்தில் பெரும்பாழும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுனவங்களே இயங்கும். 

இந்த சட்டமெல்லாம், இந்திய சாசனத்துக்கே எதிரானது என்பதால், ‘‘இந்த சட்டமே செல்லாது’’ என்பதைப்பற்றி இதழிலும், நூலிலும் எழுதி உள்ளேன்.

மேலும், இதுபோன்ற மண்டலங்களில் கிடைக்கும் எந்தவொரு வேலை வாய்ப்பையும் இளைஞர்களும், இளஞைகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இதுவே அவர்கள் சமூகத்திற்கு செய்யும் நன்றிக்கடன்.

சில ஆண்டுகளுக்கு முன் நாட்டுப்பற்றுள்ள அன்பர் ஒருவரின் மகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதைப்பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லி வேறிடத்தில் வேலை தேடிக் கொள்ளச் சொல்லுங்கள் என்றேன். 

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கூடாரம், இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான். இதில்தான் அவளுக்கும் வேலை கிடைத்தது.

ஆனால், அடுத்தவர்கள் விசயத்தில் அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும் என ஆயிரத்தெட்டு ஆலோசனைகளை சொல்பவர்கள், தனக்கு வரும் ஆலோசனைகளை ஏற்பதில்லை என்பதுபோல, இதையெல்லாம் நான் அவளிடம் சொல்ல இயலாது என்று சொல்லி விட்டார். 

அவரே சொல்லவில்லை என்றாலுங்கூட, என்னை அவளுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால், நீங்களே சொல்லுங்கள் என எனக்காவது ஒரு வாய்ப்பை கொடுத்து இருந்தால், இதைப்பற்றி விளக்கி அவளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்திருப்பேன். அவரே சொல்ல முடியாது என்று சொல்லி விட்டபின் நான் அவளிடம் சொல்வது சரியாக இருக்காது என விட்டு விட்டேன்.  

தொட்டதற்கு எல்லாம் பொதுநல வழக்கு போடும் பொறுக்கிகள் யாரும், இதற்கு வழக்கு போடவில்லை. கார்ப்பரேட்டுகள் காலி செய்து விடுவார்கள் என்ற பயம் போலும்! 

வழக்கம் போலவே, இதனை நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான உயர் மற்றும் உச்சநீதிமன்ற நிதிபதிகளும் கண்டு கொள்ளவே இல்லை!! இவர்களுக்குத்தான் அடிப்படை சட்ட அறிவே கிடையாதே; அப்புறம் எப்படி இதெல்லாம் தெரியும் என்கிறீர்களா?! 

இந்த நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய இருந்தது, அமையாமல் போய் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம்! 

இதற்காக இழந்த நிலத்தை மீட்டெடுக்க போராடுபவர்கள் இதிலுள்ள சட்ட சங்கதிகளை தெரிந்துக் கொண்டால், திரும்ப கைப்பற்ற ஏதுவாக இருக்கும். இதுபோன்ற திட்டத்துக்கு இனி வேறெங்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து சட்ட ரீதியாக போராடவும் உதவும். 

சேர்க்கை நாள் : 22-06-2018


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)