நேற்று இந்த ஒருதலைக் காதல் கொலைத் தகவலை கேட்டதுமே இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். அப்படியேத்தான் இருக்கிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக முகநூலின் ஒரு பதிவில், வசதி குறைந்தவர்கள் கூட தங்களது மகளை வசதியான தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.
காரணம், அவளே நல்ல வசதியான பையனாக தேடிக் கொள்வாள் என்பதே என்றும், இவர்களைப் போலவே அவனும், வசதியான பெண் என நினைத்தால் இவர்களின் வாழ்வு என்னாகும்? என்று கேள்வி எழுப்பி இருந்தேன்.
இதைகூட ஒரு முட்டாள் மிக கேவலமான உதாரணம் என சொல்லி இருந்தார். கேவலமானதை எடுத்துச் சொல்லும் போது, அது கேவலமானதாக தெரியாமல், உயர்வாகவா தெரியும். இல்ல, கேவலமாக இருக்கும் என்பதால், இப்படித்தான் இது நடக்கிறது என நான் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லாமல் விட்டு விட முடியுமா?!
பொறுப்பற்ற முறையில் பெண் பிள்கைளைப் பெற்ற பெற்றோர்கள், அவர்களின் தேவைகளை செய்ய முடியாமல் பணத்துக்கு தவிக்கின்றனர்.
ஆகையால், நமக்கு திருமண கஷ்டத்தை கொடுக்காமல் யாரையாவது காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்கிற அளவில் அவர்களை கண்டுங் காணாமல் விட்டு விடுகின்றனர்.
இதுபோன்ற தகாத செயல்களுக்கு மகளை ஊக்குவிக்கும் அம்மாக்கள், வீட்டில் மகளை அந்த இளைஞர்களோடு விளையாட விடும் அம்மாக்கள் என பல அசிங்கங்களை நானே பார்த்து இருக்கிறேன்.
இதுபோன்ற முடிவுக்கு வந்து விட்ட மனைவியை, ஒரு கணவனால், எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. கோபம் வந்தால் குடித்து விட்டு வந்து கத்தவோ, அடிக்கவோ முடியும்.
ஆமாம், ஆன்டிகள் உங்களை அவர்களுக்காகவும் பிடிப்பார்கள். அவர்களது மகளுக்காகவும் பிடிப்பார்கள்.
ஆமாம், இப்படி ஒரு இளைஞன் மட்டுமல்ல; வாரத்துக்கு ஒருவன் என ஒருவனைப் படித்துக் கொண்டு, அவனை நகை கடைக்கு அழைத்துச் சென்று பெரிய செலவில் ஏதையாவது வாங்கிக் கொண்டு, தப்பித்தால் போதும் என்று அவனே திரும்ப வராதபடி செய்துவிடுவது என பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அம்மாக்கள்.
இப்படிப்பட்ட பெண் பிள்ளைகளுக்கு மொபைலுக்கு பணம் போடுவதில் இருந்து, செலவுக்கு பாக்கெட் மணி என காதல் என்றப் போர்வையில் பல்வேறு விதத்தில் பணத்தைப் பறித்துக் கொண்டு, பின் அந்த இளைஞர்கள் பிடிக்கவில்லை என ஒதுங்கும் போதுதான், ஏமாற்றப்பட்ட விரக்கதியில் இதுபோன்ற ஒருதலைக் காதல் கொலைகளை இளைஞர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
ஒரு சட்ட ஆராய்ச்சியாளன் என்று மட்டும் இல்லாமல், சமூகத்தையும் ஆராய்பவன் என்ற அளவில் இதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
ஆமாம், சில ஆண்டுகளுக்கு முன் அமில வீச்சுக்கு ஆளான காரைக்கால் மென் பொறியாளர் வினோதினி கதையும் இப்படித்தான்!
வினோதினி விவகாரத்தில் பொது மக்கள் அனுப்பிய சுமார் ஒரு கோடி ரூபாய் யாருக்கும் பயனின்றி முடக்கப்பட்டு உள்ளது என்பது பலருக்கும், பணம் அனுப்பி உதவி செய்தவர்களுக்கும் தெரியாத கூடுதல் தகவல்.
இப்படி, நடந்த கொலைகள் எல்லாவற்றையும் இங்கு பட்டியல் போட்டு சொல்ல இயலாது என்பதால், இந்த இரண்டை மட்டும் சொல்லி இருக்கிறேன்.
இப்படி, நடந்த கொலைகள் எல்லாவற்றையும் இங்கு பட்டியல் போட்டு சொல்ல இயலாது என்பதால், இந்த இரண்டை மட்டும் சொல்லி இருக்கிறேன்.
எனவே, பொறுப்பற்ற பெற்றோர்கள் இதிலும் குறிப்பாக ‘‘மகளுக்கே மாமா வேலை பார்க்கும் அம்மாக்கள்’’ திருந்தாமல், இதுபோன்ற ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்கவே முடியாது.
ஆமாம், தங்களை விட அதிக அனுபவத்தில் உள்ள பெற்றோர்கள் (இ, எ)ப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை இளைஞர்கள் தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக ஒதுங்கி வாழ வேண்டுமே தவிர, ‘‘நம்மைப் பார்த்து சிரிப்பவள் எல்லாம் காதலிக்கிறாள்’’ என தவறாக நினைத்து, செலவு செய்துவிட்டு இறுதியில் சிறையில் வாழ்வை கழிக்கும் நிலைக்கு போகக் கூடாது.
சேர்க்கை நாள் 06-07-2018
சேர்க்கை நாள் 06-07-2018
இப்படி திட்டம்போட்டு குடும்பத்தோடு பணம் பறிக்கும் குடும்பக் கும்பல் பல இருக்கிறது.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment