பொதுவாக நீதிமன்றங்களில் ஒரேயொரு சாட்சிக் கூண்டுதான் இருக்கும்.
ஆனால், குற்றவியல் நீதிமன்றங்களில், நிதிபதிக்கு பக்கதில் ஒரு சாட்சிக்கூண்டு இருக்கும். எதிராக தொலைவில் ஒன்றும் இருக்கும்.
எதிராக தொலைவில் உள்ளதில்தான் எதிரிகள் (குற்றஞ் சாற்றப்பட்டவர்கள்) ஏறி நிற்க வைக்கப்படுவர். காரணம், ‘எதிரிகள் தங்களை தாக்கி விடலாம்’ என்ற நிதிபதிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் இருக்கும்.
இப்படியொரு நிலையை நிதிபதிகள் யோசித்ததே, அவர்கள் நீதிபதிகளாக இல்லை என்ற அபத்தந்தான்!
இப்படி இருந்தும், நீண்ட நாள்களாக விசாரணை என்றப் பெயரில் சிறையில் வைக்கப்படிருந்த ஒரு கைதி, ‘‘தன்னுடைய மலத்தை பொட்டலமாக எடுத்து வந்து, நிதிபதியின் மீது வீசவே, அது குறி தவறாது நிதிபதியின் மீது விழுந்ததோடு, சுற்றிலும் தெறித்து துர்நாற்றமடித்த சம்பவம்’’, கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுவையில் நடந்தது.
இந்தச் செய்தி பத்திரிகையிலும் வெளிவந்து நாடு முழுவதும் நாறியது. இதனால்தான் எனக்கும் தெரிந்தது.
இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்திலேயே, ‘‘பெண்கள் இருவர் செருப்பை கழற்றி நிதிபதிகள் மீது வீசி உள்ளனர்’’ என்பது பற்றி நூலில் சொல்லி உள்ளேன்.
ஒரு கைதி தன் மலத்தை வீசும் அளவிற்கு துணிந்தால், நிதிபதியால் எந்த அளவிற்கு தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது என கருதி இருப்பார்? என்பதை அவரிடத்தில் இருந்துதான் நாம் யோசிக்க வேண்டும்.
ஒரு கைதி தன் மலத்தை வீசும் அளவிற்கு துணிந்தால், நிதிபதியால் எந்த அளவிற்கு தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது என கருதி இருப்பார்? என்பதை அவரிடத்தில் இருந்துதான் நாம் யோசிக்க வேண்டும்.
ஆனால், இப்போது புகார் கொடுத்தவர்களே, எனக்கு நியாயங் கிடைக்க வில்லை என நிதிபதிகளை கத்தியால் குத்த ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் எங்கப்போய் முடியும் என்றால், அப்படிச் செய்தவரை கொலை முயற்சி என்று சிறையில் அடைப்பதில் முடிந்து விடும்.
ஆமாம், ‘‘அவர் தொடுத்த வழக்கில் நீ என்னய்யா ஊழல் செய்தாய்’’ என்று யாருமே கேள்விக் கேட்கப் போவது கிடையாது.
ஆகையால், நியாயங் கேட்ட நோக்கம் கெட்டுப் போய்விடும். எனவே, நியாயங் கேட்க நினைப்பவர்கள் சட்டத்தை கையிலெடுத்து அதன்படி (ச, சி)ந்திக்கவே வேண்டும்.
ஊழலை ஒழிக்க நியமிக்கப்பட்ட நிதிபதியே நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை என கத்தியால் குத்தப்பட்டுள்ளது, ‘‘நிதிபதிகள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்’’ என்றே புரிந்துக் கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்த அளவில், அனைத்துக் குற்ற நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பதே நிதிபதிகள்தான் என்பதை, 2007 ஆம் ஆண்டில், மறுபதிப்பாக வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில், ‘‘குற்றங்கள் வளர நிதிபதிகளே காரணம்!’’ என்ற தலைப்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கிச் சொல்லி விட்டேன்.
ஆனால், தன்னார்வலர்கள் என்றப் பெயரில் உள்ள பல தறுதலைகள், ஊழல் வழக்குக்களை விசாரிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டுமென கூக்குரல் இட்டு வருகின்றனர்.

இதையெல்லாம், 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துதான், ‘‘லஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள்; லஞ்சங் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்’’ என்று நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில் சொன்னேன்.
எனவே, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் லஞ்சத்தை ஒழிப்பாதற்காக, நான் ஆராய்ந்து சொல்லி உள்ள சில வழிமுறைகளைப் போல, பல வழிமுறைகளை ஆலோசிக்க வேண்டும். இதுவே தகுந்தப் பலனைத் தரும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment