No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, March 23, 2018

உரிமையை மீட்க பொய்யர்களை நம்பினால் உயிரே பறிபோகும்!சட்ட விரோதத் தொழிலைச் செய்யும் பொய்யர்களின் தொழில் மீது உங்களுக்கு என்னதான் வெறுப்பு இருந்தாலும், அதுக்காக இப்படியெல்லாமா தலைப்பை போட்டு எங்களை பயமுறுத்துவீங்க என நினைக்காதிங்க!
ஏற்கெனவே, ‘‘நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த தன் மனைவி இறந்து விட்டாள்’’ என நாடகமாட,

தன் கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர கோரி வழக்கு (தொ, கொ)டுக்க வந்தப் பெண்ணை...

பொய்யர் கொலை செய்து, இவளை தன் மனைவி என்றும் இறந்து விட்டாள் என்றுங்கூறி எரியூட்டியப்பின்,,,

அப்பொய்யன் கொலை வழக்கில் செய்தியை, ‘மநு வரையுங்கலை!’ நூலின் ‘உரிமையியல் நடவடிக்கைகள்’ என்ற அத்தியாயத்தில் ‘‘பொய்யர்கள் குற்றவாளிகளே’’ என்றத் தலைப்பில் சொல்லி உள்ளேன். இதை வைத்துத்தான் இப்படியொரு தலைப்பை கொடுத்துள்ளேன்.


இந்த நிலையில், இந்தப் பொய்யர் கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் வாங்கிப் போடும் அளவிற்கு கோடிக்கணக்கில் வழக்காளிகளை கொள்ளையடித்து இருக்கிறார்.
ஆகையால்தான் பாதுகாப்பிற்காக துப்பாக்கி உள்ளிட்டவற்றை வாங்கி வைத்திருக்கிறார் போலும்.

இதில் மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் என்ன வென்றால், ‘‘பொய்யர்கள் பலருக்கு 300 ஏக்கர் இடமெல்லாம் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது’’ என்று நேற்று (23-03-2018) தான் எனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அடுத்த நாளான இன்றே இந்த செய்தி வெளிவந்து உள்ளது.

என்னுடைய கணிப்பில், இவரது நிலத்தில் தோண்டிப் பார்த்தால் ஆட்டோ சங்கர் பலரை கொலை செய்து புதைத்தது போல ஓரிரு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சிலரின் உடல்களாவது கிடைக்குமென நம்புகிறேன்.

ஆம், பலபேர் இருக்கக் கூடிய தங்கும் விடுதியிலேயே இப்படி அராஜகம் என்றால், அவருக்கு சொந்தமான ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எத்தனை நபர்களை சுட்டுப் புதைத்தானோ!

ஆமாம், இவனுக்கு கொடுக்கப்பட்ட மொத்த தோட்டாக்கள் எத்தனை என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டும்.

பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டிய கைத்துப்பாக்கியை தவறாக பயன்படுத்தியதால் அதனை பறிமுதல் செய்து, அதற்கான உரிமத்தையும் முடக்க வேண்டும்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் பொய்யனுக்கு பொய்த்தொழில் செய்வதற்கான அடையாள அட்டை மதுரை முகவரியில் இருப்பதால், இது எந்த அளவிற்கு உண்மை என்பதிலும் எனக்கு சந்தேகம் இருக்கிறது.

சென்னை அண்ணா நகரில் இடத்தின் மதிப்பு கோடிக் கணக்கில் என்றால், அங்குள்ள வீடு எப்படி வந்தது... கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நிலம் எவ்வளவு எப்படி வந்தது முறைப்படி விசாரித்தால், என்னென்ன வேதாளங்கள் கிளம்புமோ...

‘‘நிதியைத்தேடி அலையும் நம் தறுதலை வாசகர்கள்’’ ஆலோசனை கேட்டு வரும் அப்பாவி மக்களை ஏமாற்றி நிலத்தை எழுதி வாங்குவது போல, வழக்கிற்கு என வந்த வழக்காளிகளிடம் இருந்து இந்தப் பொய்யனும் வழிபறி செய்திருப்பானோ... யாருக்கு தெரியும்?!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, March 19, 2018

மடல்: அடிப்படை கல்வியில் சட்டக்கல்வி!அந்துமணி அவர்களுக்கு வணக்கம். 


இன்றைய 18-03-2018 தினமலர் வாரமலரில் அடிப்படை கல்வியில் சட்டக்கல்வியை கொண்டு வருவது பற்றி சிந்தி்க்க வேண்டுமென சொல்லி இருந்தீர்கள். 

சமூகத்திற்கு சட்டக் கல்வியை போதிக்க வேண்டுமென கடந்த பதினெட்டு ஆண்டுகளாக சட்டங்களை ஆய்வு செய்து, எழு நூல்களையும், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி உள்ளவன் என்ற முறையில், தங்களின் கருத்தை நானும் வரவேற்கிறேன். 

மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமே ஒதுங்காத எழுதப் படிக்க தெரியாதவர்கள் கூட, கணக்கில் தெளிவாக இருப்பார்கள். இல்லையென்றால், பண விசயத்தில் ஏமாற்றி விடுவார்கள் அல்லவா?

இப்படி வேறெந்த பாடம் தெரியாவிட்டாலுங்கூட, தங்களின் சட்ட உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள  கட்டாயம்  சட்டந் தெரிந்திருக்க வேண்டும். 

ஆனால், மக்கள் எல்லோருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு வந்து விட்டால், மக்களின் மீது அரசாங்கங்கள் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த முடியாது. என்று சத்தியவான் காந்தியே எழுதி உள்ளார்.

ஆகையால், உலகில் உள்ள எந்தவொரு நாடும், தனது குடிமக்களுக்கு அடிப்படை கல்வியில் சட்டக்கல்வியை கொடுத்ததாக தெரியவில்லை. 

எனவே, நியாயந்தான் சட்டம்! அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம் என்றத் தத்துவத்தின் அடிப்படையில், நாமாகவே சட்டத்தைப் படித்து, நம் வாரிசுகளுக்கும் சொல்லிக் கொடுத்தால்தான் உண்டு. இதனை அச்சு ஊடகத்தில் இருக்கும் நீங்கள் எளிதாகச் செய்யலாம். 

உங்களுக்கு விரும்பமிருந்தால், நேரமிருக்கும்போது, நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வளம் வந்து பாருங்கள். சட்டங் குறித்த பல சங்கதிகள் புரியும். நன்றி!

இது தங்களின் சிறப்பு கவனத்திற்கு...

தங்களுக்கு கடிதம் எழுதிய முகமது மொய்தீன், ‘‘வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும், நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சட்டம் பற்றிய தெளிவான அறிவு உள்ளது’’ என எழுதியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். 


இது சுத்தப் பொய். இதில், தங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர் போடும் கையெழுத்து எந்த சட்டத்தின் கீழ் வருகிறது? கட்சிக் காரருக்காக வாதாட தாக்கல் செய்யும் வக்காலத்து எந்த சட்டப் பிரிவின் கீழ் என கேட்டுப் பாருங்கள். 

அடிப்படை சட்ட அறிவே கிடையாது என்பது புரியும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, March 16, 2018

உதவி (செய்வ, கேட்ப)திலும் தேவை மிகுந்த எச்சரிக்கை!நியாயமாக வாழ நினைப்பவர்கள் சிக்கனமாகவும் இருப்பார்கள். ஆனால் எச்சரிக்கையாக இருப்பது எல்லோருக்கும் சாத்தியமில்லாத ஒன்று. இதுவும் சாத்தியப்பட வேண்டும். 

ஐந்து கிமீ போக அரசுப் பேரூந்துக்கு காத்துக் கொண்டிருக்கும் போது, வந்து கை நீட்டி தர்மம் கேட்பார்கள். சரி ஒரு தேனீர் சாப்பிடட்டும் என நினைத்து, பத்து ரூபா கொடுத்தால், அடுத்து வரும் ஷேர் ஆட்டோவில் ஏறி அவர்கள் போவார்கள். 

இதுக்கு நாம போயிருக்கலாமே என்று எண்ணிக் கொண்டே, மீண்டும் காத்திருக்க தொடங்குவோம். 

உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது, அய்யா ஒரு ஃபோன் பேசனும் என்பார்கள். அந்த நம்பருக்கு போட்டு, இவரு பேர சொன்னா அப்படி யாரும் தெரியாது என்பார்கள். 

இதோடு விட்டால் பரவாயில்லை. ‘‘எவனோ எங்கிட்ட பேசனும்னு சொன்னா உடனே போன்போட்டு தருவியா நீ?’’ என இன்னும் கண்டகண்டபடி எல்லாம் ஏத்துவார்கள். 

அப்படி என்றால் என்ன அர்த்தம்? கேட்டவர் கையில் ஃபோனை கொடுத்தால், தூக்கிக்கொண்டு ஓடி விடுவார்கள். 

வெளியூரில் உள்ள குளத்தை கண்டதும் ஆனந்தக் குளியல் போடலாம் என நினைத்து, எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு குளிக்க ஆரம்பித்தால், அப்பாவியாய் வரும் சிறுவர்கள் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள். 

அவர்களுக்கு நன்றாவே தெரியும் நீங்கள் வெளியூர், வெளிமாநிலக் காரர்கள் என்று. நீங்க ஜட்டியோட அவர்களை துரத்த முடியாது.

இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம். இதையெல்லாம் நீங்கள் நிச்சயம் சந்தித்து இருக்க வேண்டும்.

இதெல்லாம், அந்த நேரத்தில் நமக்கு கோப மூட்டினாலும் அடுத்த சில மணியிலோ, நாளிலோ அடங்கி விடும். ஆனால், சில சம்பவங்கள், நம் வாழ்க்கை அடங்கியப் பின்தான் அடங்கும். ஆகையால், வாழ்க்கை முழுவதும் வருத்தப்பட நேரிடும்.

உதவி ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டியதுதான். அதே நேரத்தில், யாருக்கு செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு செய்ய வேண்டும். 

இதனை பெற்றோர்கள் கடைப்பிடிப்பதோடு, தங்களின் குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளோடு வெளியூர்களுக்கு செல்லும்போது, இப்படிப்பட்ட அனுபவங்கள் எளிதில் கிடைக்கும். ஆகையால், குழந்தைகளுக்கு போதிப்பது மிகமிக எளிது. 


இதெல்லாம் சாதாரண சங்கதிகள். சட்ட சிக்கலுக்கு உரிய சங்கதியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால், #பேட்டரி_வாங்கிக்_கொடுத்த_பேரறிவாளனின் சிறை வாழ்க்கையைச் சொல்லலாம். 

எச்சரிக்கை! எச்சரிக்கை!! 

ஆமாம், நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள், கடைசி வரை நம்மோடு நிப்பாங்க; கெட்ட காரியத்தை செய்யிறவங்க அவங்க  தப்பித்தால் போதும்னுதான் நினைப்பாங்க என்ற தத்துவப் பாடல் எப்போதும் நினைவில் நிற்கட்டும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, March 12, 2018

செல்லாத சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம்!2005 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த தறுதலைச் சட்டமாம், தகவல் பெறும் உரிமையைப் போலவே, அந்தாண்டே அமலுக்கு வந்த சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டமும், சமூகத்திற்கு கேடானதுதான். 

இப்படியொரு பயங்கரவாதச் சட்டம் இருப்பதும், இந்தச் சட்டம் நம்மூரிலேயே அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும், அதில்தான் நாம் வேலை பார்க்கிறோம் என்பதும் யாருக்குமே தெரிவதில்லை.

ஆமாம், இந்திய சாசனம் உள்ளிட்ட மத்திய அரசின் எல்லா சட்டங்களிலும், ‘‘ஜம்மு காஷ்மீர்’’ நீங்களாக இந்தியா முழுமைக்கும் பொருந்தும் என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லப்பட்டு இருக்கும். இதையே பலர் சர்ச்சையாக பேசுவார்கள். 


ஆனால், சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் அமலில் உள்ள சில ஏக்கர் இடத்தில், வேறு எந்த சட்டமும் செல்லாது என சொல்லப்பட்டு இருக்கும். 

இதைப் பற்றி யாரும் பேசியதாக தெரியவில்லை. இப்படியொரு சட்டமும், அதன் சூட்சமும் தெரிந்தால்தானே பேசுவதற்கு?!

இப்படி, அரசமைப்பு உள்ளிட்ட அடிப்படை சட்டங்களுக்கு உட்பட்டுதான் எந்தவொரு சட்டமும் இருக்க முடியும் என்ற நிலையில், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு எப்படி இருக்க முடியும். இப்படியொரு பயங்கரவாதச் சட்டம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருக்க வாய்ப்பே இல்லை. 

அதாவது கார்ப்பரேட்டுகள் தாங்கள் நினைக்கும் சட்ட விரோத செயல்கள் எதையும் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ள வசதியாக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பதால், இதனை பண முதலைகள் உருவாக்கித் தந்த சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் என்றுதான் மிகச் சரியாக சொல்ல வேண்டும். 

இந்த சட்டத்தை விமர்சித்து, கடமையைச் செய்! பலன் கிடைக்கும் இதழில் மதிப்புரையும் எழுதி உள்ளேன்.

ஆமாம், அரசால் அத்தனை அத்தனை சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட (வீ, சூ)ழ்ச்சிக்கும் இதுவும் ஒரு காரணம் என்பது என் மேலோட்டமான பார்வை. 

ஆமாம், இந்த இடத்தில் பெரும்பாழும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுனவங்களே இயங்கும். 

இந்த சட்டமெல்லாம், இந்திய சாசனத்துக்கே எதிரானது என்பதால், ‘‘இந்த சட்டமே செல்லாது’’ என்பதைப்பற்றி இதழிலும், நூலிலும் எழுதி உள்ளேன்.

மேலும், இதுபோன்ற மண்டலங்களில் கிடைக்கும் எந்தவொரு வேலை வாய்ப்பையும் இளைஞர்களும், இளஞைகளும் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இதுவே அவர்கள் சமூகத்திற்கு செய்யும் நன்றிக்கடன்.

சில ஆண்டுகளுக்கு முன் நாட்டுப்பற்றுள்ள அன்பர் ஒருவரின் மகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதைப்பற்றி அவருக்கு எடுத்துச் சொல்லி வேறிடத்தில் வேலை தேடிக் கொள்ளச் சொல்லுங்கள் என்றேன். 

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூரில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் கூடாரம், இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதுதான். இதில்தான் அவளுக்கும் வேலை கிடைத்தது.

ஆனால், அடுத்தவர்கள் விசயத்தில் அப்படி இருக்கனும், இப்படி இருக்கனும் என ஆயிரத்தெட்டு ஆலோசனைகளை சொல்பவர்கள், தனக்கு வரும் ஆலோசனைகளை ஏற்பதில்லை என்பதுபோல, இதையெல்லாம் நான் அவளிடம் சொல்ல இயலாது என்று சொல்லி விட்டார். 

அவரே சொல்லவில்லை என்றாலுங்கூட, என்னை அவளுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால், நீங்களே சொல்லுங்கள் என எனக்காவது ஒரு வாய்ப்பை கொடுத்து இருந்தால், இதைப்பற்றி விளக்கி அவளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்திருப்பேன். அவரே சொல்ல முடியாது என்று சொல்லி விட்டபின் நான் அவளிடம் சொல்வது சரியாக இருக்காது என விட்டு விட்டேன்.  

தொட்டதற்கு எல்லாம் பொதுநல வழக்கு போடும் பொறுக்கிகள் யாரும், இதற்கு வழக்கு போடவில்லை. கார்ப்பரேட்டுகள் காலி செய்து விடுவார்கள் என்ற பயம் போலும்! 

வழக்கம் போலவே, இதனை நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான உயர் மற்றும் உச்சநீதிமன்ற நிதிபதிகளும் கண்டு கொள்ளவே இல்லை!! இவர்களுக்குத்தான் அடிப்படை சட்ட அறிவே கிடையாதே; அப்புறம் எப்படி இதெல்லாம் தெரியும் என்கிறீர்களா?! 

இந்த நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய இருந்தது, அமையாமல் போய் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம்! 

இதற்காக இழந்த நிலத்தை மீட்டெடுக்க போராடுபவர்கள் இதிலுள்ள சட்ட சங்கதிகளை தெரிந்துக் கொண்டால், திரும்ப கைப்பற்ற ஏதுவாக இருக்கும். இதுபோன்ற திட்டத்துக்கு இனி வேறெங்கும் நிலம் கையகப்படுத்தப்பட்டால், அதனை எதிர்த்து சட்ட ரீதியாக போராடவும் உதவும். 

சேர்க்கை நாள் : 22-06-2018


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, March 10, 2018

மகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்!
நேற்று இந்த ஒருதலைக் காதல் கொலைத் தகவலை கேட்டதுமே இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். அப்படியேத்தான் இருக்கிறது. 

கடந்த ஒரு மாதத்திற்கு உள்ளாக முகநூலின் ஒரு பதிவில், வசதி குறைந்தவர்கள் கூட தங்களது மகளை வசதியான தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். 

காரணம், அவளே நல்ல வசதியான பையனாக தேடிக் கொள்வாள் என்பதே என்றும், இவர்களைப் போலவே அவனும், வசதியான பெண் என நினைத்தால் இவர்களின் வாழ்வு என்னாகும்? என்று கேள்வி எழுப்பி இருந்தேன். 

இதைகூட ஒரு முட்டாள் மிக கேவலமான உதாரணம் என சொல்லி இருந்தார். கேவலமானதை எடுத்துச் சொல்லும் போது, அது கேவலமானதாக தெரியாமல், உயர்வாகவா தெரியும். இல்ல, கேவலமாக இருக்கும் என்பதால், இப்படித்தான் இது நடக்கிறது என நான் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லாமல் விட்டு விட முடியுமா?!

பொறுப்பற்ற முறையில் பெண் பிள்கைளைப் பெற்ற பெற்றோர்கள், அவர்களின் தேவைகளை செய்ய முடியாமல் பணத்துக்கு தவிக்கின்றனர். 

ஆகையால், நமக்கு திருமண கஷ்டத்தை கொடுக்காமல் யாரையாவது காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் போதும் என்கிற அளவில் அவர்களை கண்டுங் காணாமல் விட்டு விடுகின்றனர். 

இதுபோன்ற தகாத செயல்களுக்கு மகளை ஊக்குவிக்கும் அம்மாக்கள், வீட்டில் மகளை அந்த இளைஞர்களோடு விளையாட விடும் அம்மாக்கள் என பல அசிங்கங்களை நானே பார்த்து இருக்கிறேன். 

இதுபோன்ற முடிவுக்கு வந்து விட்ட மனைவியை, ஒரு கணவனால், எந்த விதத்திலும் தடுத்து நிறுத்தி விட முடியாது. கோபம் வந்தால் குடித்து விட்டு வந்து கத்தவோ, அடிக்கவோ முடியும். 


ஆமாம், ஆன்டிகள் உங்களை அவர்களுக்காகவும் பிடிப்பார்கள். அவர்களது மகளுக்காகவும் பிடிப்பார்கள். 

ஆமாம், இப்படி ஒரு இளைஞன் மட்டுமல்ல; வாரத்துக்கு ஒருவன் என ஒருவனைப் படித்துக் கொண்டு, அவனை நகை கடைக்கு அழைத்துச் சென்று பெரிய செலவில் ஏதையாவது வாங்கிக் கொண்டு, தப்பித்தால் போதும் என்று அவனே திரும்ப வராதபடி செய்துவிடுவது என பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள் அம்மாக்கள். 

இப்படிப்பட்ட பெண் பிள்ளைகளுக்கு மொபைலுக்கு பணம் போடுவதில் இருந்து, செலவுக்கு பாக்கெட் மணி என காதல் என்றப் போர்வையில் பல்வேறு விதத்தில் பணத்தைப் பறித்துக் கொண்டு, பின் அந்த இளைஞர்கள் பிடிக்கவில்லை என ஒதுங்கும் போதுதான், ஏமாற்றப்பட்ட விரக்கதியில் இதுபோன்ற ஒருதலைக் காதல் கொலைகளை இளைஞர்கள் அரங்கேற்றுகிறார்கள்.

ஒரு சட்ட ஆராய்ச்சியாளன் என்று மட்டும் இல்லாமல், சமூகத்தையும் ஆராய்பவன் என்ற அளவில் இதனை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். 

ஆமாம், சில ஆண்டுகளுக்கு முன் அமில வீச்சுக்கு ஆளான காரைக்கால் மென் பொறியாளர் வினோதினி கதையும் இப்படித்தான்!  

வினோதினி விவகாரத்தில் பொது மக்கள் அனுப்பிய சுமார் ஒரு கோடி ரூபாய் யாருக்கும் பயனின்றி முடக்கப்பட்டு உள்ளது என்பது பலருக்கும், பணம் அனுப்பி உதவி செய்தவர்களுக்கும் தெரியாத கூடுதல் தகவல்.

இப்படி, நடந்த கொலைகள் எல்லாவற்றையும் இங்கு பட்டியல் போட்டு சொல்ல இயலாது என்பதால், இந்த இரண்டை மட்டும் சொல்லி இருக்கிறேன். 

எனவே, பொறுப்பற்ற பெற்றோர்கள் இதிலும் குறிப்பாக ‘‘மகளுக்கே மாமா வேலை பார்க்கும் அம்மாக்கள்’’ திருந்தாமல், இதுபோன்ற ஒருதலைக் காதல் கொலைகளை தடுக்கவே முடியாது. 

ஆமாம், தங்களை விட அதிக அனுபவத்தில் உள்ள பெற்றோர்கள்  (இ, எ)ப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை இளைஞர்கள் தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக ஒதுங்கி வாழ வேண்டுமே தவிர, ‘‘நம்மைப் பார்த்து சிரிப்பவள் எல்லாம் காதலிக்கிறாள்’’ என தவறாக நினைத்து, செலவு செய்துவிட்டு இறுதியில் சிறையில் வாழ்வை கழிக்கும் நிலைக்கு போகக் கூடாது.

சேர்க்கை நாள் 06-07-2018

இப்படி திட்டம்போட்டு குடும்பத்தோடு பணம் பறிக்கும் குடும்பக் கும்பல் பல இருக்கிறது.


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, March 8, 2018

நிதிபதிக்கு கத்தி குத்து!பொதுவாக நீதிமன்றங்களில் ஒரேயொரு சாட்சிக் கூண்டுதான் இருக்கும்.

ஆனால், குற்றவியல் நீதிமன்றங்களில், நிதிபதிக்கு பக்கதில் ஒரு சாட்சிக்கூண்டு இருக்கும். எதிராக தொலைவில் ஒன்றும் இருக்கும்.

எதிராக தொலைவில் உள்ளதில்தான் எதிரிகள் (குற்றஞ் சாற்றப்பட்டவர்கள்) ஏறி நிற்க வைக்கப்படுவர். காரணம், ‘எதிரிகள் தங்களை தாக்கி விடலாம்’ என்ற நிதிபதிகளின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் இருக்கும்.

இப்படியொரு நிலையை நிதிபதிகள் யோசித்ததே, அவர்கள் நீதிபதிகளாக இல்லை என்ற அபத்தந்தான்!

இப்படி இருந்தும், நீண்ட நாள்களாக விசாரணை என்றப் பெயரில் சிறையில் வைக்கப்படிருந்த ஒரு கைதி, ‘‘தன்னுடைய மலத்தை பொட்டலமாக எடுத்து வந்து, நிதிபதியின் மீது வீசவே, அது குறி தவறாது நிதிபதியின் மீது விழுந்ததோடு, சுற்றிலும் தெறித்து துர்நாற்றமடித்த சம்பவம்’’, கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுவையில் நடந்தது.

இந்தச் செய்தி பத்திரிகையிலும் வெளிவந்து நாடு முழுவதும் நாறியது. இதனால்தான் எனக்கும் தெரிந்தது.

இதற்கு முன்பு உச்சநீதிமன்றத்திலேயே, ‘பெண்கள் இருவர் செருப்பை கழற்றி நிதிபதிகள் மீது வீசி உள்ளனர்’’ என்பது பற்றி நூலில் சொல்லி உள்ளேன்.

ஒரு கைதி தன் மலத்தை வீசும் அளவிற்கு துணிந்தால், நிதிபதியால் எந்த அளவிற்கு தனக்கு துரோகம் இழைக்கப்பட்டது என கருதி இருப்பார்? என்பதை அவரிடத்தில் இருந்துதான் நாம் யோசிக்க வேண்டும்.

ஆனால், இப்போது புகார் கொடுத்தவர்களே, எனக்கு நியாயங் கிடைக்க வில்லை என நிதிபதிகளை கத்தியால் குத்த ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் எங்கப்போய் முடியும் என்றால், அப்படிச் செய்தவரை கொலை முயற்சி என்று சிறையில் அடைப்பதில் முடிந்து விடும்.

ஆமாம், ‘‘அவர் தொடுத்த வழக்கில் நீ என்னய்யா ஊழல் செய்தாய்’’ என்று யாருமே கேள்விக் கேட்கப் போவது கிடையாது.

ஆகையால், நியாயங் கேட்ட நோக்கம் கெட்டுப் போய்விடும். எனவே, நியாயங் கேட்க நினைப்பவர்கள் சட்டத்தை கையிலெடுத்து அதன்படி (ச, சி)ந்திக்கவே வேண்டும்.

ஊழலை ஒழிக்க நியமிக்கப்பட்ட நிதிபதியே நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை என கத்தியால் குத்தப்பட்டுள்ளது, ‘‘நிதிபதிகள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்’’ என்றே புரிந்துக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்த அளவில், அனைத்துக் குற்ற நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பதே நிதிபதிகள்தான் என்பதை, 2007 ஆம் ஆண்டில், மறுபதிப்பாக வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில், ‘‘குற்றங்கள் வளர நிதிபதிகளே காரணம்!’’ என்ற தலைப்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கிச் சொல்லி விட்டேன்.

ஆனால், தன்னார்வலர்கள் என்றப் பெயரில் உள்ள பல தறுதலைகள், ஊழல் வழக்குக்களை விசாரிப்பதற்கு லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டுமென கூக்குரல் இட்டு வருகின்றனர்.

இதையெல்லாம், 12 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துதான், ‘‘லஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள்; லஞ்சங் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்’’ என்று நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில் சொன்னேன்.

எனவே, நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் லஞ்சத்தை ஒழிப்பாதற்காக, நான் ஆராய்ந்து சொல்லி உள்ள சில வழிமுறைகளைப் போல, பல வழிமுறைகளை ஆலோசிக்க வேண்டும். இதுவே தகுந்தப் பலனைத் தரும்.

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)