பொதுவாகவே, டிவி மோகம் அனைவருக்கும் உண்டு. இதிலும் தனக்கென்று ஒரு டிவி இருந்தால் சொல்லவா வேண்டும்?
ஆமாம், சமூக வலைத்தளங்களில் ஒன்றான யுடியூபில் தமக்கென்று ஒரு சேனலை உருவாக்கிக் கொள்வது பெரும்பாழானோரின் செயலாக இருக்கிறது. பெரும்பாழானோர் என எதற்காகச் சொல்கிறேன் என்றால், அதில் வெளியிடப்படும் பல விசயங்கள் பா(ழா, லா)ன விசயங்கள்தான்!
எப்பொழுதும் முட்டாள்கள் பேசாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், பேசாமல் உள்ளவரைதான் அவர்கள் அறிவாளிகளாக தெரிவார்கள். பேசத் தொடங்கி விட்டால், அவர்களின் முட்டாள்தனங்கள், அவர்களை அறியாமலேயே ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விடும்.
சமூக வலைத்தளங்களைப் பொருத்தவரை அதில் பதிவிடுபவர்கள் பலரும் தங்கள் மேதாவிகள், அறிவாளிகள் என்றே எண்ணுகிறார்கள். ஆனால், இப்படி நினைக்கும் பலரும் முட்டாள்களே என்பது, அவர்களது காணொலிகளை பார்க்கும்போது புரியும்.
இந்த வகையில், ஒரு பிரபலத்தைப் பற்றி எடை போடுவதற்கு எனக்கு மிகவும் உதவிகரமாக இருப்பது, யுடியூபில் உலாவரும் காணொலிகள்தான்.
ஆமாம், முன்பெல்லாம், இதற்காக அவர்களைப் பற்றி நிறையவே ஆராய வேண்டி இருக்கும். அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் யாரிடமானது கேட்டால், அவர்களைப் பற்றி என்ன மனநிலையில் இருக்கிறார்களோ அப்படியே சொல்லி விடுவார்கள்.
ஆகையால், அவர்கள் சொன்னது, சரிதான் என்ற முடிவுக்கு ஒருபோதும் வந்துவிட முடியாது. ஆகையால், ஒருவரைப் பற்றி அறிவது கடினமாக காரியமாகவே இருந்தது. ஆனால், வளர்ந்துள்ள தகவல் தொழில் நுட்பம், இதனை மிகவும் எளிதாக்கி விட்டது.
தெரிந்ததை தெளிவாகச் சொல்ல வேண்டும். தெரியாததை தெரியாது என்றே சொல்லிவிட வேண்டும். அதுபற்றி தெரிந்தவர்கள் யாரும் இருந்தால், அவர்களைப் பற்றி தெரிவித்து, தெரிந்துக் கொள்ள வழிகாட்ட வேண்டும்.
இதுவே அறிவுள்ளோருக்கு அழகு. ஆகையால், இதை மட்டுந்தான் அறிவுடையோர் செய்வர். இப்படியும் வெகுசிலரை, அரிதிலும் அரிதாகப் பார்க்கலாம்.
ஆனால் பலரும் நினைப்பது என்னவென்றால், எனக்கு தெரியாது என்று சொன்னால், தங்களுக்கு கெளரவக் குறைச்சல் என்று நினைக்கு அறிவுவறுமை முட்டாள்கள் பலர், எங்களுக்கு எல்லாந் தெரியும் என்பதைப் போல காட்டிக் கொள்ள முயற்சித்து எதையாவது உளறி கொட்டு(கிறா, வா)ர்கள்.
இதில், சமூக ஆர்வலர்கள் என்ற, சமூக கோளாறுகள் எல்லாம், சட்ட விழிப்பறிவுணர்வை ஏற்படுத்துகிறேன் என்ற பெயரில் சட்டத்துக்கு விரோதமான செய்திகளை எல்லாம் மக்களுக்கு போதனையாக தருகிறார்கள். இதையெல்லாம் உண்மையென நம்பும் மாக்கள் ஆஹா, ஓஹோ என்கிறார்கள்.
இப்படி போக்குவரத்து குறித்து, அடிப்படை சட்ட விதிகள் எதுவுமே தெரியாமல், காவலூழியர்களுக்கு அபராதம் விதிக்கும் உரிமை உள்ளது, அனைத்து அசல் ஆவணங்களையும் கையிலேயே வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்டு, அறப்போர் இயக்கத்தின் அறிவுவறுமை ஒன்று உளறுவதை இந்த இணைப்பில் காணலாம்.
இதற்கு முன்பாக இதுபற்றிய சரியான சட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்! என்ற இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, அக்காணொலியைப் பார்க்கவும். அப்போதுதான் உளறல்கள் புரியும்.
தன்னார்வ தறுதலைகள்தான் இப்படி என்றால், ஊடகங்களோ இவர்களுக்கு மேல் இருக்கின்றன.
தன்னார்வ தறுதலைகள்தான் இப்படி என்றால், ஊடகங்களோ இவர்களுக்கு மேல் இருக்கின்றன.
இந்தச் செய்தியை எனக்கு அனுப்பிய ஒருவர், சரியா என கேட்டார். இப்படியொரு சங்கதி சட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதே என்னுடைய அனுமானம் என்றாலும், நம் அனுமானத்தை எல்லாம் சொல்லக் கூடாது அல்லவா?
ஆகையால் எனக்கு சரியாக தெரியவில்லை என்று உடனே பதில் சொல்லி விட்டேன்.
ஆமாம், சட்ட ஆராய்ச்சியாளர் என்பதாலேயே, அனைத்து சட்ட விதிகளையும், அதன் ஒவ்வொரு பிரிவுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பின் ஓரிரு நாட்கள் கழித்து, மோட்டார் வாகனச் சட்ட நூலை சரி பார்த்த போது, இந்தப் பிரிவானது விபத்தில் சிக்கியவர் சார்பாக நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுக்க உரிமை உள்ளவர்கள் யார்யார் என தெரிந்து, அந்நபருக்கு தெரிவித்ததோடு முகநூலிலும் பதிவிட்டேன். இதுவே, அறிவுடைய ஆர்வலர்கள் செய்ய வேண்டியது. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment