No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, February 16, 2018

மூலிகையின் மூலமும்; (ம, மா)ற்ற விளக்கமும்!


இயற்கையைப் பற்றி நம் முன்னோர்களுக்கு இருந்த விழிப்பறிவுணர்வு நம்மிடம் இல்லை. ஆகையால், இயற்கையை காப்பாற்றுகிறோம் என்றப் பெயரில் நாம் செய்யும் செயல்கள் பல அர்த்தமற்றவையே என்பதை கூட அறிய முடியாத நிலையில் உள்ளோம்.

ஆமாம், தாவங்கள் தரும் வரத்தால்தான், உலக உயிரினங்கள் யாவும் உயிர் வாழ்கின்றன. தாவரன் என்றால், கடவுள் என்று பொருள் சொல்கிறது, தமிழ் அகராதி!

இப்படிப்பட்ட தாவரங்கள் அனைத்துமே நமக்கு தேவை என்றாலுங்கூட, நோயைத் தீர்க்க உதவும் தாவரத்தை மூலிகை என்கின்றனர். மூலிகை என்றால், முதல்தர தாவரம் எனச் சொல்லலாம்.  

பொதுவாக விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் நோய்வாய்ப்படும்போது, அதற்குறிய தாவரத்தை உண்டு, உபாதையை தீர்த்துக் கொள்கின்றனர்.

ஆமாம், சைவக்குரங்கு, அசைவ நாய், பூனை உள்ளிட்டவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், செரியாமை உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும்போது, தான் விரும்பும் ஏதோவொரு தாவரத்தை சிறிது உண்பதைப் பார்த்து இருப்பீர்கள். நான் பலமுறை பார்த்து இருக்கிறேன். பார்க்காதவர்கள் இங்குச் சொடுக்கி பார்க்கலாம்.

இந்தக் காணொலியை எடுத்து பதிவேற்றி உள்ளவர்கள் கூட, நாய் எதற்காக புல்லைத் திண்கிறது என்பது புரியாமல், வியந்து சிரிப்பதையும், ‘‘என் நாய் ஒரு மாடு’’ என தலைப்புக் கொடுத்திருப்பதையும், இதுபற்றிய புரிதல் இல்லாதவர்கள் பலரும், ‘‘அந்த நாய் பைத்தியமாக இருக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களைப் பின்னூட்டமாக’’ எழுதி இருப்பதை காணலாம்.

என்னடா, ஐந்தறிவு அஃறினை விலங்குகளை, ஆறறிவு உயர்தினையில் சொல்கிறேனே என எண்ணுகிறீர்களா?!

இதுபற்றி மிகவும் விரிவாக ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில்’’ சொல்லியுள்ளேன். ஆனாலும், அந்நூலைப் படிக்காதவர்களுக்காக சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

நம் அறிவின்படி, அவர்கள் தம் பிறப்பால் அஃறினையாக இருந்தாலும், தங்களின் தேவையை தாங்களே பூர்த்தி செய்துக் கொள்ளும் அறிவுத்திறம் படைத்த உயர்தினையில் வாழ்கிறார்கள். ஆனால், அறறிவு படைத்த மனிதர்கள் ஆகிய நாமே, அடுத்தவரை நம்பியே வாழ்ந்து (மோ, நா)சமாகிக் கொண்டிருக்கிறோம்.

நம் அறிவை உலக அழிவிற்கே பயன்படுத்துகிறோம். ஆகையால், என்னைப் பொறுத்த அளவில், அறறிவு மனிதர்களை விட, அதற்கு கீழான உயிரினங்களே மதிக்கத் தக்க வகையில் உயர்ந்தவர்கள்.

இந்த வகையில், நமக்குள்ள நோயைப் பொறுத்து, அதனை தீர்ப்பதற்கான தாவரம் நமக்கு அருகிலேயே நிச்சயமாக வளர்ந்திருக்கும் என்கிறார்கள்.

இதுபற்றி சித்தர் பாடல் ஒன்றில்கூட வருவதாகவும் சொல்கிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. ஆகையால்தான், இங்கு சொல்லவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் சேர்த்து விடுகிறேன்.

ஆனால், இக்கருத்து உண்மை என்பதை நானும் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். அதாவது, எனக்கு தேவையான தாவரங்கள் நான் எங்கெல்லாம் வசிக்கிறேனோ அங்கெல்லாம் அருகிலேயே கிடைத்து, அதனை தக்க விதத்தில் பயன்படுத்தி பலன் அடைந்திருக்கிறேன்.

ஆகையால், இப்படி நடக்கும் ஒரு செயலை இயற்கையின் கருணை என்றே சொல்லவேண்டும்.

இந்தத் தகவலை, சென்னை வாசகர் Sathish Kumar N இடம், நான் ஒருமுறை சொன்னபோது, ‘‘நீங்கள் சொல்வது கிராமத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், நகரத்தில் சாத்தியமா சார்?’’ என்று வினவவே, எனக்கும் சிறிது சறுக்கல் ஏற்பட்டது.

பின்னரே, (அ, எ)ந்நகரத்திலும் கிடைக்கிறது என்பதை ஆராய்ந்து அறிந்து வியந்தேன்!

சரி, இடையில் விட்ட விசயத்துக்கு வருகிறேன்.

விலங்குகளுக்கு இருக்கும் இந்த அறிவு, மனிதருக்கு கிடையாது. ஆகையால், வீட்டு விலங்குகளுக்கு மனிதனின் அறிவுவறுமையில் கண்டுப் பிடிக்கப்பட்ட மருத்துவத்தை செய்து, அவர்களுக்கு நோயைப் போக்குவதற்குப் பதிலாக பீடிக்க வைக்கிறார்கள்.

ஆனால், மனிதனின் ஆளுமையில் இல்லாத காட்டு விலங்குகள் மனிதனின் அறிவுகெட்ட தனத்தில் இருந்து தப்பித்து விடுகின்றன. இந்த வகையில், காட்டில் வாழும் பழங்குடி இன மக்களும் தப்பித்து விடுகிறார்கள். 

நம்ம மூலிகை விசயத்துக்கு வருவோம்.


மனிதர்கள் தங்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொ(ள்ளு, ல்லு)ம் வகையில் சென்றுக் கொண்டு இருப்பதாலோ என்னவோ, அரசே மூலிகைகளைப் பற்றி கண்காட்சியை நடத்த ஆரம்பித்து உள்ளது.

இம்மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் வைத்தியங் கூட, இப்போது பலனலிப்பதில்லை என்ற குற்றச்சாற்று பரவலாக உள்ளது. சித்த மருத்தும் செத்த மருத்துவமாக மாற இதுவும் ஒரு காரணம்.

இதற்கு, மருத்துவம் செய்பவர்களின் அனுபவமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப் படுகின்றன. இதில் உண்மை இல்லாமல் இல்லை. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

முதலில் மூலிகை என்றால் என்னவென்று சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மூலிகை வைத்தியம் பலனளிக்கும்; இல்லையேல், பல்லைத்தான் இளிக்கும்.

ஒருபுறம் மூலிகை வைத்தியத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், மாற்று மருத்துவத்தை தேடுவோருக்கு இடையில், மாற்று மருத்துவத்தில் உள்ள பக்க விளைவுகளுக்கு அஞ்சி, இன்றும் மூலிகை மருத்துவத்தை நாடுவோரும் இருக்க, இவர்களுக்கும் நோய்த் தீர்ந்தப் பாடில்லை என்ற குறையே விஞ்சி இருக்கிறது.

முன்பெல்லாம் மூலிகை வைத்தியம் பார்ப்பவர்கள், நான் முன்பே சொன்னது போல, நற்சிந்தனையோடு தேவையான மூலிகைகளை காடு, மலை உள்ளிட்ட இடங்களுக்கு கூட தேடிச் சென்று, எடுத்து வந்து மருந்து தயாரித்துக் கொடுத்தார்கள்.  அதனால், அதனை உண்ட மக்களுக்கும் நோய்த் தீர்ந்தது.

ஆனால், இன்று பெரும்பா(ழா, லா)ன வைத்தியர்கள் பணஞ் சம்பாதிப்பதற்கு என்றே வளர்க்கப்படும் அல்லது கடைகளில் விற்கப்படும் நாட்பட்ட மூலிகைப் பொருட்களையே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.

நான் முன்னரே சொன்னபடி, ‘‘தன் தேவையறிந்து தானாக வளர்வது மட்டுமே மூலிகையாகும்!’’ 

மாறாக, மூலிகை என்றப் பெயரில், பணத் தேவைக்காக வளர்ப்பது எப்படி மூலிகையாகும், அதெப்படி பலன் அளிக்கும்?

மேலும் மூலிகையைப் பறித்த உடனேயே பயன்படுத்தி செய்யப்படும் மருத்துகளே நோயை விரைவாகத் தீர்க்கும் வீரியம் கொண்டதாக இருக்கும். 

ஆதனால் தான் நம் முன்னோர்கள் தேவைக்கு ஏற்ப காடு மலைகளில் தேடித்திரிந்து, மூலிகையைப் பறித்து வந்து, உடனே மருந்து தயார் செய்து கொடுக்க மக்கள் நோயை தீர்த்துக் கொள்ள முடிந்தது.

ஆனால், இன்று எல்லாமே (ப, பி)ணமாகி விட்ட காலத்தில், (ப, பி)ணத்திற்காக வளர்க்கப்பட்டு, (ப, பி)ணத்திற்காகவே பல மாதங்கள் வைத்திருந்து, மூலிகையின் தன்மை குறைவுடன் விற்கப்பட்டு, (ப, பி)ணத்திற்காகவே செய்யப்பட்டு கொடுக்கப்படும் மருந்துகளில், எப்படி நோய்த்தீர வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்??

எப்பொழுதுமே மருந்தை உட்கொள்ளும் நோயாளிக்கு, ‘இம்மருந்தால் நம் நோய் தீருமா என்ற அவநம்பிக்கையே அந்நோய் முற்றிலுமாக தீரும் வரைக்கும் இருக்கும்’ என்ற நிலையில், பணமே பிரதானமாக வளர்க்கப்பட்டு, மருந்தாக வந்து சேர்ந்ததில், நோய் தீரக்கூடாது என்ற எண்ணத்தை தவிர வேறெதுவும் மேலோங்கி இருக்க வாய்ப்பே இல்லை என்னும் போது, அந்நோய் எப்படி தீரும்???

எனவே, மூலிகையை வளர்ப்பவர்களும், விற்பவர்களும்,  வைத்தியர்களும்  தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளா விட்டால், செத்த மருத்துவம் ஆகிக் கொண்டிருக்கும் சித்த மருத்துவத்திற்கு கூடிய விரைவில் சமாதி கட்டி விடு(வா, வீ)ர்கள்.

எது எப்படி இருப்பினும், நான் யாருக்கும் எங்கும் எதற்காகவும் எப்பொழுதும் யாரையும் நம்பி அடிமை வாழ்வு வாழமாட்டேன்.

மாறாக, என்னை நானே தற்காத்துக் கொள்ளும் தற்சார்பு வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன் என்பவர்கள்  எதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும், எதையும் தீர்த்துக் கொள்ள வேண்டும், இதற்கான ஏற்பாடுகளை நாமே செய்துக் கொள்ள வேண்டும் என்கிற தீர்க்கத் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இப்படி எடுப்பவர்களுக்கே நிம்மதியான நல்வாழ்வு கிட்டும். அவ்வளவே!

குறிப்பு: வாய்ப்புள்ளவர்கள் அரசு ஏற்பாடு செய்துள்ள மூலிகை கண்காட்சிக்கு சென்று, மூலிகை குறித்த அறிவைப் பெறவும், இதன் மூலம் ஆதாயத்தை அடையவும் ஆதாரமாகவே இக்கட்டுரையை வரைந்துள்ளேன்.

மூலிகையின் மூல விளக்கம் குறித்து இதில் சொல்லியுள்ள தகவல் கண்காட்சியிலோ அல்லது வேறெங்குமோ கிடைக்க வாய்ப்பில்லை.

இந்தத் தலைப்பில், ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்ற எண்ண விதை, சில மாதங்களுக்கு முன்பே மனதில் விழுந்தது. இன்று விருச்சமாகி விட்டது.

சேர்க்கை நாள் 23-02-2018


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)