நான் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறேன். ஏதோ சிறு சத்தம் கேட்டு கண் விழித்தால், ஒரு திருடன் அனைத்தையும் களவாடிக் கொண்டு புறப்பட இருக்கிறான். நான் என்ன செய்வேன்?
எனக்கு எல்லா சட்டமும் நல்லா தெரியும். ஆகையால், நீ கிளம்பு. உன் மீது காவலூழியர்களிடம் புகார் கொடுத்துக் கொள்கிறேன் என்று சொல்வேனா அல்லது அத்திருடனைப் பிடித்து என்னுடையப் பொருட்களை மீட்பேனா?!
நானே அவனைப்பிடித்து மீன்பேன் என்பதுதான் புத்தி சாலிகளின் பதிலாக இருக்கும் என்பதோடு எந்த சட்டமும் தெரியாத அல்லது ஏதோ கொஞ்சந் தெரிந்த நீங்களுங்கூட அவனைப் பிடித்து மீட்கத்தானே செய்வீர்கள்?!
இப்படித்தான், இப்போது நீங்களும் பொய்யன் என்கிற நியாயத் திருடனிடம் இருந்து, எடுத்த எடுப்பிலேயே உங்களது நியாயத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், பொய்யர்களை வைத்து வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் அல்லது வழக்கை நடத்தும் எண்ணத்தில் உள்ள வாசகர்கள் சிலர், பொய்யர்கள் சரியாக வழக்கை நடத் துகிறார்களா என்பதை இந்த நூல்களை வைத்துக் கொண்டு கண்காணிக்கலாம் என முட்டாள்தனமாக நினைத் துப் பின், முற்றிலும் மோசம் போனதுண்டு.
இந்த விவரங்களை எல்லாம் இங்கு எழுத இயலாது. ஏனெனில், வாதாடியதால் நன்றாக இருப்பவர்களைப் பற்றி எழுதுவதுதான் சிறப்பே தவிர, எவ்வளவு சொன்னாலும் பொய்யர்களை நம்பி நாசமாய் போனவர்களைப் பற்றி, நான் எழுதுவதில் யாருக்கு என்ன சிறப்பு இருக்கு?
இந்த இடத்தில் நீங்கள் சரியாகப் புரிந்துக் கொள்ள வேண்டியது, சட்டத்தில் நான் சொல்வதை எல்லாம் தொழி லாகச் செய்யும் பொய்யர்களால் தான் செய்ய முடியாதே தவிர, தொழிலாகச் செய்யாத என்னைப்போல் உங்களாலும் சர்வ சாதாரணமாக செய்யமுடியும் என்பதையுந்தான்!
இதில், பொய்யன் என் உயிர் நண்பன் அல்லது உற்ற உறவு என யாராக வேண்டுமாலும் இருக்கலாம். யாருமே விதிவிலக்கே அல்ல என்பதால்தான், ‘‘வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! அது நானாகவே இருந் தாலும் அப்படித்தான்’’ என்ற அப்பழுக்கற்ற உண்மையை ‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’ நூலில் மிகவும் வெளிப்படையாகவே சொல்லி விட்டு, சட்ட விழிப்பறிவுணர்வைப் பற்றியே சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.
சத்தியவான் காந்தி கூட, இந்தியத் தன்னாட்சி நூலின் 11-வது கட்டுரையில், ‘‘வக்கீல்களும் மனிதர்களே. ஒவ்வொரு மனிதரிடமும் நல்ல குணமும் ஏதாவது இருக்கும். வக்கீல்கள் ஒரு நல்ல காரியம் செய்ததாக ஏதாவது சம்பவங்கள் இருக்கு மானால், அந்த நன்மை வக்கீல்கள் என்பதை விட மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் செய்ததாகும்’’ என்றே கூறியுள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தருனமிது.
ஆகவே, எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காத முடிவுகள், பின் எதற்குமே பயன்படாது என்பதைப் புரிந்து கொண்டால், உங்களுக்கு நல்லது. இல்லையேல், அப்பொய்யர்களுக்கே நல்லது என்பதை அனுபவித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு இப்படியும் ஓர் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பது, உங்களின் சித்தம் என்றால், அதனைத் தடுக்க யாரால் முடியும்?!
ஆமாம், இதற்கு நம் வாசகர்கள் சிலரையே உண்மையாகச் சொல்லலாம். இந்த வகையில் ஒரு வாசகரைப் பற்றி சொல்கிறேன்.
சகோதர வாசகர் ஒருவருக்கு, 2005 ஆம் ஆண்டில், விவாகரத்து வழக்கு. பொய்யரை வைத்து மனைவி மனுச் செய்திருந்ததால், குடும்பம் தொடர்பான வழக்குக்களில், குடும்ப நீதிமன்றங்கள் சட்டப் பிரிவு 13 இன்படி, பொய்யர்கள் வாதாட தடையுள்ள நிலையில், பொய்யரின் மனுவை ஏற்றுக் கொண்டது எப்படி என சட்டப்பிரச்சினையை எழுப்பும் மனுவை தயார் செய்துக் கொடுத்தேன்.
ஆனால், அவரோ அம்மனுவை நிதிபதிடம் தாக்கல் செய்வதற்கு முன்பு, அடிப்படை அறிவே இல்லாத அவரது (நா, தா)ய்மாமனிடம் காட்ட, இப்படியெல்லாம் மனு கொடுக்கக்கூடாது என்றும், வாய்தா நாளில் போகவேண்டாம் என அவர் சொல்லி விட, இவரும் போகவில்லை. ஆகையால், அவள் கேட்டபடி நிதிபதி விவாகரத்து கொடுத்து விட்டார்.
நான் எழுதிக் கொடுத்த மனுவை கொடுத்திருந்தால், வழக்கே திசைமாறி, விவாகரத்தில் இருந்து வாழ்வும் திசைமாறி இருக்கும்.
நான் எழுதிக் கொடுத்த மனுவை கொடுத்திருந்தால், வழக்கே திசைமாறி, விவாகரத்தில் இருந்து வாழ்வும் திசைமாறி இருக்கும்.
அப்போதே இவளுக்கு ஒரு இரண்டு வயதில் பெண் குழந்தை. ஆனால், மறுமணம் செய்து கொண்டாள். எனினும், ஏதோ சச்சரவு வந்து தந்தை வீட்டுக்கே வந்து விட்டாள். அப்போதைய இரண்டு வயதுப் பெண் குழந்தை, இப்போது கல்லூரிப் படிப்புக்கு சென்றிருக்க வேண்டும். இது இவளுகளின் நிலை.
இவரது நிலையோ, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாசம் காரணமாக, மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்து, பின் ஓரிரு வருடங்கள் கழித்து, பொருத்தமே இல்லாத வேறொருத்தியை திருமணம் செய்துக் கொண்டதால், முன்பு சுய கெளரவத்தோடு வாழ்ந்து வந்தவர், தற்போது மாமியார் வீட்டுப் பிள்ளை.
இந்த நிலையில் நான்கான்டுகளுக்கு முன்பு, தொழிலாளர் வழக்கு தாக்கல் செய்ய வேண்டி மனுவை எழுதித்தருமாறு கோரவே, அவனிடம் முன்பட்ட அனுபவத்தில், ‘‘நீயே எழுது; சரிபார்த்து சொல்கிறேன்’’ என்று சொல்லி விட்டேன். என் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றதும், ‘நான் பொய்யனின் உதவியோடு, வழக்கு தொடுக்கப் போகிறேன்’ என்றார்.
‘தொழிலாளர் வழக்கில் பொய்யர்கள் வாதாட தடை இருக்கிறது, நிர்வாகத்திடம் விலைபோய் விடுவார்கள்’ என்பது உட்பட, எவ்வளவு எச்சரிக்க வேண்டுமோ, அவ்வளவையும் எச்சரித்து விட்டு, பின் உன் விருப்பம் என்று சொல்லி விட்டேன்.
என்னுடைய எச்சரிக்கையை காதில் வாங்காமல், பொய்யனை வைத்து வழக்கு தொடுத்தார். இப்போது, நீங்கள் எச்சரித்தபடியே பொய்யன் நிர்வாகத்திடம் விலைபோய் விட்டான்.
ஆகையால், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்கள் வேண்டுமென கேட்க, நான் முன்பே சொன்னபடி, எடுக்க வேண்டிய நேரத்தில் எடுக்காத முடிவுகள், பின் எதற்குமே பயன்படாது என்ற அடிப்படையில், ‘இனிமேல், இந்நூல்கள் பயன் தராது. ஆகையால், நன்கொடை கொடுத்து வாங்கி வீணாக்க வேண்டாம்’ என்று சொல்லி விட்டேன். அவ்வளவுதான்!
வேறென்ன செய்ய?
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment