No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, December 19, 2017

சத்தியவான் காந்தியின் செயலர் கல்யாணம்!


1942 முதல் சத்தியவான் காந்தி கொல்லப்படும் வரை அவரின் செயலராக இருந்த திரு. கல்யாணம் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான நீதிமன்ற அனுபவங்களை விளக்குகிறது, இத்தொடர் கட்டுரை! 

ஆகவே, இக்கட்டுரையை படித்தப்பின் அடுத்துப் படிக்கத் தொடருங்கள்.


கெளரவத் தொழில் என்று சொல்லப்படும், சட்டம் மருத்துவம் பொறியியல் உள்ளிட்டவை அனைத்தும் மிகமிக கேவலமான தொழில்களே! ஆகையால், இது தொடர்பான நம் தேவைகளை நாம்தான் செய்துக் கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

இதில், இறுதியாக நமக்கான வீட்டை, நாமே திட்டமிட்டு கட்டலாம்! என்பதாகும். இதையும் படித்து விட்டு தொடருங்கள். ஏனெனில், இக்கட்டுரையில் சொல்லி உள்ளபடிதான், திரு. கல்யாணம் அவர்களுக்கு கட்டிட பொறியாளர் வீட்டை கட்டித் தராமல் இருந்துள்ளார், கட்டித்தந்த வீடும் ஒழுங்காய் இல்லை.

இதற்காக நிவாரணந்தேடி நீதிமன்ற சென்றபோது, காந்தியின் செயலர் கல்யாணத்துக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் மேற்கண்ட மூன்று பக்க கட்டுரையில் சொல்லப்பட்டு உள்ளது.

காந்தியுடன் இருந்தவருக்கு, நிதிபதிகளிடம் நாமே பேசலாம் என எண்ணி இருந்தவருக்கு, அதுபற்றிய சட்டத் தெளிவு இல்லாததால், சட்ட விரோதத் தொழில் செய்யும் பொய்யர்களிடம் சிக்கி உள்ளார்.

இதனை எழுதிய எழுத்தாளர் குமரி. எஸ். நீலகண்டனுக்கும், ‘‘வழக்காளியே வாதாடலாம்’’ என்பது பற்றி தெரியாமல், தவறான கருத்தை ‘‘ஆகஸ்ட் 15’’ என்றத் தலைப்பில், 2012 ஆம் ஆண்டில் நூலாகவே எழுதி உள்ளார். 

ஆமாம், இதிலிருந்துதான் தினமணி நாளிதழின் இலவச இணைப்பான தினமணி கதிரில் தொடர்ந்து 33 வாரங்கள் எழுதி முடிக்க இருக்கிறார். இந்த தொடர் 32 வது தொடர்.

சத்தியவான் காந்தி, பகுத்தறிவுப் பெரியார் என நூற்றாண்டுகளுக்கு முன்பே வாதாட ஆரம்பித்து, இன்றும் நானும் நம் வாசகர்கள் பலரும் வழக்காளிகளாக வாதாடி வரலாறு படைத்து வரும் நிலையிலும், இதுபற்றிய விரிவான விவரங்களை எழு நூல்களாகவே எழுதியுள்ள நிலையிலும்..,

இந்த உண்மைகளுக்கு மாறாக, ‘‘திரு. கல்யாணம் அவர்களின் சட்ட அறியாமையால் ஏற்பட்ட அனுபவத்தை மட்டும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு வழக்காளிகள் வாதாட முடியாது என்ற தவறான கருத்து’’ சில லட்சம் பிரதிகளில் அச்சாகி விட்டது, நிச்சயம் அபத்தந்தான்!

ஆமாம், எழுத்தாளர்களுக்கே அடிப்படை பேச்சுரிமை என்பது நீதிமன்றத்தில் வாதாடுவதற்கும் பொருந்தும் என தெரியவில்லையா அல்லது தெரிந்தே தவறான தகவல்களை பதிவு செய்து குழப்புகிறார்களா என்பது அவரவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால், என்னைப் பொருத்தவரை, இந்நவீன யுகத்தில் வாதாடும் உரிமைப்பற்றி, எத்தனை எத்தனையோ செய்திகள் வெளிவர, இது அத்துறையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

ஒருவேளை அப்படி இருந்தால், அவர்கள் மற்றவர் களின் உரிமை குறித்து எடுத்து உரைக்கு தகுதியுள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதோடு, எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ள அறவே அறிவும் தகுதியும் அற்றவர்கள்.

ஆகவே, 2012 ஆம் ஆண்டில், முதன் முதலாக வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 15 நூலின் அடுத்தடுத்தப் பதிப்புகளில் திருத்தி வெளியிட வலியுறுத்த உள்ளேன். அவர்கள் திருத்தி வெளியிடுகிறார்களோ இல்லையோ, இங்கு பதிவு செய்துள்ளதைப் போல, நம் நூல்களில் இதனை தவறாது பதிவு செய்வேன்.

ஆங்கிலேய அரசின் ஊழியராக இருந்த திரு. கல்யாணம் அவர்கள் காந்தியின் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட கொள்கைகளால் ஈர்க்கப் பட்டும், தன் அரசூழியத்தை இழந்தும், 1942 ஆம் ஆண்டில் சேர்ந்த அரசூழியத்தில் தான் பெற்ற வந்த கூலி, 250 இல் சேமித்து வைத்து இருந்த 2600 ரூபாயில், ரூ 2000 ஐ சபர்மதி ஆசிரமத்திற்கு நன்கொடையாக வழங்கியும், ஆசிரமத்தில் ஊதியம் வாங்காமலும் ஊழியத்தை தொடர்ந்து உள்ளார் என்று, ஆகஸ்ட் 15 நூலில் சொல்லப்பட்டு உள்ளது.

முன்பு நாமே வாதாட முடியாது என்று தவறாக சொல்லப்பட்டது போல, இதெல்லாம் எந்த அளவிற்கு சரியென தெரியவில்லை. ஏனெனில், 1942 ஆம் ஆண்டில் அரசூழியத்தில் ரூ. 250 கூலி கொடுக்கப் பட்டதாக சொல்வது, குடியரசு இந்தியாவில் கொடுத்ததை விட பல மடங்கு அதிகம்.

ஆனால், பகுத்தறிவு பெரியார் 10-05-1931 ஆம் ஆண்டில் எழுதிய தலையங்கத்தில், ‘‘நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள். 

ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்’’ என்று குறிப்பிட்டு உள்ளதை, இத்தளத்தின் முகப்பு பக்கத்திலேயே சொல்லி உள்ளேன்.

இந்த வகையில் பார்த்தால், நம் சொத்தை கொள்ளையடிக்க வந்த ஆங்கிலேயர்கள், அதற்கு உற்றத் துணையாக இருந்த நம் ஊழியர்களுக்கு கூலியை அளிக் கொடுத்து இருப்பார்கள் போலிருக்கிறது. இதுபற்றிய உண்மை என்ன என்பதை உங்களுக்கு தெரிந்தால், ஆதாரத்துடன் சொன்னால், சேர்த்து விடுகிறேன். அவ்வளவே!

சேர்க்கை நாள் 08-01-2018

கடந்த 24-12-2017 அன்று மதியம், சுமார் 3 மணி முதல் 4. 30 வரை 94 வயது இளைஞர் திரு. கல்யாணம் அவர்களை, நானும், அய்யப்பனும் சந்தித்துப் பேசும் பேற்றினைப் பெற்றோம்.

நாங்கள் சென்றபோது, 2 வது மாடியில் இருந்து 4 வது மாடியில் உள்ள தொட்டிகளில் பூச்செடிகளை நட்டுப் பராமரிக்கும் பணிகளைச் செய்துக் கொண்டிருந்தால், அதற்கு நாங்களும் சிறிது உதவ முடிந்தது.

நம்முடைய சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. நான் விரும்பிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரே தேனீரை தயாரித்துத் தந்தார். பருகி மகிழ்ந்தோம்.

சத்தியவான் காந்தியை சந்திக்கும் பேற்றினைப் பெறவில்லை என்றாலும், அவரோடு இறுதிவரை இருந்த இவரையாவது சந்திக்க முடிந்ததே என்ற ஆத்ம திருப்தியோடு, அவரது ஆசியோடும் விடை பெற்றோம். 

குறிப்பாக, இந்தக் கட்டுரையின் இறுதியில், 1942 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர் வாங்கியதாக சொன்ன கூலி 250 உண்மைதான் என்பது தெரிந்தது. 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)