No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, December 4, 2017

தனியார் நிறுவனங்கள் புறக்கணிக்கும், காவலூழிய வாரிசுகள்!அரசூழியத்துக்கு செல்ல வேண்டுமென்றால் ஆயிரத்தெட்டு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதை எல்லாம் மீறி அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம் ஆகியவற்றால் மட்டுமே அரசுப்பணிக்கு செல்ல முடியும் என்பது ஊரறிந்த இரகசியந்தான்! 

தனியார் பணி என்பதும் சாதாரணமானது அல்ல. பிரபல நிறுவனங்களில் அரசுப் பணியை விட, எழுத்துத் தேர்வுகள் கடினமாக இருக்கும். இதில், வேலை தேடுவோரின் மனதைப் பரிசோதிக்கும் தேர்வும் நடக்கும். நேர்முகத் தேர்வும் நடக்கும். அதன் பிறகே, பணி நியமண கடிதம் வழங்கப்படும். 

இதில், மிக முக்கியமானது என்றால், கடுமையாக உழைக்கும் திறனைப் பெற்று இருக்க வேண்டும். அரசூழியத்தைப் போல சுத்த சோம்பேறிகளை எல்லாம் தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்துவிட மாட்டார்கள். இதையெல்லாம், நான் அனுபவத்தில் உணர்ந்தவன். 

இதே பெண்கள் எனில், அவர்களின் தேர்ச்சி முறை வேறுபடும்.  நாகரீகம் கருதி  வேறுபாட்டை விலக்க முடியாது. நீங்களே யோசித்துக் கொள்ள வேண்டியது தான். 

ஆனாலிது, எல்லாப் பெண்களுக்கும் அல்ல; மாறாக, ‘‘குறிப்பிட்ட வேலையைப் பெற தன்னையே விலையாக கொடுத்து படுக்கத் துணிந்த பெண்களுக்கு அல்ல அல்ல விலை மாதர்களுக்கு மட்டுமே! இது தனியார் ஊழியத்தைப் போலவே, அரசூழியத்திலும் உண்டு!!’’

இதையெல்லாம் விட கொடுமை, ‘‘சாமியார் மடங்களைப் போல தன்னார்வ (ஃப, தொ)ண்டு நிறுவனங்களில், இல்லாத நிறுவனங்களே இல்லை’’ என்பதை, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் தெளிவுபட சொல்லி உள்ளேன். 

இது ஒன்றைத்தவிர, மற்றவை எல்லாம் இரண்டு ஊழியத்திலும்  நேரெதிராகத்தான் இருக்கும். 

ஆமாம், அரசூழியத்துக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் பலம் மற்றும் இலஞ்ச பலம் தனியார் நிறுவனங்களில் கீழ் மட்டத்தில் இருப்பதில்லை. மேல் மட்டத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. 

clip

இந்தச் செய்தியில் உள்ளபடி, காவலூழியக் குடும்பங்களை மட்டும் அழைத்து, ஒரே நாளில் அனைத்துத் தேர்வுகளையும் முடித்து தனியார் நிறுவனங்களில் வேலை கொடுப்பது என்பது, நிச்சயமாக உழியங் கொடுத்ததாக சொல்லப்படும் 47 நிறுவனங்களின் முடிவாக இருக்காது.

ஏனெனில், இவர்களால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதை, தனியார் நிறுவனத்தார் அறியாதவர்கள் அல்லர்! தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல விரும்பு பவர்களில், காவலூழியர் களின் குடும்பத்தாரை முற்றிலுமாக நிராகரித்து விடுவார்கள். 

ஆமாம், இதனை நீங்கள் சோதித்து அறிய விரும்பினால், உங்களோடு வேலை செய்யும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வேலை செய்யும் நபர்களோடு, எத்தனை பேர் காவலூழியர்கள் வாரிசுகள் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். விடை பூஜியமாகவே இருக்கும்.

ஆனாலிது. தொழில்துறையில் ஜாம்பவான்களாக உள்ள மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள், கால் சென்டர்கள், தனியார் வங்கிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஏனெனில், இவற்றில் வேலை பார்க்கும் அளவிற்கு திறன் கொண்ட வாரிசுகள் தறுதலையாக இருக்க முடியாதுதானே? அதான்!

அப்படியானால், காவலூழியர்களின் தறுதலை வாரிசுகளுக்கு என்னதான் வழி என்ற கேள்வி எழுகிறது அல்லவா?!

இதற்கு விடையென்று சொல்லப் போனால், காவலூழியர்களின் தறுதலை வாரிசுகளை காப்பாற்ற, அக்காவல் ஊழியர்களால் உண்டாக்கப் பட்டதே ‘‘ஊர்க்காவல் படை’’ என்ற அமைப்பு. 

ஆகையால், இதில் அதிகபட்சம் அத்தறுதலைகளே இருப்பர். மற்ற இளைஞர்களின் பங்கு மிகமிகக் குறைவாகவே இருக்கும். வேண்டுமானால், சோதித்துப் பார்த்து சொல்லுங்கள். 

இதில், அவர்களுக்குள்ள பல நன்மைகளில் ஒன்று, இப்படையில் உள்ள தங்களின் வாரிசுகளையே, காவலூழியர்கள் புனையும் பொய் வழக்குக்களில் சாட்சிகளாக போடுவர்.

இதையெல்லாம், நான் 2001 ஆம் ஆண்டே ஆராய்ந் தறிந்து, வேலூர் சிறையில் விசாரணை கைதியாக இருந்து, தானே வாதாடி விடுதலையான நீதியைத் தேடி... வாசகர் வேலுச்சாமி மீதான வழக்கில் சாட்சியாக இருந்த காவலூழியரின் மகனை, விஜய் தொலைக்காட்சியில், நடிகை லட்சுமி தொகுத்து வழங்கிய, ‘‘கதையல்ல நிஜம்’’ நிகழ்ச்சியில் ஒப்புக் கொள்ள வைத்தோம்.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்த, உந்துனர் அறக் கட்டளையின் தலைவராக இருந்த, அமரர் ஆ.கி. வேங்கட சுப்ரமணியன் இந்திய ஆட்சிப் பணி ஊழியர் கூட, வியந்து கடிதம் எழுதினார். 

நம் நீதியைத்தேடி... குற்ற விசாரணை நூலை, அவர் பொறுப்பேற்று நடத்தி வந்த சுமார் 240 மக்கள் மையங் களுக்கும் உ(ய)ரிய நன்கொடையை கொடுத்து வாங்கியதோடு, அவர் ஆசிரியராக இருந்த குடிமக்கள் முரசு மாத இதழில் மதிப்புரை எழுதியும் சிறப்பித்தார். 

சரி, நம்ம விட்ட விசயத்துக்கு வருவோம்.

ஆகவே, மேற்கண்ட செய்தியில் உள்ளது, வேறு வகையில் சட்டத்துக்கு விரோதமாக நடத்தப்பட்டு உள்ளது என்றே துணிந்து சொல்லலாம்.

‘‘மநு வரையுங்கலை!’’ நூலில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஊழியர் ‘‘திருட்டு தேவன்’’ ஐப்பற்றி எழுதி உள்ளேன். இத்தேவனின் மீதும், மற்ற ஊழியர்களின் மீதும் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்காமல் இருந்தது, ‘‘இந்திய காவல் பணி ஊழியர் சீமா அகர்வால்’’. 

இப்போது, இந்த சீமாட்டி, ‘‘மாநில குற்ற ஆவண காப்பக’’ பொறுப்பு ஊழியத்தில் உள்ளாராம். சரிதான்! புரியவில்லையா, மேற்கோளில் உள்ள ஊழியத்தை மீண்டும் சரியாகப் படியுங்கள், புரியும்!!

தன் தகுதிக்கு ஏற்ற பொறுப்பு ஊழியத்தில்தான் தற்போது இருக்கிறார் என்பதோடு, அதே தகுதியோடு இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கும் பொறுப்பு வகித்து உள்ளதால், உயர்மட்ட காவலூழியர்கள் என்ற அதிகார துஷ்பிரயோகத்தினாலேயே காவலூழியர்களின் வாரிசுகள் 2000 பேருக்கு வேலை கொடுக்கப்பட்டு உள்ளது என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இதன் மூலம், நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘காவலூழியர்களின் வாரிசுகள் எல்லாம் சுயமாக வேலைதேட தகுதி இல்லாத தறுதலைகள் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதையும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்’’. இல்லையெனில், இதுபோன்ற திட்டமிட்ட வேலை வாய்ப்பு முகாம்களே தேவைப்படாது. 

எது எப்படியோ, விவரமானவன் நிச்சயமாக வேலை கொடுத்திருக்க மாட்டான். வேலையைக் கொடுத்து, தன் காரியம் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வேலையை கொடுத்தவன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டோமே என விரைவில் வருத்தப்படுவான். அவ்வளவே!

காவலூழியர்களின் வாரிசுகளுக்கே இந்த அவலநிலை என்றால், காவலூழியர்கள் உள்ளிட்ட அரசூழியர் களுக்கு வேலை போனால், தனியார் நிறுவனங்களில் யார் வேலை தருவார்கள்? 

அப்படியே பாவப்பட்டு தந்தாலுங்கூட, இந்தச் சோம்பேறிகளால் என்ன வேலையைப் பார்க்க முடியும்??

இந்த உண்மைகளைப் புரிந்துக் கொண்டால், நீயும் அவர்களுக்கு முதலாளியே! அவர்கள் உனக்கு ஊழியர்களே என்பது, ஒருசேரப் புரிந்து விடும்!!  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)