No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, November 21, 2017

ஆளுநர்களுக்கே, ஆய்வு செய்யும் அதிகாரமுண்டு!‘‘ஆளுநர்’’ என்ற சொல்லின் மூலம், அவரின் அதிகாரங்கள் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை முட்டாள்களும் நன்கு அறியலாம்.

ஆமாம், இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கடமைகளின் படி, மாநிலத்தின் நிர்வாக அதிகாரம் ஆளுநரிடந்தான் இருக்கிறது.  

இதனை அவர் நேரடியாகவும், தேவையான ஊழியர்களைக் கொண்டும் கண்காணிக்கலாம் என்று இந்திய சாசனக் கோட்பாடு 154(1) இல் தெளிவு படுத்தப்பட்டு உள்ளது என்பது உட்பட பல்வேறு சங்கதிகளை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் சொல்லி உள்ளேன். 

இதன்படிதான், தலைமைச் செயலாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரையென அத்தனை அத்தனை அடிமை ஊழியர்களும் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதை விட, கூலிக்கு மாரடிக்கிறார்களே என்று சொல்வதே சரியானது. 

இவர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கடமையும் ஆளுநருக்குத்தான் இருக்கிறதே தவிர, முதலமைச்சர் உள்ளிட்ட என்றவொரு அரசியல் வியாதிக்குங் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், ‘‘உத்தர விடுகிறேன்’’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த தகுதி யற்றவர்கள்.

ஆமாம், அமைச்சர்களால் கீழ்நிலை  அரசூழியனைக் கூட பணியிடை நீக்கம் செய்ய முடியாது. சட்டப்படி இவர்களது அதிகாரம் பல் பிடுங்கப்பட்ட பாம்புப் போல, ‘‘பரிந்துரைப்பது மட்டுந்தான். இதனை ‘‘ஆலோசனை என்றும் சொல்லலாம்’’.

இதுவே, இவர்களுக்கு இந்திய சாசனத்தில் வழங்கப் பட்டுள்ள அதிகபட்ச உரிமை. இதில், உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்களது கடிதங்கள் எதுவும் கிடைத்தால், படித்துப் பாருங்கள் அல்லது கோட்பாடு 

இவர்களின் பரிந்துரையை ஏற்பதும், ஏற்காததும் அளுநரின் அடிவைப் பொறுத்தது. ஆனால், அரசியல் வழியாக ஆளுநராகும் முட்டாள்கள் தங்களின் சட்டப்படின அதிகாரங்களை பயன்படுத்தாமல், அரசியல் வியாதிகளுக்கு ஜால்ரா போட்டு வந்தனர். 

ஆனால், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட புரோஹித்தோ, சுமார் 70 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் புதிதாக ஆய்வு செய்யத் தொடங்கியதால், ஆதரவு அரசியல் வியாதிகளைத் தவிர, மற்ற அரசியல் வியாதிகளும், ‘‘ஆளுநருக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை’’ எனக்கூறி குய்யோ முய்யோ எனக் கூக்குரல் இட்டு வந்தன. வந்தன என்று அஃறினையில் குறிப்பிடுவது சரியானதுதான்!

ஏனெனில், நாராயணசாமி போன்று இப்படியும் பல கோமாளிகள் அறிக்கை விட்டனர்.

இதனை அடுத்து ஆளுநர் மாளிகையே தனக்குள்ள ஆய்வு உரிமை குறித்து, இப்படியொரு அறிக்கை 20-11-2017 வெளியிட்டு உள்ளது.


இதில், கொடுமை என்னவென்றால் ஆளுநர் புரோகித் சட்டம் பயின்றவர். ஆளுநர் என்பதால், உயர்நீதிமன்ற நிதிபதிகளுக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கும் தகுதியில் உள்ளவர்.

மேலும், அரசியல் வியாதிகளுக்கு பதவிப் பிரணமானமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கும் தகுதியில் உள்ளவர் என்னும் நிலையில், இவருக்கு இல்லாத தகுதியேது? இவருக்கில்லாத தகுதி அரசியல் வியாதிகளுக்கு எப்படி வரும்??

ஆனால், இவர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், நான் முன்னரே சொன்னபடி, இந்திய சாசனக் கோட்பாடு 154(1)-இன் படியுள்ள  உரிமையை எடுத்துச் சொல்லாமல், சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்தாக சொல்லப்பட்டு உள்ளது.

மேலும், அசாமில் ஆளுநராக இருந்தபோது, செய்ததைத் தான் இங்கும் செய்கிறார் என்றும் கூறப்பட்டு உள்ளது முட்டாள்தனமாகவே இருக்கிறது.

ஏனெனில், ஒரு விடயத்தில் தன் விருப்பப்படி, செயல் படுவதற்கான உரிமையை ஆளுநருக்கு இந்திய சாசனக் கோட்பாடு 163(2) இல் வழங்கப்பட்டு உள்ளதோடு, இதுகுறித்து கேள்வி கேட்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கூட இல்லை எனவும் தெளிவுப் படுத்தப்பட்டு உள்ளது.

இதெல்லாம் தெரியாத கூமுட்டைகளா அரசியல் வியாதிகளும், ஆளுநரும்?! இல்லை யெனில், இதை யெல்லாம் மக்களுக்கு, தன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெளிவுபட எடுத்துச் சொல்லாத ஆளுநர் புரோஹித்துக்கு, இனியும் அப்பதவியில் அமர்ந்திருக்க என்ன சட்டத் தகுதி இருக்கு??!

சேர்க்கை நாள் 16-12-2017
தமிழக தலைமை ஊழியரின் ஆய்வு நடவடிக்கை, இந்திய சாசனத்தின்படி சரியானதே, என்பதை ஏற்க மறுக்கும் முட்டாள்கள் கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்!


அட, முத்தரசனும் ஆளுநர்களின் சட்ட உரிமை குறித்து அறியாத முட்டாள்தானா?!


சேர்க்கை நாள் 17-12-2017
பகுத்தறிவு அல்ல; பகூத்தறிவு!

clip

இவரைப் போன்ற, ‘‘சட்டம் படித்த தொழில் முறைப் பொய்யர்கள் எப்பவுமே, இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருக்கு’’ என்றுமே சொல்லுவார்கள்.

ஆனால், அதனை சட்டப்படி நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் அல்லது சட்ட விளக்கங்கள் என்ன என்பதை வெளிப்படையாக எடுத்துச் சொல்ல மாட்டார்கள்.

ஏனெனில், இல்லாததை (சொ, மெ)ல்லுவது போல, இதுதான் அது என்று, இல்லாத ஒன்றை வெளிப்படையாக எடுத்துக் காட்ட முடியாதே, அதான்!
clip
இப்பதான் ஆளுநர் மாளிகை, ஆளுநருக்கு ஆய்வு செய்யும் உரிமை குறித்து ஓரளவிற்கு எடுத்துச் சொல்லி உள்ளது. ஆனால், நாம் குறிப்பிட்டுச் சொல்லும், இந்திய சாசனக் கோட்பாடுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ஆ(கையா, னா)லும், அரசியல் வியாதிகளின் கண்டன கூத்துக்கள் தொடரும் என நம்பலாம்.

சேர்க்கை நாள் 18-12-2017


அட அறிவுவறுமையே...


சேர்க்கை நாள்: 05-01-2018 

சபாஷ், கிரேன்பேடி!

clip
‘‘ஆளுநர்’’ என்ற சொல்லிலேயே, அவர்தான் ‘‘ஆளும் உரிமை உள்ளவர்’’ என்ற அர்த்தம் இருக்க ஆனால், அரசியல் வியாதிகளோ ஆளுநர்களை எதிர்க்க என்ன காரணம் (நம் இஷ்டப்படி திட்டங்களை தீட்டி திருட முடியவிலையே) என்பது, இந்த செய்தியில் விளங்கும்.
அரசியல் வியாதிகளின் தொண்டர்கள் என்ற பெயரில் உலாவரும் குண்டர்களுக்கும், எடுபிடிகளுக்கும் இதெல்லாம் நன்றாகவே தெரியும். 
இந்திய சாசனத்தின்படி, ஆளுநரின் மீதான புகாரை, குடியரசுத் தலைவரிடந்தான் தெரிவிக்க முடியும் என்று கூட, தெரியாத அரசியல் வியாதிதான், நாராயணசாமியா?!
இதுபோலவே, தன்னிடம் கேள்வி கேள்வி கேட்க வேண்டியது இந்தியத் தலைமை ஊழியரே (குடியரசுத் தலைவரே) என்று தெரியாமல், கிரன்பேடி பிரதமருக்கு விளக்கம் சொல்ல வேண்டியது ஏனோ?!

இதே (நா, வே)றவாய் நாராயணசாமி மத்திய அமைச்சராகவும், புதுவையில் இரங்கசாமி முதல்வராக இருந்தபோது, அளித்த இப்(பே, போ)ட்டியில், துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் என்று சொன்ன காணொலி. சேர்க்கை நாள் 18-02-2018

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய கடமை அரசியல் வியாதிகளுக்கு அன்று; ஆளுநர்களுக்கே என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள தொடங்கி விட்டனர் போலும்!


சேர்க்கை நாள் 27-02-2018

நாந்தான் டாப்பு; 
நீயெல்லாம் என்னோட டூப்பு!
என்றல்லவா தலைப்பை போட்டிருக்க வேண்டும்?
சேர்க்கை நாள்: 23-03-2018

நான் சொன்னா சொன்னதுதானே!2009 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். தற்போதைய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோது, டில்லியில் இருந்த அவரது வீட்டில் நேரில் சந்தித்து நம் நூல்களை கொடுத்து வந்தேன். படிச்சாதானே?!

அமைச்சர்களுடன் ஆலோசித்தால் ஆளுநருக்கு உள்ள உரிமை இல்லாமல் போய்விடுமா?!

பிற்கேர்க்கை நாள்: 06-06-2018

ஏன், நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது?!
வெங்கையாவுக்கு வெயில் தாங்கலையோ!
ஆளுநரின் அதிகாரங் குறித்து தவறாக, அதாவது மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டியதை ஆளுநர்கள் செய்ய வேண்டுமென இந்திய சாசனத்துக்கு எதிராக சொல்லி உள்ளார்.

சேர்க்கை நாள்: 25-06-2018

இனி யார் போராடுவர்?!

பொழுது போகாமல், போராட்டம் செய்தவர்களுக்கு, சட்டப்படியும் அதிரடியாகவும் வைக்கப்பட்டு விட்டது ஆப்பு!

இனி குவாட்டருக்கும், பிரியாணிக்கும் ஆசைப்பட்டு போராட போனால், அப்புறம் ஏழு வருசத்துக்கு சிறை சோறுதான். 


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)