சட்டப்படிப்பின் மூலம் சட்ட விரோத தொழிலைச் செய்பவர்களை நான் ‘‘பொய்யர்கள்’’ என்று கூறும் போதெல்லாம், ஏதேதோ காரணங் களுக்காக அப்படிப்பட்ட பொய்யர்களோடு நட்பில் உள்ளவர்களுக்கு சற்றேனும் கோபம் வருவது சகஜமே!
இதற்காக நான் ஒருபோதும் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது என்பதால், அப்படி சொல்வதை விட்டதில்லை. இனி சொல்லாமல் விடப் போவதுமில்லை.
ஆனால், இதை எல்லாம் படிக்காமலும், படித்தாலும் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமலும், நம் வாசகர்களில் சிலர், சிறந்த பொய்யராக போவதாக சொல்லுவார்கள். (இ, எ)ப்படி சொல்பவர்களுக்காகவும் இந்தத் தலையங்கம்.
பொய்யர்களில், ‘‘சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள், போலிப் பொய்யர்கள், அரசுப் பொய்யர்கள், சகோதரப் பொய்யர்கள், உறவுப் பொய்யர்கள், நட்புப் பொய்யர்கள், சங்கப் பொய்யர்கள், இயக்கப் பொய்யர்கள், அரசியல் கட்சிப் பொய்யர்கள்’’ என ஒவ்வொரு வருக்கும் தக்கவாறு ஒவ்வொரு வகையில் பல ரகப் பொய்யர்கள் உள்ளனர்.
இவர்கள் எல்லாம் அவர்களை காத்துக் கொள்ளவே அத்தொழிலைச் செய்கிறார்களே ஒழிய, உங்களையோ, அரசையோ, நட்பையோ, கட்சியையோ காப்பற்ற அல்ல என்று நான் சொன்னால், உங்களால் நம்பவே முடியாது.
ஆனால், இதுதான் உண்மை என்பதை காலங் கடந்து உணர்வீர்கள். ஆனால், அதற்குள் இழக்க கூடாததை எல்லாம் இழந்து விடுவீர்கள்.
இப்படித்தான், பலரகப் பொய்யர்களிடம் சிக்கிய பலரும், நம் நூல்களை வாங்குபவர்களும் தினந்தினம் புலம்புகின்றனர்.
இதில் மிக முக்கியமாக கடந்த மாதங்கூட, ஓர் அரசியல் கட்சியின் பொய்யரை மலைப்போல நம்பி இருந்த அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பாளர் ஒருவர், ‘‘அண்ணே நீங்க பொய்யர்கள் என்று சொல்லும் போதெல்லாம், நம் கட்சியில் உள்ளவர்கள் அப்படியல்ல என நம்பி இருந்தேன்.
ஆனால், எனக்கு வம்பு வழக்கு என வந்து, அவர்களின் உதவியை நாடிப் போன பிறகுதான், பொய்யர்கள் என நீங்கள் சொல்வதெல்லாம் மிக குறைவு என்பது புரிந்தது’’ என்றார்.
இவர் குறிப்பிடும் பொய்யர்கள், சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடுவதாக பொய்ச் சொல்லும் பிரபலப் பொய்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கெனவே நம் வாசகராக இருந்தாலும், கட்சிக்காரப் பொய்யர்கள் காப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையில், நம் நூல்களில் கவனம் செலுத்தாமல் இருந்தவர்.
மேலும், நம்மிடம் வாங்கிய சில செட் நூல்களை தெரிந்தப் பொய்யர்கள் சிலருக்கு பாரி வள்ளலைப் போல வாரி வழங்கி விட்டாராம்!
ஆனால், அப்பொய்யர்களோ அந்நூல்களின் கருத்துக்கு ஆட்சேபனை எதையும் தெரிவிக்க வில்லை என்பவர், அவருடைய அனுபவத்தின் அடிப்படையில் எப்படி தெரிவிப்பார்கள் என்கிறார் ?!
எனவே, பாதுகாத்து படிக்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் ஒரு செட் நூல்களை வாங்கியும் உள்ளார்.
எனவே, எந்தப் பொய்யரும் பொய்யரே என்பதை நினைவில் கொண்டு, நீங்களே நியாயத்தைப் பெற போராடுங்கள். அவ்வளவே!
சேர்க்கை நாள்: 28-02-2018
பொய்யர்கள் பொய்யர்களே!
இப்படி, பல உண்மைகளை சொல்லிச் சொல்லியே எனக்கு அலுத்துப் போய் விட்டது. ஆனாலும், அவ்வப்போது சொல்ல வேண்டியே இருக்கிறது.
ஏமாளிகள் யாராவது வந்தால், ‘‘எங்களுக்கு தெரியாத சட்டமில்லை’’ என்றும், நிதிபதிகள் கேள்வி எதுவும் கேட்டால், வண்டு முருகனைப் போல, ‘‘உங்களுக்கு தெரியாத சட்டமில்லை’’ என்று புளுகும் பொய்யர்கள், நம்மிடமும் புளுகத்தானே செய்வார்கள்.
நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களைக் கேட்ட, இந்தப் புளுகர், தான் ஒரு சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர் என்று, நம்மிடம் உண்மையை தெரிவித்துதானே நூல்களை கேட்டிருக்க வேண்டும்.
ஆனால், ஹீலர் பாஸ்கர் காணொலியைப் பார்த்ததாகவும், சட்டத்தைப் படிக்க விரும்புவதாகவும், வாட்ஸ்அப்பில் புளுகி உள்ளதை காணலாம்.
உண்மையை ஒருபோதும் ஒழிக்க முடியாது. தற்காலிகமாக ஒளித்து வைக்க மட்டுமே முடியும் என்பதற்கு இதுதான் ஆதாரம். இப்படி மாட்டும் போது, எதிலும் இப்படித்தான் வசமாக சிக்க நேரிடும்.
இந்த விவகாரத்தில் பொய்யர், நம்மிடம் சிக்கிக் கொண்டதைப் போல, உங்களுக்காக அவர் வாதாடிய வழக்கில் அவர் சிக்கமாட்டார். சிக்குவதும், சிறைக்குப் போகப் போவதும் நீங்களே! என்பதை விளங்கிக் கொள்ள,
இக்காணொலியை காணவும்.
தானொரு பொய்யன் என்பது, தெரிந்து விடக்கூடாது என்பதற்காக நம் நூல்களை கேட்ட தேதியில், இப்படத்தை வைத்திருக்க வில்லையாம். இப்போதே வைத்திருக்கிறார் என்கிறார்கள் கேர் சொசைட்டியில்.
ஆனாலும், நூல்கள் இருப்பில்லை என்பதால், இப்புளுகருக்கு கிடைக்கவில்லை என்பது, நமக்கான வெற்றியே!
நூல்களை விற்பது மட்டுமே நம் நோக்கமாக இருந்தால், எவன் எப்படி இருந்தால் நமக்கென்ன என்ற நிலைக்கே, நாம் போயிருப்போம்.
அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கும் எங்களிடமே இப்படித்தான் நடந்துக் கொள்கிறார்கள் என்றால், உங்களின் வழக்கில் என்னென்ன செய்து ஏமாற்றுவார்கள் என சிந்தித்துக் கொள்ளுங்கள்.
இப்படி திருட்டுத்தனமாக சட்டத்தைப் படித்து, பொய்த்தொழிலை செய்வதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.
பொய்யர்கள் சட்டந் தெரிந்தவர்கள் என நம்பும் மாக்களே, இவர்களின் ஈனப் புத்தியைப் புரிந்துக் கொள்ளுங்கள்.