No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, October 31, 2017

நம்மால் மட்டுமே, ‘‘இலஞ்ச, ஊழலை’’ ஒழிக்க முடியும்!
நேற்று 30-10-2017 முதல், ‘‘ஊழல் ஒழிப்பு வாரம்’’ துவங்கி உள்ளது. ஊழல் ஒழிப்பை இந்த ஒருவாரத்தில் மட்டும் பிரதானப் படுத்தினால் போதும் என்பதே, அவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

எனவே, ஊழலைச் செய்வோர், நாங்கள் ஊழலே செய்வதில்லை என்ற வகையில், இதனை மிகப்பெரிய அளவில் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும், காரிய அடிமைகளும், கயமைக் கோமாளி களும், வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர் களும் ஆன அரசூழியர்கள், வழக்கம் போலவே, ஆங்காங்கே வெற்றுச் சம்பிரதாய உறுதி மொழியை எடுத்துக் கொண்டு உள்ளனர்.

ஆமாம், ஒவ்வொரு வருடமும் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்களே, தொடர்ந்து ஊழல் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதானே?!

இவர்கள் நாம் செய்யும் ஊழலை நாமே வெளிப் படுத்தும் முட்டாள்கள் என்பதை அறியாதவர்களா என்றால் இல்லை; அப்புறம் ஏன் செய்கிறார்கள் என்றால், மக்களை மடையர்கள் ஆக்குவதற்கே!

‘‘ஊழல்’’ என்பது, திருடுவதற்கு என்றே தீட்டப்பட்ட திட்டங்களில் இருந்து நமக்கு தெரியாமல் ஏதோ வொரு வகையில் பணத்தை திருடுவது.

இதற்கான உதாரணமாக, சாலை போடுவது, பாலங்கள் கட்டுவது என்பதை சொல்லலாம். இதில் ஒதுக்கப்பட்ட தொகையில், எவ்வளவு செய்யப்பட்டது, எவ்வளவு ஊழல் செய்யப்பட்டது என்பது அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியாது.

ஆனால், இலஞ்சம் என்பது, நம்முடைய வேலையை செய்துக் கொடுப்பதற்காக நம்மிடம் இருந்து பெறப்படுவது என்பதால், நமக்கு தெரிந்தது.

இந்த புரிதல் கூட இல்லாமல், இரண்டும் ஒன்றே என்று எண்ணு(பவர்களு)ம் ஊழல் எதிர்ப்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆகையால்தான், இந்த விளக்கத்தைச் சொல்கிறேன்.

எனவே, ஊழலைச் செய்பவர்கள் நினைத்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். ஆனால், நாம் நினைத்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியும். இலஞ்சம் ஒழிந்தால் ஊழல் தானாகவே ஒழிய ஆரம்பித்து விடும்.

ஆகவே, இரண்டையும் ஒழிக்க வேண்டிய கடமை, முற்றிலுமாக நமக்கே இருக்கிறது. எனவேதான், இலஞ்சத்தை ஒழிக்க தேவையான சில சட்டப் பூர்வமான வழிமுறைகளை, 2008 ஆம் ஆண்டில் எழுதிய ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில்..,

1. அரசூழியர்களை சட்டப்படி கடமையாற்ற வைப்பது எப்படி?

2. சட்டப்படி இலஞ்சம் கொடுப்பது எப்படி?

3. இலஞ்ச ஒழிப்பு அமைப்புக்கள் என்ன செய்கின்றன?

4. இலஞ்சத்தை, பண அஞ்சலில் பாதுகாப்பாக அனுப்பலாம்!

5. அரசு மருத்துவ மனையில் இலஞ்சம் கேட்டால்...?

6. அரசூழியரின் மனைவிக்கு கடிதம் அனுப்பலாம்!

7. துட்டு கொடுக்காமல் எட்டு போட்டு உரிமம் பெற...

8. போக்குவரத்து காவலூழியர்களுக்கு போக்கு காட்டுவது எப்படி?

என்ற தலைப்புகளின் கீழ் சொன்னேன்.

இதனைப் படித்த சில அரசூழியர்கள், ‘‘என்னங்க, இப்படி யெல்லாம் ஐடியா கொடுத்து இருக்கீங்க’’ என்று புலம்பி இருக்கிறார்கள். அப்படியானால், இதன் விளைவுகள் என்ன மாதிரி இருக்கும் என்பதை, படித்த உடனேயே அவர்களால் புரிந்துக் கொள்ள முடிந்து இருக்கிறதுதானே?!

இதெல்லாம் சட்டத்துக்கு உட்பட்டது என்பதால், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்டு உள்ள கால அளவிற்குள் நம் வேலையை முடித்தே கொடுத்தாக வேண்டும்.

எனவே, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சொல்லியுள்ள இந்த வழி முறைகளை ஒவ்வொருவரும் கடைப் பிடித்தால், ஊழலை ஒழித்து விடலாம் என்பது, எனது ஆழ்ந்த அனுபவத்தின் வாயிலாக எழுந்த திடமான நம்பிக்கை.

ஆமாம், வழக்கம் போலவே, இதிலும் நான் கடைப் பிடித்த வழிமுறைகளையே உங்களுக்கு வழி மொழிந்து உள்ளேன்.

ஆமாம், சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று இருந்தால், எந்தவொரு சட்ட விரோதமான காரியத் தையும், இதிலும் குறிப்பாக அதிகாரத் திமிர் கொண்ட அரசூழியர்களின் சட்டத்துக்கு புறம்பான செயல்களை சட்டப்படியே சந்தித்து, தடுத்து நிறுத்துவதோடு, அவர்களையுங்கூட சந்தியில் நிறுத்த முடியும்.

அதிகாரத் திமிர்தானே இலஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும் தூண்டுகிறது. அதிகாரமே இல்லாமல் செய்து விட்டால், பல் பிடுங்கப்பட்ட பாம்புதானே?!

இப்படித்தான் இலஞ்சத்தையும் ஊழலையுங்கூட ஒழிக்க முடியுமே தவிர, ஊழலை ஒழிப்பதற்கு என்றே இருக்கிற ஊழல் அமைப்புக்களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது. இது அரசாங்க அமைப்புக்களாக இருந்தாலுஞ் சரி; தன்னார்வ அமைப்புக்களாக இருந்தாலுஞ் சரி.

ஆனால், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்கியவர்கள் கூட, அதனைப் படிக்காமலேயே புலம்பிக் கொண்டிருக்க, அவர்களை ஆழ்ந்து படித்து செயல்படுத்த வலியுறுத்தினேன். விளைவு?


இப்படி படித்தப்பின், அவ்வழிமுறைகளைப் பயன் படுத்தி பலர் பயன் அடைந்திருந்தாலுங்கூட, அது பற்றிய விவரங்களை ஏனோ சட்ட விழிப்பறிவுணர்வுப் பதிவாக பதிவிட முன்வரவில்லை.

ஆகையால், அதுபற்றி பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. எனவே, இலஞ்சத்தை ஒழிக்க வேண்டு மென நினைப்பவர்கள், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் வாயிலாக தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பதிவிட்டு பரப்புரை செய்யுங்கள்.

இப்படி செய்வதன் மூலம், சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாமல் இலஞ்சத்தை எதிர்க்கிறேன் என ஏடா கூடமான சட்ட சிக்கல்களில், அவர்கள் சிக்குவதை தவிர்க்கவும், தீவிரமாக எதிர்க்கவும் முடியும்!

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)