மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றார்கள்.
உண்மைதான்! ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பம், குழந்தைகளை விட்டு சந்நியாசம் செல்கிறான் என்றால், ‘‘அக்குடும்பத்தின் தலைவி அன்பானவளாக இல்லாமல் அரக்கியாக இருக்கிறாள்’’ என்றே அர்த்தம்.
மனைவியின் அரக்க குணம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால், விவாகரத்தைப் பெற்று தப்பித்து விடுவார்கள். மாறாக, குழந்தைகளின் திருமண வயதில் தெரிந்தால், அவர்களின் பாடு அதோகதிதான்!
மனைவியின் அரக்க குணம் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டால், விவாகரத்தைப் பெற்று தப்பித்து விடுவார்கள். மாறாக, குழந்தைகளின் திருமண வயதில் தெரிந்தால், அவர்களின் பாடு அதோகதிதான்!
அவள் அரக்கியாக இருக்கிறாள் என்றால், அவளுக்கு, அவளது அப்பாவில் ஆரம்பித்து, உடன் பிறப்புக் களிடையே ஓடி, அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை, பின் விளைவுகளை அறியாமல், அவளது அரக்கத் தனத்திற்கு பக்க பலமாய் இருக்கிறார்கள் என்று பொருள்.
ஆமாம், ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என அவர் போய் விடுவார். இப்படிப் போனவர், நிச்சயமாக பிணமாக கூட திரும்பி வரமாட்டார்.
இந்தப் பாட்டை எல்லாம் இந்த அர்த்தத்தோடு தான் பாடிச் சென்று உள்ளனர், நம் முன்னோர்! இப்படி ஒவ்வொரு பாட்டுக்கும் உள்ளர்த்தம் இருப்பதை, ஆராய்ந்தால்தான் அறிய முடியும்.
ஆமாம், ‘‘காசிக்குப் போகும் சந்நியாசி; உன் குடும்பம் என்னாகும் நீ யோசி’’ என்பதை, ‘‘காசிக்குப் போறேன் சந்நியாசி; உன் நிலைமை என்னாகும் நீ யோசி’’ என வேறு விதமாக மாற்றி எழுதி இருக்கேனேன்னு நினைக்காதிங்க.
இந்தப் பாட்டுல, சந்நியாசம் போக நினைத்தவரை தடுத்து, திருப்பி வீட்டிற்கு உள்ளேயே அனுப்பி விட்டார்கள். ஆனால், நானோ சந்நியாசம் போனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் நிலையும் என்னாகும் என்பதை, ஆராய்ந்து எடுத்து சொல்கிறேன். இதற்கேற்ப வசனத்தை மாற்றி அமைத்து இருக்கிறேன். அவ்வளவே!
சரி, நம்ம போனவர் விசயத்துக்கு வருவோம்.
போனவர் உயிரோடு இருக்காரா... இல்லையா...
நாம சுமங்கலியா இருக்கோமா... இல்லையா...
நாம பூ, பொட்டு வைத்துக் கொள்ளலாமா... கூடாதா...
சுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொள்ளலாமா... கூடாதா...
சுப நிகழ்வுகளில் முன்னின்று கலந்துக் கொண்டால், நம் உற்றாரும், உறவினரும், உடன் பிறந்தவர்களும், பெற்றெடுத்த பிள்ளைகளும், மற்றவர்களும் நம்மைப் பற்றி என்னென்ன நினைக்கிறார்களோ என்றும்...
தன் உடன் பிறப்புகள், அனைவரையும் அழைத்துக் கொண்டாடும் 25 வது திருமண நாள், 60 வயது சஷ்டியப் பூர்த்தி, அதற்கு மேல் இருந்தால் 80 வயது சதாபிஷேகம் என அவரவரும் ஆனந்தமாக கொண்டாடும் ஒவ்வொரு தருனத்தின் போதும்..,
நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பந்தத்தில் நிற்பதும்...
தன் மகனுக்கும், மகளுக்கும் தந்தையும் தாயுமாக கம்பீரமாக அமர்ந்து, திருமணம் செய்து வைக்க முடியாமல், உடன் பிறந்தவர்களை அல்லது முறையில்லாத நபர்களை முறையாக கருதி உட்கார வைத்து செய்து வைக்கும்போது..,
மிகவும் சந்தோசமாக இருக்க வேண்டிய, அத்தருனத்தில் நமக்கு இந்த வாய்ப்பு இருந்தும், நம் அரக்கப் புத்தியால் இல்லாமல் போய் விட்டதே என, அக்கூட்டத்தில் கூனிக்குறுகி நிர்ப்பதும்...
இதுபற்றி எல்லாம் தன் காதுபடவே பேசும் யாருக்கும் த(ர், க்)கப் பதில் சொல்ல முடியாமல், கேட்டும் கேட்காதது போல மனம் நோவதும் என...
அரக்கிகளாக திரிந்த அம்மனைவிகள் சாகும் வரை, மனப் போராட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து செத்து வாழ்வதுதான் சன்னியாசம் பூண்ட கணவன் தரும் தண்டனை!
இதுவுங்கூட வயது போய்விட்ட அல்லது மாற்றுத் துனை தேடமுடியாத பெண்களுக்கு மட்டுந்தான். வயதுள்ள பெண்களுக்கு வேறு யாராவது அகப்பட்டுக் கொள்வான்.
ஆமாம், ஊரறிந்த விபச்சாரிக்களுக்கே, பெரிய மனம் படைத்தவர்கள் வாழ்க்கை கொடுக்கிறார்களே!
குழந்தைகளைப் பொறுத்தவரை, சந்நியாசம் போக காரண அரக்கியாக இருந்த மனைவியை கேட்காமல், ‘‘உன் தந்தை எங்கே இருக்கிறார்’’ என அவரது குழந்தைகளைக் கேட்டால், உற்றார், உறவினர் என யார் கேட்டாலும், அக்குழந்தைகள் என்னத் தகுதியில் இருந்தாலும்..,
தங்களின் வீட்டில் நடந்த உண்மைகள் எதையும் வெளியில் சொல்ல முடியாமல், கூனிக்குறுதி தலையைக் கீழே தொங்கப் போடுவதையும், ஏதேதோ பொய்யைச் சொல்வதையும், அவர்களது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய அவலம் இருக்கும்.

ஆமாம், போனவர் பிணமாக வீடு வந்து சேர்ந்து விட்டால் கூட இதெல்லாம் தீர்க்கமான முடிவாகி விடும். ஆனால் ஆளும் இல்லை; அவரது உடலும் வீட்டுக்கு வரவில்லை என்றால் நிலைமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஆம், வாழ்வை வெறுத்து, சந்நியாசம் போன ஆண்கள் யாரும், பிணமாக கூட வீடு (தி, வி)ரும்ப மாட்டார்கள். இப்படி பலபேர் இ(றந்தி)ருக் கிறார்கள்.
ஆம், வாழ்வை வெறுத்து, சந்நியாசம் போன ஆண்கள் யாரும், பிணமாக கூட வீடு (தி, வி)ரும்ப மாட்டார்கள். இப்படி பலபேர் இ(றந்தி)ருக் கிறார்கள்.
குடும்பம் என்பது, கட்டிய மனைவி மட்டுமல்ல; பெற்ற குழந்தைகளும் சேர்ந்ததுதான். ஆகையால், காலப் போக்கில் அரக்கியாக விட்ட மனைவி களிடம் இருந்து தப்பிக்க, சந்நியாசம் போக நினைக்கும் ஆண்கள்..,
இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்ப்பதற்காக தனியாகப் பிரிந்து, அக்கம் பக்கத்தி லேயே வாழ முற்பட வேண்டுமே தவிர, கண் காணாத இடத்திற்கு சென்று, காலமானப் பின்னும் வராமலேயே போய் விடக்கூடாது.
இப்படிப் போய்விட்டால், இறைவனது வீடு பேற்றை பெருவீர்கள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இப்படித் தான், இறைவனது வீடுபேற்றைப் பெற வேண்டும் என்றால், வேறு வழியில்லை.
ஆனால், உங்களது வாழ்வைப் போலவே, உங்கள் குழந்தைகளின் குடும்ப வாழ்வும், பல்வேறு விதங்களில் கேள்விக்குறி ஆகிவிடும் ஆபத்துண்டு.
இதையெல்லாம் ஏதோ ஆண்களுக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் சொல்வதாக யாராவது நினைத்தால், அவர்களுக்கும் அப்படியொரு நிலை வர வேண்டும் என நான் எண்ணமாட்டேன்.

இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்பதற் காகத்தான், இந்த ஆராய்ச்சி விழிப்பறிவுணர்வுக் கட்டுரையை எழுதி உள்ளேன்.
எனவே, இதிலுள்ள உண்மையை உணர இப்படி யொரு நிலை எனக்கு வர வேண்டும் என்றோ அல்லது இப்படியொரு நிலையை அனுபவிப்பவரை காணச் செய்ய அருள் புரிய வேண்டுமென்றோ வேண்டிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நடக்கும். அப்போது உண்மையை உணரத்தானே வேண்டும்.
சரி, நான் சொல்வதை விடுங்கள்.
‘‘ஆவதும் பெண்ணாலே; மனிதன் அழிவதும் பெண்ணாலே’’ என்று யார்யாரோ எப்படி எப்படியோ எழுதி வைத்து விட்டார்கள். இதெல்லாம் ஆண்களே எழுதியது என்றால்..,
தன் பருவ அழகைக்கூட, வயோதிக வடிவமாக வேண்டிப் பெற்ற ஒளவைப் பாட்டிக்கூட, தான் விருந்துக்கு சென்ற வீட்டில், மனைவியாக இருந்த அரக்கியைப் பார்த்து விட்டு, இவளோடு வாழ்வதை விட என்னோடு சந்நியாசம் வந்து விடு என அழைத்துச் சென்று விட்டதாக செய்தி உண்டு.
கள்ளம், கபடம், சூது, வாது இல்லாத அந்தக் காலத்திலேயே அவ்வைக் கிழவி, ஒரு குடும்பத் தலைவனை தன்னோடு சந்நியாசம் அழைத்துச் செல்லும் அளவிற்கு பொங்கி எழுந்திருக்கிறாள் என்றால்..,
தன் கள்ளக் காதலன்களோடு சேர்ந்து கணவனையே கொலை செய்யும், இந்தக்கால அரக்கிகளைக் கண்டு, அந்த அவ்வைக் கிழவி இப்போது இருந்தால், என்ன செய்வாளோ, சொல்லுவாளோ!
எனவே, பெண்களே தங்களுக்கு வாய்த்த கணவன் எப்படி இருந்தாலும், கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என வாழ்ந்து விட்டுப் போய்ச் சேர முயலுங்கள்.
மாறாக, அறிவுப்பூர்வமாக முடிவு எடுப்பதாக நினைத்து, அரக்கத் தனமாக முடிவெடுக்காதீர்கள்! இப்படி அரக்கத்தனமாக முடிவு எடுக்கும், அரக்கி களுக்கு, நீங்கள் அவளது தந்தையோ, சகோதரனோ அல்லது மகனோ என யாராக இருந்தாலும் ஆதரவு தராதீர்கள்.
ஆதரவு தந்தால், நீங்களும் அதற்கான அனுபவத்தை அல்லது இதில் சொல்லியுள்ள ஒரு அனுபவத்தை யாவது பெறுவீர்கள். இப்படி, அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment