No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 27, 2017

ஏலம் என்றாலே, எச்சரிக்கையாகி விட வேண்டும்!


இன்று மின்னஞ்சலில் வந்த மடலின் சுருக்கமிது! 

// நான் கோவை, கணபதி, சத்திரோட்டில் இயங்கி வரும் மகாமேரு பெனிபிட் பண்ட் நிறுவனத்தில் நகைக்கடன் பெற்றேன் ரூ:2,06,000/- கடன் கணக்கு எண்: D28/17.03.2016

நான் இதுநாள் வரை ரொக்கமாக ரூபாய் 31900/- செலுத்தியுள்ளேன் அத்தொகையில் ரூபாய்: 16982/- அசலில் வரவு வைத்துள்ளார்கள் அதற்கு இரசீதும் வழங்கியுள்ளார்கள். 

தற்பொழுது எனது நகையை ஏலத்தில் விட்டு நகைகடனை வரவு வைத்தது போக மீதி தொகையை செலுத்தும்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். 

நான் எவ்வளவோ போராடியும் எனது நகையை ஏலத்தில் விட்டுவிட்டார்கள், காவல்துறையை நாடியும் எவ்வித பயனும் இல்லை எனவே எனக்கு தாங்கள்தான் உதவ வேண்டும்.// 

இவருக்கான எனது பதில்:

நீங்களே சட்டம் அறிந்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ள விரும்பினால், நீதியைத்தேடி... நூல்களை படிக்க வேண்டியிருக்கும்.

யாராவது தீர்த்து தரவேண்டுமென விரும்பினால், பிரச்சினையை பெரிதுபடுத்தி பணம் சம்பாதிப்பதற்கு என்றே உள்ள வக்கீல்கள் என்கிற பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களைத் தான் நாடனும்.

இதுபற்றிய மற்ற  விவரக் குறிப்புகள்:

வரும் முன் காக்கும் நடவடிக்கையாக, யாரும் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற விரும்புவதில்லை. வந்தப் பின், எனக்கு உதவ வேண்டும் என்றால், ‘‘நானென்ன பெ(ரு, று)ங் கூலிக்கு மாரடிக்கும் பொய்த் தொழிலையா’’ செய்கிறேன்?!

இதுகூட தெரியாமல், நான் உதவ வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வளவு கூமுட்டைகளாக இருக்கிறார்கள் என்பதை விவரிக்க வேண்டிய தில்லை.

ஆனால், தங்களின் பிரச்சினையை தீர்ப்பது எப்படி என தெரியாமலேயே பலபேர், தங்களை எல்லாந் தெரிந்த லாடு லபக்கு தாசுகள் போன்று காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும்..,

ஆகையால்தான், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்க வேண்டி இருந்தது என்பதையும் முதல் நீதியைத்தேடி... நூலிலேயே எழுதி, நான் உணர்ந்தது முற்றிலும் உண்மையே என்பதையும் நூல்கள் முழுவதும் நிறுவி உள்ளேன்.

இப்படித்தான் இம்மின்னஞ்சலை அனுப்பியவரும் இருக்கிறார் என தெரிகிறது. அதாவது இவர், ஒரு மாத இதழின் ஆசிரியராம்! 

மற்றொரு இதழில் துனை ஆசிரியராம்!! ஏதோவொரு நலச் சங்கத்தில் செயலராம்!!! பதிப்பகம் வேறு நடத்துவதாக, பெயருக்குப் பின்னால், ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

உண்மையை, ஒளிக்காமல் சொல்ல வேண்டுமானால், அறிவுள்ளவர்கள் எவரும் தன் அறிவைத்தான் நம்பு வார்களே தவிர, அவர்கள் இருக்கும் தகுதிகளை பட்டியல் போடவே மாட்டார்கள். அப்படிப் போட்டார்கள் என்றால், அவர்கள் முட்டாள்கள் என்றே அர்த்தம்.   

சரி, நம்ம தலைப்பு விசயத்துக்கு வருவோம்.

ஏலத்தில் விடுதல் என்பது மிகப் பெரிய மோசடி. ஆமாம், இதில் ஒரு பொருளுக்கான விலை மதிப்பு என்பதே கிடையாது. அவரவர்களும் விரும்பிய தொகைக்கு கேட்பதுதான் மதிப்பு. 

ஏல முறைகளை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று தன்னுடைய உடமையை தானே ஏலத்தில் விடுதல். அடுத்து, மற்றவன் பொருளை தன்னுடைய உரிமையை தவறாகப் பயன்படுத்தி ஏலத்தில் விடுதல். 

இவ்விரு முறைகளையும், இன்றைய இளைஞர்கள் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இரண்டாவது முறையை முதியவர்கள் கூட, பார்த்திருக்க முடியாது.


ஏனெனில், இதுபற்றி வெற்றுச் சடங்கு அறிவிப்புகள் எல்லாம், ஏலம் விட எத்தனிப் பவர்களின் அலுவலகங்களிலும், பொது மக்கள் படித்தும் படிக்காத நாளிதழ்களின் விளம்பரங்களில் மட்டுமே வரும். ஆகையால், இதுபற்றி சொல்வது சரியான புரிதலுக்கு ஏதுவாக இருக்கும். 

முதல் ஏல முறையில், அவர்களது பொருளை பொது இடத்தில் அல்லது மக்கள் அதிகமாக கூடும் சந்தைப் போன்ற இடங்களில், கூவிகூவி விற்பார்கள். 

அதன் ஆரம்ப விலை மற்றும் அதிகபட்ச விலை எவ்வளவு என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். 

அதிக விலைக்கு யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுத்து விடுவர் அல்லது அவர்கள் எதிர்ப்பார்த்த லாபத்திற்கு யாரும் கேட்கவில்லை எனில் வைத்து விட்டு, அடுத்த பொருளை விற்க ஆரம்பிப்பர். இப்படி எந்தவொரு பொருளையுங் கூட விற்பார்கள். 

இதில், அவர்களுடைய ஆட்கள் சிலரும், பொதுமக்கள் போல கலந்து கொண்டு விலையை ஏற்றி விடுவார்கள். அவர்கள் இறுதியாக கேட்கும் விலைக்கு, வேறு யாரும் கேட்கவில்லை எனில், அவர்களே வாங்குவது போல வாங்கி வைத்துக் கொள்வதில் நட்டமில்லை. 

இந்த முறையிலான ஏலம், அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. ஆகையால், நான் பார்த்தே வருடக்கணக்கில் ஆகி விட்டது. 

இரண்டாவதாக, மற்றவன் பொருளை தன்னுடைய உரிமையை தவறாகப் பயன்படுத்தி ஏலத்தில் விடுதல் என்று ஆரம்பத்திலேயே சொன்னேன். அதாவது, அவர்களுக்கு செலுத்தாது நிலுவையில் உள்ள ஐந்து ரூபாய்க்காக.., 

‘‘ஐந்து ஆயிரமோ அல்லது ஐந்து லட்சமோ கூட மதிப்புள்ள பொருளை, 50 பைசாவுக்குத்தான் ஏலம் போனது’’ என அவர் களுடைய பினாமிகளுக்கே விற்று விட்டு, நிலுவை ரூபாய் 4.50 ஐ செலுத்தச் சொல்லுவார்கள். 

இப்படித்தான் இவரது நகையை குறைந்த விலைக்கு விற்றதாகே கணக்கு காட்டி, மீதி தொகையை கட்டச் சொல்லி இருக்கிறார்கள் போலும். ஆமாம், ஆனால் இதுகுறித்த விவரங்களை சொல்லாததால், இப்படித் தான் இருக்க வேண்டும் என்பது அனுமானம். 

இடத்தின் பேரில் கடன் வாங்கி இருந்தால், இடத்தை கைப்பற்றி விடுவார்கள். சம்பந்தமே இல்லாமல் பல இடங்களில், இது எங்களுடைய சொத்து; அத்துமீறி நுழைவோர் தண்டிக்கப்படுவீர்கள் என வங்கிகள் அறிவிப்பு பலகைகளை வைத்திருப்பதை கண்டு இருப்பீர்கள். 

இதனை கிராமத்தை விட, அதிக விலை மதிப்புள்ள நகரப் பகுதிகளில் அதிகமாகவே காணலாம். இது எல்லாமே இப்படி கைப்பற்றப் பட்டதாகத் ன் இருக்கும். இதற்கு முன்பாக, இதுதொடர்பான சம்பிரதாய வழக்குக்களும் நடந்து இருக்கும். 

நிதிபதிகளால் ஜப்தி செய்யப்பட்டு, ஏலம் விடப்படும் ஏலங்களே இப்படித்தான், மிகவும் நா(ண, ன)யமாக இருக்கும். எனவே, ஏலம் என்றாலே எச்சரிக்கையாகி விட வேண்டும். 

ஆமாம், எப்படியாவது நம் பொருளை மீட்டு விட முயல வேண்டும். இல்லை எனில்,  அவ்வளவுதான்!  அவர்கள் சொல்வதுதான்!! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)