‘‘வீட்டை கட்டிப் பார்; கல்யாணத்தை செய்துப் பார்!’’ என்றார்கள் நம்ம முன்னோர்கள்.
இதற்கு பொதுவாக, ‘‘இவ்விரண்டையும் சுலபமாக செய்ய முடியாத அளவிற்கு பணம் செலவாகும்’’ என்றே பொருள் கொள்கின்றனர்.
ஓர் ஆராய்ச்சியாளர் என்ற வகையில் இது தவறு என்றும், இதனை வேறு விதமாகவுமே பார்க்க வேண்டு மென்றும் தோன்றுகிறது.
ஆமாம், வீட்டை கட்டிப்பார் என்பது பொது. ஆனால், கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பதில், யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு அனைவரும், தன்னுடைய மகன் அல்லது மகளுக்கே என்றே எண்ணத் தோன்றும். ஆனால், எனக்கு எண்ணத் தோன்றுவதோ, அவரவர்களுக்கே!
சரி, சங்கதிக்கு வருகிறேன்.
வீடு கட்டுவதில் மற்றவர்களை விட, தன்னால் 20% செலவை குறைக்க முடியும்; குறைந்தது 10% ஆவது குறையும் என்கிறார், அன்பர் ஒருவர்.
இதில், 10% தொகையை அவருக்கு தந்துவிட வேண்டும். நமக்கு 10% மிச்சம் என்கிற ஒப்பந்த அடிப்படையில் இதனை சேவையாக செய்கிறார். அதாவது, வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு மாத்திரமே இதனை செய்கிறார். கட்டுமான நிறுவனங்களுக்கு இதனை செய்யவில்லை.
அவரது கட்டுமானங்கள் எப்படி இருக்கிறது என்று ஆராய்ந்துப் பார்த்தேன். வித்தியாசமாகத்தான் இருந்தது. கட்டுமான துறையில் களமிறங்க வேண்டு மென்ற எண்ணத்துடன் உள்ள அன்பரையும் அழைத்துச் சென்றேன். அவரும் ஆச்சரியப்பட்டார்.
அதாவது வடிவமைப்புக்கு பெரிய அளவில் செலவு செய்து, வித்தியாசமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பலவற்றைப் பார்க்கலாம். ஆனால், மிகக் குறைந்த வடிவமைப்பு செலவில் கட்டிட வித்தியாசத்தை இவரிடம் பார்க்கலாம்.
ஆமாம், தான் நடத்தும் யோகா சென்டரை முக்கோண வடிவில் கட்டியுள்ளார். இவர் ஒருமுனையில் உள்ள மேடையில் அமர்ந்து யோகா உட்பட எதனை சொல்லிக் கொடுத்தாலும், அச்சு அசலாக அத்தனை பேருக்கும் தெளிவாக தெரியும்.
ஆகையால், கவனம் சிதறாது. இதில் தென்னங் கூரையை வேய்ந்து, அது காற்றில் தூக்காமல் சேதமாகாமல் இருக்க, மீன் வலையை மேலே போட்டு கட்டி விட்டார்.
மற்றொரு இடத்தில் ஃ வடிவில் மூன்று சிறுசிறு அறைகளை அமைத்து, இவ்வறைகளை ஒட்டி ஒரு திண்ணையையும் நடுவில் ஓரு சதுர வடிவ திண்ணையையும் அமைத்துள்ளார்.
ஆகையால், ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு வாசலில் இருந்தபடியே மற்ற இரு வீட்டாரிடமும் உரையாட முடியும். உண்மையில், இது அறுகோணம் அமைப்பு.
ஆனால், ஒன்றுக்கொன்று இடைவெளி இருப்பதால், முக்கோணம் போல் தெரியும். முக்கோணத்தின் சிறப்பு இயல்புகளைப்பற்றி, நானுங்கூட ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி உள்ளேன்.
இப்படியொரு வீட்டை அமைத்து, ஒன்றைப் படிக்கவும், அலுவலகமாகவும், இரண்டாவதை சமையல் மற்றும் சாப்பாட்டுக்காகவும், மூன்றாவதை உறங்கவும் பயன் படுத்தலாம். இம்மூன்றிலும் ஒருங்கினைந்த கழிவறை மற்றும் குளியல் அறையை அமைத்து உள்ளார்.
கூட்டுக் குடும்பத்தில் உள்ளோர், ஆளுக்கொன்றில் இருந்தால் தனியாகவும், கூட்டாகவும் இருப்பது போல் உணர்வு இருக்கும். இதனால், கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் பாதி பிரச்சினைகளும் குறையும்.
மிக முக்கியமாக இவருக்கென கட்டியுள்ள வீட்டின் மாடியில், கூலிங் டெயில்ஸைப் பதித்து உள்ளார். ஆகையால், வீடு எப்பொழுதும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.
மேலும், வீட்டில் மேலிருந்துதான் வெப்பமும், குளிரும் வீட்டிற்குள் இறங்கும் என்பதில்லை.
நான்கு பக்க வாட்டு சுவர்களில் இருந்தும் வெப்பம் இறங்கும் என்று கூறி, நான்கு பக்கமும் சுமார் ஆறடிக்கு தாழ்வாரத்தை அமைத்து, அதனைச் சுற்றி கம்பி வேலியையும் அமைத்து விட்டதால், வீட்டுக்குள் வெயில், குளிர் மட்டுமல்ல; வெளி நபர்களும், விலங்குகளுங்கூட எளிதில் செல்ல முடியாது.
மேலும், நான்குபக்க தாழ்வாரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளவோ, சந்திக்க வரும் முக்கியமல்லாத நபர்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்லாமல் இந்த இடத்தில் அமர வைத்து பேசி அனுப்பி விடலாம்.
சுப தினங்களில் இந்த இடத்தை பெரிய அளவில் சமைப்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி, வேறு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவோ முடிகிறது.
சுப தினங்களில் இந்த இடத்தை பெரிய அளவில் சமைப்பதற்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி, வேறு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவோ முடிகிறது.
வீட்டிற்கு மேலே செல்ல நிரந்தரமான கட்டுமானத்தை செய்யாமல், இரும்பினால் ஆன படிக்கட்டுகளை அமைத்து உள்ளது, இடத்தை மிச்சப்படுத்தி உள்ளதோடு, அதனை தேவைக்கு ஏற்ப எந்த பக்கமும் எளிதில் மாற்றி வைத்துக் கொள்ள முடியும். மேலும், இதற்கான செலவும் மிகக்குறைவு.
இதற்கு முன்பாக, நம் பாரம்பரிய முறைப்படி மண்ணால் கட்டி வாழ்ந்த கட்டிடங்கள் கடந்த சில ஆண்டுகளில் பெய்த பெருமழை மற்றும் காற்றில் விழுந்து விடவே, இப்போது இப்படி கட்டியுள்ளார்.
வீட்டை பராமரிக்க பணத்தையும், நேரத்தையும் செலவிட தயங்காதவர்கள், நம் பாரம்பரிய முறைப்படி மண் வீட்டையே கட்டிக் கொள்ளலாம். இதற்கான ஆட்கள் இன்றும் இருக்கிறார்கள்.
இதன் மேலே நமக்கு தக்க பனை அல்லது தென்னை உள்ளிட்ட ஓலைகளில் கூரையை வேய்ந்து, வெப்பத்தின் தாக்குதலில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
வீடு கட்டுவதற்கான இடம், அதனை கட்ட வேண்டிய முறையான மனையடி சாஸ்திரம் ஆகியவற்றின்படி, நாம் வீட்டை கட்ட முயலாமல் அல்லது இதுபற்றி தெரியாத வேலைக்காரர்களிடம் கட்டிட வேலையை ஒப்படைத்தால், அவ்வீடு எந்த விதத்திலும் பூர்த்தி யாகாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே, இவரின் கட்டுமானங்கள் எல்லாம், அவரவரது தொழிலைப் பொருத்தும், வாஸ்து அடிப்படையிலுமே இருக்கும் என்பதால், நீங்கள் எம்மதத்தவர் ஆயினும், இதில் சம்மதம் உள்ளவர்கள் மட்டும், இவரிடம் இலவச ஆலோசனையைப் பெற்று வீடுகட்டிக் கொள்ளலாம். அதாவது இயற்கை தந்த அறிவுக்கு கட்டணமில்லை என்பது கொள்கை.
ஆனால், வீட்டின் வரைபடம் உள்ளிட்ட உடல் உழைப்புக்கு மிக குறைந்த கட்டணத்தை அதாவது, வெளியில் ரூ 100 என்றால் இவர் ரூ 25 வாங்குவார்.
வரைபடத்தை குறுந்தகட்டில் காட்சிப்படுத்தி தந்து விடுவார். இதிலுள்ள குறைகளைப் போக்கிக் கொள்ள மூன்று வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. சாதாரண முறையில் கட்ட நினைக்கும் உங்களுக்கு இதெல்லாங் கூட தேவைப்படாது.
நம் வழக்கில் நாமே வாதாடுவதைப் போல, நம் உடல்நலக் குறைவை நாமே போக்கிக் கொள்வதைப் போல, நமக்கு தேவையான வீடு எப்படி இருக்க வேண்டுமென தெரிந்து வைத்திருந்தால்தான், நாம் நினைத்தபடியே வீட்டைப் பெறமுடியும்.
ஆமாம், நம் உயிரையும் சட்ட உரிமைகளையும் முறையே கூலிக்கு மாரடிக்கும் மருத்துவர்களிடமும், பொய்யர்களிடமும் பணயம் வைத்து விட்டு, நமக்கு திரும்ப கிடைக்குமா என காத்திருப்பதைப் போல, கட்டிடப் பொறியாளர்கள் என்கிற பொறுக்கிகளிடம் வீடு கட்ட ஒப்பந்தம் போட்டு விட்டு, காத்துக் கிடப்பவர்கள் ஏராளம்.
இதில் ஏற்படும் சண்டை சச்சரவில், நிதிபதிகளிடம் வழக்கை கொடுத்து, ஏன்டா வழக்குக்கு வந்தோம் என நொந்து கொண்டிருப்பவர்களும் இலட்சக் கணக்கில் உண்டு.
ஆமாம், இதற்கு நல்லதொரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மதுரையில் உள்ள போத்தீஸ் துணிக் கடைக்கு பின் பக்கத்தில் உள்ள பிரகாஷ் பிரிண்டர்ஸில்தான், நம் நூல்களை அச்சிடுகிறோம்.
இவர் தனது வீட்டின் மீது மேலும் இரண்டு மாடிகளை கட்ட திட்டம் போட்டு, கட்டடப் பொறியாளரிடம் ஒப்பந்தம் போட்டு, பல லட்சங்களை கொடுத்தும் விட்டார்.
ஆனால், ஒப்பந்தக் காரரோ இவரின் சம்மதம் இல்லாம லேயே, இவரது முழு இடத்தையும் உங்களுக்கு வாங்கி தருவதாக போஸ்தீஸ் துணிக் கடை உரிமையாளரிடம் சொல்லி விட்டார். யார் இடத்தை யாருக்கு விற்பது என யார் தீர்மானிப்பது?
அத்துணிக்கடையில் வேலை பார்ப்பவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக இந்த இடம், அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதால் தேவைப்பட்டது.
இதற்காக, ஒப்பந்தப்படி வேலையை செய்து தராமல், அவர்களுக்கு விற்று விடும்படி நிர்பந்தப்பட்டுத்த, இது தொடர்பாக இரு தரப்பாரும் கொடுத்த இரண்டு குற்றவியல் மற்றும் நுகர்வோர் வழக்குக்கள் என மூன்று வழக்கக்கள் நிலுவையில் இருந்து வருகிறது.
நான் தொடர்பில் இல்லாது, வட மாநிலத்தில் வசித்த காரணத்தினால், நம் சட்ட விழிப்பறி உணர்வுக்கு பல்வேறு வழிவகைகளில் உதவியாக இருந்த இவருக்கு நான் எந்தவித சட்ட வழி காட்டுதலையும் செய்ய முடியாமல் போய் விட்டது என்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
இதனால், இவர் தனது அச்சகத்தையே தன் சொந்த இடத்தில் நடத்த முடியாமல், வேறு வாடகை இடத்திற்கு மாற்றும் சூழ்நிலை உருவாகி மாற்றி விட்டார். இதனாலும் நட்டமே!
நம் வழக்கில் வாதாடும் பொய்யர்கள் நம் எதிர்த் தரப்பிடம் விலைபோய் விடுவார்கள். அதுபோலவே, இப்போது கட்டிட ஒப்பந்தக்காரர்களும் ஆகி விட்டார்கள்.
எனவே, இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் சொல்லும் வேலையைச் செய்ய ஆட்களை தேர்ந்தெடுத்து, அவர்களை வைத்து வீடு கட்டிக் கொள்வதே புத்திசாலி த்தனம் ஆகும்.

நம் தேவையை நாமே பூர்த்தி செய்துக் கொள்ள வேண்டும், தற்சார்பு வாழ்க்கையை வாழ வேண்டு மென்ற அடிப்படையில் வீடு உள்ளிட்ட கட்டிடங்களை கட்ட விரும்பும் நபர்கள் மட்டும், திரு.பிரபு panchakosha @gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment