No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 20, 2017

நாமே சர்க்கரையை தயாரிக்கலாம்!


வெள்ளை சீனியில் பல்வேறு வேதியியல் பொருட்களை சேர்க்கிறார்கள்; ஆகையால், உடலுக்கு கெட்டது. அதனை சாப்பிடுவதை கை விடுங்கள். இதற்கு பதிலாக நாட்டுச் சக்கரைக்கு மாறுங்கள் என பலரும் பரப்புரை செய்கிறார்கள். 

நாட்டுச் சக்கரையும், வெல்லமும் எல்லா உணவுப் பொருட்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனை பரப்புரை செய்வோரும் நன்கறிவர்.  

எனவே, எவ்வளவுதான் உடலுக்கு கேடு என்றாலும், கடையில் கிடைக்கும் அல்லது ரேஷன் கடையில் மலிவு விலையில் அல்லது விழாக்காலங்களில் இலவசமாக வழங்கப்படும் வெள்ளைச் சீனியைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

நோயை விலை கொடுத்து வாங்குபவர்கள், இலவசமாக கிடைக்கும் சீனியை, அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா என்ன? 

இதற்கு மாற்றாக, கல்கண்டு பொடி என்றப் பெயரில் பதஞ்சலில் விற்பதை (BURA SUGAR) பயன்படுத்தலாம் என்றால், அதிலும் ஏதேதோ குறை சொல்கிறார்கள். 

ஆனால், வெள்ளை சீனிக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்பது என் நிலைப்பாடு. ஆகைவே, நான் சொல்லும் முறையில் சுயமாக தயாரிக்க முடியாதவர்கள் இதனை உபயோக்கிக்கலாம்.   

இப்படி, சந்தையில் விற்கப்படும் பொருட்களைப் பற்றி குறை சொல்பவர்கள் யாரும், அதற்கு தக்கதொரு சரியான மாற்றுத் தீர்வு என்ன என்பதை ஏனோ சொல்வதில்லை.

உண்மையில், மாற்றத்தீர்வை சொல்ல முடிந்தவர் களுக்குத்தான், குறை சொல்லும் உரிமையுண்டு என்பது என் திடமான கருத்து. 

இப்படிப்பட்ட நிலையில், மாற்று என சிந்தித்த போது சில வருடங்களுக்கு முன்பு 2013 - 2014 இல் சுயமாக சக்கரை தயாரித்ததையே பின்பற்றலாம், இந்த எளிய முறையைப்பற்றி உங்களுக்கும் எடுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்.

அதாவது, ஜெயலலிதா பிறந்த ஊரான மேல் கொட்டையில், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’  நூலை எழுதிக் கொண்டிருந்த காலமது. 

கூடவே, இயற்கை விவசாயம் செய்துக் கொண்டிருந்த அன்பர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்துக் கொண்டிருந்தேன். 


அங்கு, விளைவித்த கரும்பை கொண்டு வந்து, கரும்பு ஜீஸ் பிஜிபவரிடம் கொடுத்து பிழிந்து சாறு எடுத்து, அடுப்பில் வைத்து காய்ச்ச காய்ச்ச இளம் பச்சை நிறத்தில் கிடைத்த சக்கரையை பயன்படுத்திக் கொண்டேன். இது, ஏனோ மற்றதை விட அதிக இனிப்புச் சுவை உடையதாகவே இருந்தது. 

இப்படி, எது ஒன்றையும் நமக்கு நாமே கலப்படம் ஏதுமின்றி தயாரித்தும், பயம் சிறிதும் இன்றியும் பயன்படுத்தும் போது, அதிலுள்ள உணர்வும், சுவையும் தனிதான்!

இதனை எவ்வளவு விலை கொடுத்தாலும் பெற முடியாதது என்பதும் உறுதி!!

எனவே, தோட்டமும் போதிய இடமும் இருப்பவர்கள், இதனை சிறந்த தொழிலாகவே செய்து, தாங்களின் பணப்பலனை அடைவதோடு, தங்களைச் சார்ந்துள்ள மக்களின் ஆரோக்கியத்திற்கும் உதவலாம். 

ஆனால், இதுபற்றியெல்லாம் சிந்திக்காத விவசாயிகள் கரும்புக்கு போதியவிலை கிடைக்க வில்லை என அரசாங்கத்திடம் நெடுங்காலமாக வீணாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

விவசாயிகள் என்றப் பெயரில் பச்சை துண்டுடன் போராடுபவர்கள் எவரையும், விவசாயிகளாக பார்க்க முடியவில்லை. மாறாக, விவசாயிகள் என்றப் பெயரில் கொழுத்த அரசியல் வியாதிகளாகத்தான் பார்க்க முடிகிறது என்பது, என்னுடைய கருத்து மட்டுமல்ல;  பலரும் என்னிடம் பகிர்ந்துள்ள கருத்து 

ஆமாம், உண்மையான விவசாயிகளுக்கு வயிறு என்ற ஒன்றே இருக்குமிடம் தெரியாது. ஆனால், தலைநகர் தில்லியில் அம்மனப் போராட்டம் நடத்தும் விவசாயி களின் வயிற்றைப் பார்த்தால், பாலுக்கென்றே வளர்க்கப்படும் ஜெர்சி மாட்டின் பால் மடியை விட பெரிதாக தொங்குகிறது. 

சோத்துக்கு இல்லை என்று சொல்லி போராடுபவர் களால், எப்படி இவ்வளவு நாட்கள் தலை நகர் தில்லியில் தங்கி இருந்து போராட முடியும்? என்பதை எல்லாம் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால், அவர்களைத் தவிர மற்ற விவசாயிகள் எல்லாம் அவரவர்களது விவசாயத்தில் கண்ணுங் கருத்துமாகவே இருக்கின்றனர். 

விவசாயிகள் இல்லை என்றால், யாருக்கும் உணவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். 

இப்படிப்பட்ட தாங்களை எவரும் தேடி வரும் சூழ்நிலையை கட்டமைக்காமல், அரசு கட்டமைத்து உள்ள நிலைகளுக்குள் சென்று விவசாயிகள் வீணாகச்  போராடிக் கொண்டு இருக்கிறார்கள். 

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 

தோட்டமும், இடவசதியும் இல்லாதவர்கள் கரும்பு சாகுபடி செய்பவர்களிடம் கரும்பை வாங்கி, அவ்வப்போது தயாரித்துக் கொள்ளலாம் அல்லது மொத்தமாகவே கூட தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

கரும்புக்கு அதிக விலை கேட்பவர்கள், இந்த திட்டத்தை தங்களது ஊரில் அறிமுகப்படுத்தினால், நிச்சயமாக திருப்தி அடையலாம். 

இல்லையேல், வேலையே கிடைக்கவில்லை என்று சில ஆயிர ரூபாய் வேலைக்காக அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் இதனைச் செய்தால், நல்ல தொழிலாகி விடும். வெள்ளைச் சக்கரை முற்றிலும் ஒழிக்கப்படும் சூழ்நிலை தானாகவே உருவாகி விடும். 

இப்படி, கரும்பு பயிரிடும் ஒவ்வொரு விவசாயியும் தங்களின் ஊர் தேவைக்கு ஏற்ப மட்டும் பயிரிட ஆரம்பித்தால், நீங்கள் கேட்பதை விட அரசு அதிக விலை கொடுத்து கேட்கும் சூழ்நிலையும் தானாகவே உருவாகி விடும். 

கடுமையாக உழைக்கும் விவசாயிகள் , அதற்கான பணப் பலனை அவர்களும் அடையாமல், மக்களுக்கும் தரமான பொருட்களை கொடுக்காமல், பெரிய அளவில் கொள்முதல் செய்யும் பண முதலைகளிடம் குறைந்த விலைக்கு கொடுக்க.., 

பின் இதனை பெரிய பண முதலைகள், சிறிய பண முதலைகளிடம் சிறிய லாபத்துக்கு விற்க என மீண்டும் அந்த விளை பொருட்கள், விளைந்த அந்த ஊருக்கே நான்கு நாட்கள் கழித்தும், நாலு பேர் கை மாறியும். நாலு மடங்கு விலை அதிகமாகியும், வதங்கியும், அழுகியும் விற்பனைக்கு வருகிறது. 

இதனால், ஏற்படும் நட்டத்தை தடுக்க தற்காலிக விலை ஏற்றம், நிரந்தரமாக தடுக்க மரபணுவை சேர்த்தல் என பல்வேறு வில்லங்கங்கள் உண்டாகின்றன. இப்படி பல்வேறு விளைவுகளை சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், புரிந்துக் கொள்ள இதுவே போதும். 

இதனை எல்லாம் முறியடிக்க சில விவசாயிகளிடம் நான் பேசியது எதுவும் பலன் அளிக்கவில்லை. என்ன செய்வது?!

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 

கருப்புக் கரும்பை விட, வெள்ளைக் கரும்பில் சர்க்கரை அதிகமாக கிடைக்கும் என்பதால், இதனையே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுகூட, வேறெதுவும் சேர்க்க தேவையில்லை. நான் இப்படித்தான் செய்தேன்.

கரும்பின் தன்மையைப் பொறுத்து, நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவு மற்றும் சுவை மாறுபடும். ஆகையால், முதலில் கரும்பை பிழிந்து விற்குமிடத்தில் இருந்து இரண்டு குவளை வாங்கி காய்ச்சி பரிசோதனை செய்து பார்த்தப் பின், அதிக அளவில் காய்ச்சி தொடங்குங்கள். 

கரும்பு ஜீஸ் விற்பவர்கள் புதினா, இஞ்சி ஆகியவற்றை சேர்ப்பதுபோல எதையும் சேர்க்கலாமா என்பதுபற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் அல்லது இரண்டு முறைப்படியும் தயாரித்து, எது சிறப்பாக இருக்கிறது என பார்த்து சொல்லுங்கள்.

எது எப்படி இருப்பினும், விற்பனைக்கு என மொத்தமாக உற்பத்தி செய்யும் இடத்தில் சுத்த மிருக்காது. அந்த வேலையில் ஈடுபட்டு இருப்பவர் களும் சுத்தமாக இருக்க வாய்ப்பே இல்லை.

இப்படி, எது ஒன்றையும் நாமே தயாரிக்கும்போது சுத்தத்தைப் பற்றி கவலைப்பட தேவையே இல்லை. 

இப்படி, சத்தியவான் காந்தியவர்கள் இந்திய தன்னாட்சி நூலில் சொன்னபடி, மக்கள் தற்சாற்பு வாழ்க்கை வாழ எத்தனை எத்தனையோ வழி முறைகள் இருந்தும், அதுபற்றி சிந்திக்காமலும், அதன்படி வாழ முற்படாமலும் வெள்ளையர்களை விஞ்சிய கொள்ளையர்களாக திகழும் அரசியல் வியாதிகளை நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

கூடுதல் சேர்க்கை நாள்: 18-11-2017

சர்க்கரைக் கரும்பு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாம்!
ஆகையால், பைத்தியம் உள்ளிட்ட தீராத வியாதிக் காரர்கள் தினந்தினம் முடிந்த அளவுக்கு தின்றுவர நோய்கள் தீருமாம்!!
மடையர்கள் கூட புத்திசாலி ஆகி விடுவார்களாம்!!!
14 ஆண்டுகளுக்கு முன்பே, எலும்புப் புற்றுநோயால் இறந்து விடுவாய் என மருத்துவர்களால் கைவிடப் பட்டவர், இப்படி தின்று தற்போது வரை நலமாக இருக்கிறார். 

இதற்காவே, சிறிய கரும்புத் தோட்டம் ஒன்றையும், இயற்கை முறையில் பயிரிட்டு வைத்துள்ளார்.   
இவ்வளவு நன்மை தரும் கரும்பை, சீனி தயாரிக்கிறேன் என்றப் பெயரில் எப்படி எல்லாம் நாசமாக்குகிறார்கள் என்ற இக்கட்டுரையை எழுதிய ஒரு மாதத்திற்கு பின்பே இச்செய்தி தெரிந்தது.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)