சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, October 19, 2017

இளைஞர்களே, ஆன்டிகளிடம் எச்சரிக்கை!


தங்களை விட வயதில் மூத்த பெண்களோடு பழகுவதால், இளைஞர்கள் எப்படிப்பட்ட பிரச்சினை களை எல்லாம் சந்திக்க வேண்டி இருக்கிறது என்று, எனது கவனத்திற்கு வந்த சில சம்பவங்களை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி உள்ளேன். 

இப்படியொரு பெண் உன்னை பாச வலைவீசிப் பிடிக்கிறாள் என்றால், அவள் உன்னையும் உன் வருமானத்தையும் நிரந்தரம் ஆக்கிக் கொள்ளவே முயல்வாள் என்பதையும், இதனால் உன் வாழ்வு பாழாகும் என்பதையும் உணர்ந்துக் கொள்!

இது புரியாமல், ‘‘கல்லாணம் ஆகும் வரை அவளோடு பாலியல் உறவில் இருக்கலாம், அனுபவம் பெறலாம்’’ என நம்பினால் உன்னைப்போல் முட்டாள் இருக்க முடியாது. 


ஆமாம், ஆன்டிக்கு ஆசைப்பட்டு, ஆண்டியாய் போன இளைஞர்கள் பலர். அப்படிப்பட்ட ஒரு இளைஞனுக்கு நடந்த சங்கதிதான் இது. 

எனக்கு தெரிந்த, நல்ல உழைப்பாளி இளைஞன் ஒருவனை, அவனுக்கு ஒன்னு விட்ட பங்காளி முறை சித்தி அழைத்துக் கொண்டு போய், கோவிலில் வைத்து தாலி கட்டிக் கொண்டு குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டாள். அவள் அப்படி செய்த போது, இவனுக்கும், அவளுக்கு 12 வயது வித்தியாசம்.

மேலும், அவளுடைய முதல் பையனுக்கு 20 வயது. இவனொரு இளம் பெண்ணை கர்ப்பமாக்கி, அது குறித்து ஊரில், பணம் பறிக்கும் பஞ்சாயத்து நடந்தது. அது என்னவானது என தெரியவில்லை. 2 வது பையனுக்கு 18 வயது. கணவன் வேறு இருக்கிறான். இவர்களுக்கு என்று நில புலன்கள் எதுவும் கிடையாது.

ஆனால், அவள் அழைத்து சென்ற இளைஞன் வசதி யானவன். அவனுடைய சொத்துக்களை அடையவே இப்படியொரு திட்டம்.

இவர்கள் சொந்த ஊரில் வாழ முடியாது என்பதால், வெளியூரில் அக்கா, தம்பி என பொய்ச் சொல்லி குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, அக்காவை விட்டு விட்டு மாமன், வேறு ஒருத்தியோடு ஓடிப்போய் விட்டான். ஆகையால், நான்தான் காப்பாற்றுகிறேன் என்று கதையைச் சொல்லி வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் அக்கா, தம்பியல்ல என ஓரிடத்தில் உண்மை தெரிய வரும்போது, வேறு இடத்திற்கு குடிமாறி விடுவது என கடந்த 7 ஆண்டுகளில், 15 வீடுகளுக்கு மாறி விட்டார்கள். 

இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு ஆதரவு தரும் ஒரு பொய்யரின் வீட்டில் மட்டும் சுமார், 1 வருடத்திற்கு மேல் வாழ்ந்திருக்க, திருமணம் ஆன அப்பொய்யரோ, வேறொரு பெண்ணுடன் காதல் தோல்வி என தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கணக்கு. இது, பத்திரிகையிலும் செய்தியாக வெளிவந்தது.  

இவனை அழைத்துச் சென்றவள், ஆரம்பத்திலேயே இவனது பெயரில் இருந்த சொத்துக்களை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி, பின் அவளது கணவன், குழந்தைப் பெயர்களுக்கு மாற்றி விட்டாள்.

இவன் தினமும் காலையில் கிளம்பி, நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டி,  ஆயிரங்களை கொண்டி கொடுத்தாலும், இரவு ஒரு வேளை சோறு போடுவதற்கே பத்தவில்லை என்கிறாளாம்! 

இப்படிப்பட்டவள் சும்மா இருப்பாளா... இவன் வெளியில் போன பிறகு, கண்டவனெல்லாம் வீட்டுக்கு வந்து போகிறார்களாம். பின்ன வரச் சொல்லாம என்ன செய்வாள்?

இப்போது சொந்த ஊரில் உள்ள இவனது அம்மா வசிக்கும் வீட்டில் சென்று வசிக்கலாம் வா என, ‘‘இவளை என்னமோ உற்றார் உறவினர்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தைப் போல அழைக்கிறாளாம்’’. 

இது, மீதமுள்ள அந்த வீட்டையும் கைப்பற்றுவதற்கான திட்டம். ஆமாம், இவளது ஊரும் அதே ஊர்தான். முன்பின் மூன்று தெருக்களே! 

அங்கு இவளது கணவனும், மகன்களும் எந்தவொரு வேலை வெட்டிக்கு செல்லாமலேயே, இன்றும் மிகவும் சொகுசாக வசித்து வருகிறார்கள். இது எனக்கும் நன்றாகவே தெரியும்.

சொத்து, பணம் உள்ளிட்டவற்றை பறிக்க வேண்டும் என்கிற கெட்ட நோக்கத்துடன் அவனை அழைத்துச் செல்லாதவளாக இருந்தால், எப்படி கணவனும் குழந்தைகளும் வசிக்கும் ஊரிலேயே வாழ வா என தில்லாக அழைப்பாள்?

இவன் தினமும் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் ஆயிரக் கணக்கான பணமும் கூட, சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு கணவனுக்கு வந்து விடுகிறது என்பது, இப்போது அவனைப் போலவே உங்களுக்கும் புரிந்திருக்கும். 

இந்த கொடுமையில் சிக்கிக் கொண்டு எப்படி வெளி வருவது என தெரியாதவன், முழுமையாக குடியில் மூழ்கி விட்டான். அவளது வீட்டுக்கும் செல்லாமல், ஆட்டோவிலேயே படுத்து விடுவது; சக ஆட்டோக் காரர்களது வீட்டில் தங்குவது என்ற நிலையில், ஒவ்வொரு காலத்தையும் ஓட்டி வருகிறான்.   

அவனது கல்வி அறிவற்ற வயதான அம்மா செத்து விட்டால், இவனுடைய தாலி கட்டிய மனைவி என தகராறு செய்து, இருக்கிற ஒரு வீட்டையும் கைப்பற்றி விட திட்டம் போட்டுள்ள அவளோ, ‘‘இவனது அம்மாவுக்கு தினமும் இரவு பத்து மணிக்கு மேல் போனைப் போட்டு பேசிப்பேசி தூங்க விடாமல், டென்ஷன் செய்து விடுகிறாள்’’. 

இவள் போதாதென்று, ‘‘என்னை ஏன் பெத்த...  உன் கையாலேயே விஷம் கொடுத்து என்னை கொன்று விடு’’ என மகனும் மாறிமாறி தொந்தரவு செய்ய, இந்தம்மா உடல் நலங்குன்றி படுத்து விட்டது. 

இப்போது, அவன் அவளது வீட்டுக்கும், சொந்த ஊருக்கும் போக முடியாத நிலையில், தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் திரிந்துக் கொண்டு உள்ளான். 

இவனுக்கு அப்போது நான் சொன்ன ஆலோசனைகள் காதில் கேட்கவில்லை. இப்போழுது கேட்டுப் பயனில்லை என்கிற நிலையில் அழுகிறான். அப்போது நான் சொன்னதை கேட்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அவள் மீதிருந்த மோகத்தில், அதனை அப்படியே அவளிடமும் சொல்லி விட்டான். 

இப்படி, ஊருக்கு, தெருவுக்கு ஒன்றிரண்டு இளைஞர்களாவது வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள். எனவே, இளைஞர்களே எச்சரிக்கை!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

Followers

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லாப் பதிகளும்!

பயின்றோர் (20-08-16)