பிணை அல்லது விடுதலை உத்தரவு சிறைக்கு கிடைத்த உடனே (சிறை ஆவணப் பராமரிப்புக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்.
ஆனால், இவ்விரு கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க நான்கு நாட்கள் ஆக்கி இருக்கிறார்கள். விடுதலை உத்தரவு சிறைக்கு கிடைக்க வில்லையா அல்லது கிடைத்து சிறை ஊழியர்கள் தாமதித்து உள்ளார்களா என்பது தெரியவில்லை.
சிறையில் மருத்துவம் பார்த்தாகவும், அதற்கான அரசின் ஊதியத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.
மகள் கொலை வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்காக நான் செய்த செலவில், ஆயிரத்தில் ஒரு சதவிகிதம் கூட வராத கூலியை வாங்கி நான் என்ன செய்யப் போகிறேன் என்ற நிலைப்பாடாகவே இருக்கும்.
ஆமாம், அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலையாக 25 கோடி வரை செலவு செய்யதாக அவரின் அப்பா, பத்திரிகைக்கு பேட்டி அளித்து இருந்தார்.
அப்படியானால், வழக்கை விசாரணை செய்தவர்கள் எப்படிப்பட்ட கொள்ளையர்கள் என்பதை சொல்லவே தேவையில்லை.
சரி, நான் எப்படி இவர்களே குற்றவாளிகள் என தீர்க்கமாக சொல்கிறேன் என்றால், தங்களது மகளையும், வீட்டில் வேலை பார்த்த ஊழியரையும் கொலை செய்தது இவர்கள் இல்லை என்றால், இவ்விரு கொலை மீதும் இவர்கள் அல்லவா புகார் கொடுத்து இருக்க வேண்டும்?
இவர்களது மகளை வேலைக்காரர் கொலை செய்து விட்டார் என்று வைத்துக் கொண்டால் கூட, வேலைக்காரரை கொலை செய்தது யார்? அவரே செய்துக் கொள்ள முடியுமா?!
வேலைக்காரர் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு இருந்தால் கூட இவர்களுக்கு கொலையில் சம்பந்த மில்லை என விட்டு விடலாம்.
ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இவர்களது வீட்டில், இவர்களுக்கே தெரியாமல், ஒரே நாளில், எப்படி இரு கொலைகள் நடக்கும்??
சாதாரணமாக நமக்கு எழும் இக்கேள்விகள் நிதிபதி களுக்கு எழாமல் போக காரணம், அக்குற்றவாளிகள் கொடுத்த நிதியைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment