பசி எடுக்கிறது என்று நினைத்து நாம் சாப்பிடும் ஒவ்வொரு முறையும், உண்மையில் பசி எடுப்பதில்லை. ஆமாம், பசியென்ற உணர்வு எப்படி ஏற்படும் என்பது பற்றிய புரிதல் இல்லாமேலேயே, அவ்வப்போது பசிக்கிறது என்றெண்ணி, ஒவ்வொரு நாளும் பலமுறை சாப்பிடுகிறோம்.
சாப்பிடுவது என்றால், அமர்ந்து முழு சிற்றுண்டியையோ அல்லது சாப்பாட்டையோ சாப்பிடுவது மட்டுமல்ல; இடையிடையே தின்னும் பண்பங்கள், டீ, காபி உள்ளிட்ட இதர அனைத்துமே அடங்கும்.
சுருக்கமாக சொல்லப் போனால், நீரைத் தவிர மற்றவை அனைத்தும் ஆகரந்தான். நீரில் எதை சேர்த்தாலுங்கூட, அதுவும் ஆகாரந்தான். ஆகையால்தான், சாப்பாட்டில் ஊற்றி வைக்கப்படும் தண்ணீருக்கு கூட, ‘‘நீராகாரம்’’ என்று நம் முன்னோர் பெயரிட்டு உள்ளனர்.
சாதாரண ஒரு கப் நீரே ஒரு மணி நேரப் பசியைப் போக்க வல்லது என்றால், நீராகாரம் உள்ளிட்ட மற்ற பழச்சாறுகள் எல்லாம் குறைந்தது இரண்டு மணி நேரப் பசியைத் தாங்கக் கூடியவை.
இந்த வகையில் ஒவ்வொரு நாளும் நாம் உண்ணும் உணவு, நம் உடலின் தேவையை விட, பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது. இது சக்தியாக மாற்றப்பட்டு உடலில் சக்தி பற்றாக்குறை ஏற்படும் போது, உடல் செலவு செய்வதற்காக சேமித்துக் கொள்கிறது.
இப்படி சேமித்து வைக்கப்பட்ட சக்தியை நம் முன்னோர்கள், அவ்வப்போது அந்த விரதம், இந்த விரதம் என்றப் பெயரில் செலவழித்து வந்தனர். ஆனால், நமக்கு விரதம் என்றால் என்னவென்பதே தெரியவில்லை.
அப்படியே, ஏதோவொரு பெயரில் விரதம் இருந்தாலும், அந்த விரதத்தை முடித்த உடன், எதையெல்லாம் சாப்பிடாமல் இருந்தோமோ அல்லது செய்யாமல் இருந்தோமோ அதையெல்லாம் பன்மடங்காக செய்து விட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பதே, இன்றைய விரதமாக இருக்கிறது.
விரதம் என்பதை, நம் உடலும் மனமும், தன் மனம் போன போக்கில் விரும்புவதை எல்லாம் சாப்பிட நினைக்கும்போது, அந்த விருப்பத்தை நிறைவேற்றாமல், அதற்கான குறைந்தபட்ச தேவையைக்கூட கொடுக்க மறுப்பதன் மூலமும், அடிப்படை தேவை பூர்த்தியானாலே போதும் என அம்மனத்தை எண்ண வைப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக நாம் சாப்பிட்டு முடித்ததும், உடல் தன் செரிமான வேலையைத் தொடங்கும். எப்போது தன் செரிமான வேலையை முடிக்கும் என்பது, நாம் உண்ணிய உணவைப் பொறுத்தது.
நீர் ஒரு மணி நேரமென்றால், நீராகாரம் இரண்டு மணி நேரம். காய்கறிகள், பழங்கள் மூன்று மணி நேரம், சமைத்த உணவுகள் என்றால், நான்கு மணி நேரம், அசைவ உணவுகள் என்றால் எட்டு மணி நேரம் என ஆகும்.
இதற்குள் மீண்டும் எதை தின்னாலும், உடல் தன் செரிமான வேலையை நிறுத்தி விட்டு, பின்னரே தொடங்கும். நாம் பொதுவாக நினைப்பதுபோல, ஒரு பக்கம் தின்றால், மறுபக்கம் செரிமானம் நடப்பதில்லை.
இப்படி உள்ளுக்குள் செரிமானம் நடக்கும்போது, வயிற்றின் இடைவெளியில் ஏற்படும் ஒருவிதமான பொறுமல், இரைச்சல், பிறட்டல் ஆகியவற்றைதான் பலரும், மீண்டும் பசி எடுக்கிறது என தவறாக நினைத்து சாப்பிடுகின்றனர்.
இதற்கேற்ப சாப்பிட்டதும் அவை அடங்கி விடும். அதாவது செரிமான வேலையை நிறுத்திக் கொள்ளும். ஆகையால், அந்த அறிகுறிகள் பசிதான் என்பதை தவறாக உறுதி செய்துக் கொள்கிறோம்.
உண்மையில், இந்த நேரத்தில் செரிமானத்திற்கான தண்ணீரே தேவை என்பது, தண்ணீரைக் குடித்துப் பார்த்தால் அடங்கி விடும். ஆகையால், நமக்கும் பரிந்து விடும்.
உண்மையில், இந்த நேரத்தில் செரிமானத்திற்கான தண்ணீரே தேவை என்பது, தண்ணீரைக் குடித்துப் பார்த்தால் அடங்கி விடும். ஆகையால், நமக்கும் பரிந்து விடும்.
இதனால், வயிறு தன் வேலையை செய்ய போதிய இடைவெளி இல்லாமல் தினறுகிறது. இதற்கு மேலும், இவன் சாப்பிட்டு விட்டால் என்ன செய்வது என்று பயந்தே, நமக்கு தூக்கத்தை கொடுத்ததே உடல் தன் செரிமான வேலையை தொடங்குகிறது.
இதனால்தான், சாப்பிட்ட உடன் உடலுக்கு தேவையான சக்தி கிடைத்து, கூடுதல் வேலையை செய்ய முடியாமல், ஏற்கெனவே செய்த வேலையைக் கூட தொடர முடியாமல் தூக்கத்தில் முடங்கி விடுகிறோம்.
பொதுவாக தூக்க குறைபாட்டை தவிர, மற்றபடி காலையில் உண்ட பிறகு யாரும் தூங்குவதில்லை. ஆனால், காலை உணவுக்குப் பின் நான்கு மணி நேரத்திற்குள் நாம் உண்ணும் மதிய உணவே நமக்கு தூக்கத்தைக் கொடுக்கிறது. இரவு என்பது எல்லோரும் தூங்கு வதற்கான இயல்பான நேரம். ஆகையால், இதில் தூங்காமல் இருப்பதுதான் விசித்திரமானது.
எனவே, நாம் ஒவ்வொரு நேரமும் தேவைக்கு அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு, தற்போது சேமித்து வைத்துள்ள சக்தியே, மூன்று தினங்கள் முதல் ஒரு வாரம் வரையிலும் தாங்கக் கூடியதாக இருக்கும் என்று சொன்னால், நம்மால் நம்ப இயலாது.
ஆமாம், உண்மையில் பசி என்பது, ‘‘பசி வயித்தை கிள்ளுது என்பதில் ஆரம்பித்து, காதை அடைக்குது’’ என்பது வரை தொடர்கிறது. அப்போது சாப்பிட்டால் போதுமாம்! ஆனால், நாம் இப்படி ஒருநாளும் சாப்பிட்டது இல்லை.
இதன்படி பார்த்தால், காலை உணவுக்குப் பின் சுமார் ஏழெட்டு மணி நேரம் கழித்து, மாலை ஆறு மணிக்கு முன் இரவு உணவை உண்டாலே போதும். செரிமானத்திற்கும், அடுத்த வேளை உணவுக்குமான இடைவெளி நேரத்தில் நம் சிந்தனைகள் சிறப்பாக இருக்கும்.
சரி, நாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதை, ஒவ்வொருவருக்கும் கணக்கிட ஏதுவாக நம் முன்னோர்கள் கையாண்ட முறைதான், கீழே அமர்ந்து கால்களை மடக்கி உண்ணும் முறை.
இம்முறையில் உண்ண ஆரம்பிக்கும் போது, முதலில் நன்றாக குனிந்து உண்போம். உணவு உள்ளே போகப் போக குனிவது குறைந்து, தட்டை இடது கையால் தூக்க சொல்லும் அல்லது மடியில் வைத்து எளிதாகச் சாப்பிடச் சொல்லும்.
இந்த நிலை வரும்போது, வயிறு நிரம்பி விட்டது என்பதை அவரவரே உணரமுடியும். எனவே, இதற்கு முன்பாகவே உண்பதை நிறுத்தி விடுவது நல்லது.
இதையே, நாகரீகம் என்றப் பெயரில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது வைத்து உண்டால், உடல் குனிவதற்கு வாய்ப்பின்றி போகிறது. ஆகையால், கழுத்து வரை உண்ட பிறகுதான், கரையைத் தொட்டு விட்டோம் என்பதே புரிகிறது. விளைவு?
வயிறு தொப்பையாக தொங்க ஆரம்பித்து, தரையைத் தொடும் அளவிற்கு போய்க் கொண்டு இருக்கிறது.
சரி, நாம் உண்ண வேண்டிய உணவின் அளவு எவ்வளவு என்பதை, ஒவ்வொருவருக்கும் கணக்கிட ஏதுவாக நம் முன்னோர்கள் கையாண்ட முறைதான், கீழே அமர்ந்து கால்களை மடக்கி உண்ணும் முறை.
இம்முறையில் உண்ண ஆரம்பிக்கும் போது, முதலில் நன்றாக குனிந்து உண்போம். உணவு உள்ளே போகப் போக குனிவது குறைந்து, தட்டை இடது கையால் தூக்க சொல்லும் அல்லது மடியில் வைத்து எளிதாகச் சாப்பிடச் சொல்லும்.
இந்த நிலை வரும்போது, வயிறு நிரம்பி விட்டது என்பதை அவரவரே உணரமுடியும். எனவே, இதற்கு முன்பாகவே உண்பதை நிறுத்தி விடுவது நல்லது.
இதையே, நாகரீகம் என்றப் பெயரில் நாற்காலியில் அமர்ந்து மேஜை மீது வைத்து உண்டால், உடல் குனிவதற்கு வாய்ப்பின்றி போகிறது. ஆகையால், கழுத்து வரை உண்ட பிறகுதான், கரையைத் தொட்டு விட்டோம் என்பதே புரிகிறது. விளைவு?
வயிறு தொப்பையாக தொங்க ஆரம்பித்து, தரையைத் தொடும் அளவிற்கு போய்க் கொண்டு இருக்கிறது.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment