பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு, மனித வாழ்வில் முன்பு குறைவாக இருந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு, தற்போது மிகவும் அதிகரித்து இருக்கிறது.
பிளாஸ்டிக் இல்லாத காலத்தில், கண்ணாடிப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். இதனை கையாள்வதில் மிகவும் கவனம் வேண்டி இருந்தது. ஆனாலும், மருந்துப் பாட்டில்கள் உடைந்து சேதமாகின.
ஆனால், இப்போது, எல்லா மருந்துப் பொருட்களும் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்படுகின்றன. ஆகையால் பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.
பிளாஸ்டிக்கை குளிர்ந்தப் பொருட்களுக்குதான் பயன்படுத்த வேண்டும் அல்லது எந்தப் பொருளை அதில் வைத்தாலும், அதனை குளிர்ந்த நிலையில் பாதுகாக்க வேண்டும்.
ஆகையால்தான், பிளாஸ்டிக்கில் அடைக்கப்படும் பொருட்களை, இத்தனை டிகிரி குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும் என அதிலேயே அச்சடித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அப்படி வைக்கவில்லை என்றால், வெப்பத்தின் காரணமாக வேதி வினை புரிந்து மருந்தின் தன்மை கெட்டு விடும் அல்லது விஷமாக கூட மாறிவிடும். மொத்தத்தில், பிளாஸ்டிக்கை சூடான பொருட்களுக்கு பயன்படுத்தவே கூடாது.
குளிர்ச்சியான பொருட்களை பாதுகாக்க அல்லது அப்படிப்பட்ட பொருட்களை அதில் அடைத்து குளிர்ச்சியான இடத்தில் வைத்திருக்க நன்மையே அதிகம்.
ஆனால், நாமோ இலைக்கு பதிலாகப் போட்டு சாப்பிடவும், டீ வாங்கி குடிக்கவும், மிகவும் சூடான உணவு பொருட்களை பொட்டலமாக கட்டவும், இதரப் வாங்கவுமே அதிகமாக பயன்படுத்துகிறோம்.
இதெல்லாம் போதாது என்று, அவை அனைத்தையும் சேர்த்து வைத்து ஏரித்து, அதிலிருந்து வேதிவினை மூலம் வெளியேறும் காற்றை நாமும் சுவாசித்து, சுற்றுப் புறத்தில் உள்ளவர்களையும் சுவாசிக்க வைத்து உடல் நலக்கேடுகளை உண்டாக்குகிறோம்.
நீர் நிலைகளில் வீசியெரிந்து, கொசு உள்ளிட்ட வியாதிகளைப் பரப்பும் கிரிமிகளை உற்பத்தி செய்து ஆரோக்கியத்தை இழக்கிறோம்.
கண்ணாடி போன்று உள்ள பிளாட்டிக்கை தவிர, மற்றபடி, குறைந்த விலையில் வண்ணத்தில் உள்ளதெல்லாம் மறு சுழற்ச்சி முறையில் செய்யப்படுபவை.
இதில் மருத்துவ பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் உண்டாம்! இதில் மிக முக்கியமானது, திரவப் பொருட்களை உறிஞ்சி குடிக்கப் பயன்படும் குழாய்!!
உயர்ந்த விலையில் உள்ள வண்ணப் பாட்டில்கள் எல்லாம், மறு சுழற்சியில் தயார் செய்யப்படுபவை அல்ல. மாறாக, உள்ளேயுள்ள திரவத்தின் ஆவி தெரியாமல் மறைப்பதற்காகவாம்!
வளர்ந்த நாடுகளில் எவ்வளவு புயல் அடித்தாலும் மழை பெய்தாலும், மின்சாரந்தாக்கி யாரும் உயிரிழந்ததாக செய்தி இருக்காது. காரணம், அம்மின்சாரத்தை பிளாஸ்டிக் கேபிளில் பூமிக்கு அடியில் கொண்டு செல்கிறார்கள்.
இதனால், என்ன கனமழை, புயல் காற்றிலும் பயமில்லாமல் தங்கு தடையின்றி மின்சார வினியோகம் இருக்கிறது.
ஆனால், நம் வீடு உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் மிக குறைந்த அளவிலான, உயிருக்கு சேதம் விளைவிக்காத மின்சார ஒயர்களை சுவற்றுக்குள் செல்லும்படி அமைக்க வேண்டும் என்ற சட்ட விதியை வைத்திருக்கிறது, மின்சார வாரியம்.
ஆனால், அம்மின்சார வாரியம் மிகவும் உயர்ந்த அளவில் மின்சாரத்தை கடத்திச் செல்லும் மின்சார ஒயர்களை, இதிலும் பிளாஸ்டிக் மூடாத ஒயர்களை திறந்த வெளியில் கொண்டு சென்று பலரின் உயிரை குடித்திருக்கிறது. இதுபற்றி யாரும் சிந்திக்கவும் இல்லை; கேள்வி கேட்கவும் இல்லையே!
இப்படியே சாலையையும் அமைக்கலாம் என்கிறார்கள். இப்படி அமைத்து விட்டால், ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையில் சாலைகள் உடையாது. ஆகையால், அரசியல் வியாதிகள் புதிது புதிதாக சாலைகளைப் போட்டு கொள்ளையடிக்க முடியாமல் போய் விடுமே!
ஆனால், இதையெல்லாம் செய்து காட்டி இருக்கிறார் பேராசிரியர் வாசுதேவன் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டால், உலக நாடுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் நாம் வாங்கினாலும் போதுமா என்பது சந்தேகமே!
இப்படி, நாம் எதற்காக பயன்படுத்த வேண்டுமென்கிற சரியான புரிதல் இல்லாமல், எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். பின்னர் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்ற தவறான நிலைப்பாட்டில் இருக்கிறோம். இதனை ஆராய்ந்தும், அறிந்தும் பயன்படுத்த தொடங்கினால், நமக்கு நன்மையே அதிகம்.
இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதனை ஆதாரங்களுடன் எழுதினால், அதையும் இதன் இணைப்பாகவே வெளியிடலாம் அல்லது இதனை முழுமையாக நீக்கிவிட்டு அதனை வெளியிடலாம். தயாரா?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment