பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய பொருளை வாங்குகிறோம்.
நியாயந்தான் சட்டம் என்ற தத்துவத்தின்படி, அப்படி வாங்கும் பொருளில் பிரச்சினை வந்தால், அதனை பழுது நீக்கித்தராமல் புதிதாக தர வேண்டியது விற்றவரின் கடமை!
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, அப்பொருளை வாங்கிய நுகர்வோரின் உரிமை!
இதற்கு இடையில் விற்றவர்கள், வாங்கியவர் களிடம் என்ன ஒப்பந்தத்தை எழுத்து மூலமாக பெற்றிருந்தாலும் செல்லாது என்று சொல்வதை விட, திட்டமிட்ட மோசடி என்றே கூட சொல்லலாம்.
ஆனால், அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவர்கள், இதுபோன்ற சட்ட விரோத ஒப்பந்தங்கள் எல்லாம் நம்மை கட்டுப் படுத்தும் என்றெண்ணி பழுது நீக்கி தருவதையே வாங்கிக் கொள்கிறார்கள்.
இதற்கு ஏன் இவர்கள் பொருட்களை புதிதாக வாங்க வேண்டும்? பழைய பொருளையே, மிகக் குறைந்த விலைக்கு வாங்கி பழுது நீக்கிக் கொள்ளலாமே!
குறிப்பு: இது நீதியைத்தேடி... வாசகர் அல்லாத Acu Healer Sathiya Bama என்ற முகநூல் அன்பருக்கு ஆலோசனையாக சொல்லப்பட்டதன் பொது வடிவம். உங்களுக்கும் பயன் படட்டும் என்று பகிர்கிறேன்.
மேலும் இது மற்ற சட்டப் பிரச்சினைகளைப் போல் இல்லாமல், மிக சுருக்கமாக சொல்லியே புரிய வைக்க முடியும்.
என்னுடைய வழிகாட்டுதலின்படி, நீதியைத்தேடி... வாசகர்கள் தங்களின் உலாப்பேசி உள்ளிட்ட பொருட்களை புதிதாகவே மாற்றி வாங்கி உள்ளனர்.
இப்படி, (நி, நீ)திப்பேராணை, குற்றவியல், உரிமையியல், தொழிலாளர், நுகர்வோர் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்கின் தன்மைகளைக் குறித்தும் ‘‘மநு வரையுங்கலை!’’ என்ற நூலில், அல்லல்ல 768 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நூலில் எழுதி இருக்கிறேன்.
எனவே, தேவைப்படுபவர்கள் எப்படியாவது படித்துக் கொள்ள வேண்டுமே தவிர, ‘‘நூலை விற்க முயற்சிக்கிறேன் என முட்டாள் தனமாக சொல்லக் கூடாது’’. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment