சாதாரணமாகவே மனிதர்களுக்கு ஆசை அதிகம். இதில், அதிகாரம் என்கிற போதை வேறு அவனிடத்தில் இருந்தால், அவன் எப்படி அதீத ஆசைக்கு ஆளாகாமல் யோக்கியமாக இருக்க முடியும்?!
ஆனாலுங்கூட, யோக்கியமாக இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொ(ல், ள்)கிறார்கள். அவர்களின் மீதான (ப, பி)ற்றால் அவர்களைச் சார்ந்தவர்களும் அப்படியேச் சொல்லிக் கொ(ல், ள்)கிறார்கள்
இப்படி, நானுங்கூட சில காலங்களுக்கு முன்பு வரை, சிலரைப் பற்றி பொது மேடைகளில் கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஆனால், நான் யாரையெல்லாம் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தேனோ, பின் அவர்களே ‘‘உங்களிடம் பொய்ச் சொல்ல விரும்பவில்லை’’ என அவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியது குறித்து வாக்குமூலமே தந்திருக்கிறார்கள்.
‘‘உன்னிடத்தில் உண்மை இருந்தால், எந்தவொரு உண்மையும் உன்னிடத்தில் தானே வந்து தஞ்சமடையும்’’ என்பதற்கு ஏற்ப என்னிடம் யாரும் உண்மையை ஒப்புக் கொள்ள தயங்குவதில்லை.
இப்படி உண்மையைச் சொல்லாதவர்களின் ஆதாரங்களுங்கூட, தானாகவே வந்து தஞ்சம் அடைந்து இருக்கின்றன அல்லது எனது தனித்திறத்தால் சேகரித்து உள்ளேன் எனவும் சொல்லலாம்.
நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி என நூலெழுதிய எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான சங்கதிதான்!
எனவே, அதிகாரத்தில் உள்ள ஒருவர், உங்களுக்கு ஏதோவொரு விதத்தில் நன்மை செய்தார் அல்லது ஊருக்கு நன்மை செய்தார் என்பதற்காக அவர்களை உத்தமர்கள், யோக்கியர்கள், நேர்மையாளர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.
ஏனெனில், அவர்கள் ஏதோவொரு விதத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. அது தெரிய வரும்போது என்னைப் போலவே, நீங்களும் ஏமாந்து போவீர்கள் என எச்சரிக்கிறேன். இது நானாகவே இருந்தாலும் சரி!
இந்த அனுபவங்களுக்குப் பிறகுதான் நான் குறிப்பிட்ட யாரையும் எதற்காகவும் ஆதரிப்பது இல்லை. இதிலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் என்றால் அறவே கிடையாது.
ஏனெனில், இவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பிறன் மனை ஒழுக்கத்தில் தவறி இருக்கிறார்கள். பொதுநல வாதி களாக இருந்தால், பிரபலங்களின் பினாமிகளாகவும், தொழில் முறை போட்டியாளர்களை ஒழிக்கும் பினாமிகளாகவும், எதிலும் தங்களை முன்னிருத்திக் கொள்ளும் மிகக் கேவலமான நடத்தை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களை விட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களைப் பிடித்து, பாதுகாப்புடன் ஊர்வலம் வருகிறார்கள்.
இவர்களது சில்மிஷ வேலைகளை என்னிடமும் காட்ட முற்பட்ட போதே, அவர்களுக்கு எப்படி தக்கப் பதில் பாடம் புகட்டனுமோ, அப்படியே புகட்டி இருக்கிறேன். ஆகையால், எதற்காகவும் என் பக்கம் திரும்புவதில்லை.
சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.
சத்தியவான் காந்தி, பகுத்தறிவுப் பெரியார் போன்றோர், தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தில் கூட அமரவில்லை என்பதோடு, அமர்ந்திருந்த அதிகாரத்தை கூட உதறித் தள்ளினர். ஆனாலுங்கூட, அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யாத மகத்தான பற்பல பயன் மிக்க சாதனைகளைச் செய்தும் காட்டினர்.
ஆகவே, எதைச் செய்யவும் அதிகாரம் என்பது தேவையேயில்லை; இதைச் செய்ய வேண்டுமென்கிற மனத்துணிவு இருந்தாலே போதும்; எதையும் செய்து முடிக்கலாம் என்பதை புரிந்துக் கொண்டாலே போதும், எதையும் செய்யலாம்!
மாறாக, அதிகாரத்தில் இருந்தால், அந்த அதிகாரத்தை கூட சரியாக செய்ய முடியாது. அயோக்கியத்தனங்களைத்தான் அரங்கேற்ற முடியும். இதைத்தான் இன்றைய அதிகாரத்தில் உள்ளோர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி செய்துக் கொண்டிருப்பவர்களில் வெளியில் தெரிபவர்களை சகட்டு மேனிக்கு திட்டுவதும், தெரியாதவர்களை பெரிதாகப் பாராட்டுவதும் எந்த விதத்திலும் நியாயமாகாது. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment