அவ்வளவு எளிதில் வினோதியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவளது உயிரை காக்க நிதியுதவி செய்தவரில் நீங்களுங்கூட ஒருவராக இருக்கலாம்.
இதுபோன்ற சம்பவங்களில், ஊடகங்கள் தங்களை முன்னிருத்திக் கொண்டு நிதியுதவி கேட்க, இறக்க குணம் உள்ளவர்கள் நம்பி நிதியை அனுப்புகின்றனர்.
ஆமாம், ஊடகங்கள் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவரை நேரடியாக அணுக விடுவதில்லை. மாறாக, தங்களின் பெயருக்கே அனுப்பச் சொல்லுகின்றன.
ஊடகப் பொறுக்கி நிருபர்களோ, இதிலும் ஊழல் செய்கிறார்கள். ஆனந்த விகடன் நிருபர் மட்டும் ரூபாய் 57 ஆயிரத்தை, வசூல் செய்ததற்கு லஞ்சமாக வாங்கிக் கொண்டுள்ளார்.
இப்படி வினோதினிக்கு மட்டும் சுமார் ஒருகோடி ரூபாய் பணம் கிடைத்தது. உதவுவதற்கு இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று, எனக்கே பிரம்மிப்பாக இருக்கிறது.
ஆனால், இது தொடர்பான எந்தவொரு செய்தியை, காணொலியை இப்பொழுது எடுத்துப் பார்த்தாலும் நிதி கிடைக்கவில்லை என்றே பேட்டிக் கொடுத்து இருப்பார்கள்
இவ்வளவு தொகை கிடைத்துங்கூட, வினோதினியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து வேறு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லாமல், இங்கேயே வைத்து திட்டமிட்டு கொலை செய்தனர்.
காரணம், அவள் இருந்து என்ன செய்யப் போகிறாள்? செத்தப் பிறகு, அவளது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நாமும் சுகபோகமாக வாழலாம் என்ற உறவுகளின் நட்பாசைதான்! ஆனால், அவளின் சாபம், ஆசைப்பட்டவரை பிச்சை எடுக்க வைத்துள்ளது!!
குற்றஞ் சாற்றப்பட்டவர், ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். ஆனால், இக்குற்றம் நடந்ததற்கு மூலக்காரணமாக விளங்கிய அவள் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் தண்டிக்கப் படவில்லை.
ஆமாம், அவன் காத்திருந்து ஆசிட் ஊற்ற வசதியாக இவள் ஊருக்கு கிளம்பியதை, குற்றவாளிக்கு தெரிவித்தது, இவள் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரே!
இதெல்லாம், நான் மேலோட்டமாக செய்த விசாரணையில் கிடைத்த சங்கதிகள். என்னுடைய பாணியில் புலன் விசாரணையை தொடங்கினால், இன்னும் பல பாழான உண்மைகள் எல்லாம் வெளி வரும்.
என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கை மத்தியக் குற்றப் புலனாய்வு விசாரிக்க வேண்டும் என புரிந்துரை செய்கிறேன்.
சரி, உங்க விசயத்துக்கு வர்றேன்.
நீங்கள் அனுப்பிய சுமார் கோடிக்கு, ஓரிரு லட்சங்களே குறைவான பணமெல்லாம், அவளது அறக்கட்டளையின் பெயரில், இந்தியன் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது. இப்படி முடக்கி வைத்து வங்கி ஊழல் செய்கிறது.
ஆமாம், இந்த தொகையை யார்யார் அனுப்பினார்கள் என கேட்டு, அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தால், தேவை உள்ளவர்கள் பெற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் கூட பெற்றுக் கொண்டு தேவை உள்ளவர்களுக்கு வழங்குவார்களே!
தனக்கு வரவேண்டிய கடனை வசூலிக்க நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து அசிங்கப்படுத்தும் வங்கி, ஏன் இதனைச் செய்யவில்லை?
எனவே, நிதியுதவி செய்ய வேண்டுமென எண்ணினால், கூடுமான வரை பாதிக்கப்பட்ட நபரிடம் நேரடியாக கொடுக்க முயற்சியுங்கள். இதுவே பாதிக்கப்பட்டவருக்கு நற்பலனை அளிக்கும். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment