No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, August 3, 2017

தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து கதறி அழும் இலங்கை நிதிபதி!


இலங்கையின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மாங்குளத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தவர்.

கடந்த வாரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நீதிபதி இளஞ்செழியன் சிறையில் அடைத்தார். இப்படி நல்ல தீர்ப்புகளை வழங்கு வந்த இளஞ்செழியனை கொலை செய்ய அடையாளாம் தெரியாத சிலர் முயற்சி செய்தனர்.

அப்போது இளஞசெழியன் சென்ற கார் நல்லூரில் உள்ள சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

** இதில், நீதிபதிக்காக பாதுகாவலராக இருந்த சரத் பிரேம சந்திரா என்பவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.**

தன்னை காப்பாற்ற வந்து பலியான பாதுகாவலரின் வீட்டுக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் பாதுகாவலர் சரத் பிரேமச் சந்திராவின் மனைவி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.


இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் வேதனை யையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதி தமிழர், மெய்பாதுகாவலர் சிங்களர். இன வேறுபாடின்றி இவரது செயல் போற்றப்படுகிறது.

மெய்பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார். கல்வி முதல் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார் மனிதாபம் நிறைந்த நீதிபதி.

இது போன்ற நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்களா? என்ற கேள்வியோடு இச்செய்தி எங்களுக்கு வந்தது.

******

இப்படி இந்தியாவிலுங்கூட, நிதிபதிகளை தாக்கிய சம்பவங்கள் பல உண்டு என்பதை விட, அதிகார துஷ்பிரயோக பாதுகாப்பால்தான் நிதிபதிகள் உயிர் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்வதே மிகவும் சரியான உண்மை!

நீதி வழங்கும் நிதிபதிகளுக்கு எப்பொழுது பாதுகாப்பு தரப்பட்டதோ, அப்பொழுதே அவர்கள் சொல்வது நீதியல்ல; அநீதி என்றாகி விட்டது. இதைவிட கேவலம் மக்களாட்சியில் வேறெதுவும் இருக்க முடியாது. 

ஆமாம், பாதுகாப்பு எல்லாம் பாதுகாப்பு அல்ல. பாதுகாப்பு என்றப் பெயரில் அனுபவிக்கும் அதிகாரச் சிறைவாசமே அன்றி வேறில்லை

ஆமாம், சிறையில் உள்ள கைதிகள் எப்படி சுதந்திரமாக இருக்க முடியாதோ, அப்படித்தானே இவர்களும் இருக்கிறார்கள்?!

ஆகையால், எந்த நிதிபதியால் தனக்கு பாதுகாப்பே வேண்டாமென துணிந்து சொல்ல முடியுமோ, அவர் மட்டுமே நீதிபதியாக இருக்க முதலில் தகுதியானவர். ஆமாம், இது முதல் தகுதி மட்டுந்தான்! 

ஏனெனில், நீதிபதிக்கு என பல இலக்கணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்பவரை மட்டுந்தான் நீதிபதியென என்னால் சொல்ல முடியும். 

குற்றவியல் வழக்குக்களில், குற்றஞ்சாற்றப்பட்ட நபரே, தான் குற்றவாளியென ஒப்புக்கொண்டு, குறைந்தபட்ச தண்டனையை கேட்டு வாங்கிக் கொள்ளும் அளவிற்கு விசாரணையை நடத்துவதே, ‘‘நியாயமான விசாரணை’’ முறையாகும். 

இப்படிப்பட்ட நபரே, ‘‘நீதிபதி’’ என்ற பெயருக்கு, இரண்டாவது நிலையில் தகுதியானவர். ஆமாம்,

1. இப்படிச் செய்து விட்டால், குற்றவாளிக்கு யார் மீதும் கோபம் வராது.

2. ஆகையால், தன் தண்டனைக்கு காரணமான புகார்தாரர், சாட்சிகள் மற்றும் நிதிபதி உட்பட யாரையும் பழிவாங்க வேண்டு மென தோன்றாது.

3. அதே சமயம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடியாது.

4. ஆகையால், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முடியாது என சமூகத்திற்கு விளையும் பல நன்மைகளைச் சொல்லலாம்.

மேற்சொன்ன நான்கும், எவருக்கும் எளிதாக விளங்கும். அவ்வளவே!

இப்படியொரு விசாரணை முறை கையாண்டு இருந்தால், இலங்கை நிதிபதியின் பாதுகாவலர் கொல்லப்பட்டு இருக்க மாட்டார். இலங்கை நிதிபதிக்கும் காலில் விழ வேண்டிய நிலைமை வந்திருக்காது. 

இந்நிதிபதி என்னதான், காலில் விழுந்து கதறி அழுதாலும், போன பாதுகாவலரின் உயிரைத் திரும்பக் கொண்டு வரமுடியுமா? 

எவர் ஒருவருக்கும், அவரவர்களது உண்மையே பாதுகாப்பு என்றாலுங் கூட, அவரவரும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். 

ஆகையால், நிதிபதிகள் உள்ளிட்டோருக்கு பாதுகாவல் பணியில் உள்ள காவலூழியர்கள், முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட பிறகே, பிறரை பாதுகாக்க வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்காக தங்களின் உயிரை இழக்கக்கூடாது. 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)