No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, August 2, 2017

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களே... எச்சரிக்கை!


கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்களின் தன்மைகள் எத்தகையது என்பதை, நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதி எச்சரித்து உள்ளேன்.
 
கள்ளக் காதலால் ஏற்படும் இன்னபிற விளைவுகளை என்னால் வெளிப் படையாக எழுத முடியவில்லை.
 
சில மாதங்களுக்கு முன் நல்லதொரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். திருமணம் செய்யும் நிலையில் உள்ள மகள் மகன் மற்றும் மனைவியுடன் அமர்ந்து, ‘‘சொல்வதெல்லாம் உண்மை’’ நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். 

அன்றைக்கும் கள்ளக்காதல் விவகாரந்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆகையால், அந்நிகழ்ச்சியைப் பார்க்கவே எனக்கு கொஞ்சம் சங்கடமாகி விட்டது.

ஆனால், அவர்களோ எந்த விதமான சங்கடமும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியைப் பற்றி விவாதித்து பேசிக் கொண்டனர். அடுத்த நாள் அவரிடம் கேட்டேன். 

நம் மகனுக்கும் மகளுக்கும் நாம் வெளிப்படையாக  சொல்ல முடியாத பல சம்பவங்களை இந்நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். ஆகையால், இப்படி யெல்லாங் கூட சமுதாயத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் எச்சரிக்கையாக இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார். 

உண்மையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில், அவரின் இந்தப் பார்வை முற்றிலும் வித்தியாசமானது என்பதை விட, மனைவி, மகள் மற்றும் மகன் மீது கொண்டிருந்த நம்பிக்கை அதீதமானது.  

உண்மையில், அதற்கு முந்தைய நாள்தான், ‘‘வயதுக்கு வந்த பெண்ணுடன், மற்றொருவனுடன் ஓடிப்போன மனைவி, எதிர்க்காலத்தில் எப்படியெல்லாம் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவாள்’’ என்பதை அவளது கணவனுக்கு சொல்லி இருந்தேன். 

நான் சொன்னதில், ‘‘கீழுள்ள செய்தியில் நடந்துள்ளது போலவே, உன் மகளுக்கும் நடக்கும்; ஆகையால், அவளை எப்படி காப்பாற்ற வேண்டுமோ, அப்படியே காப்பாற்றக் கொள்’’ என சில முன் யோசனைகளை அவருக்கு எச்சரிக்கையாக சொல்லி இருந்தேன். 
நான் முன்னரே சொன்னதுபோல, இந்த செய்திப் போன்ற சில உண்மைகளை என்னால் வெளிப்படையாக எழுத முடியவில்லை. செய்தியாகவே வந்துள்ளதால் பதிவிடுகிறேன். 

இந்த செய்தி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)