No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, August 28, 2017

பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபத்தமும்; (அ)வசியமும்!


பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு, மனித வாழ்வில் முன்பு குறைவாக இருந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு, தற்போது மிகவும் அதிகரித்து இருக்கிறது. 

பிளாஸ்டிக் இல்லாத காலத்தில், கண்ணாடிப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். இதனை கையாள்வதில் மிகவும் கவனம் வேண்டி இருந்தது. ஆனாலும், மருந்துப் பாட்டில்கள் உடைந்து சேதமாகின. 

ஆனால், இப்போது, எல்லா மருந்துப் பொருட்களும் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்படுகின்றன. ஆகையால் பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. 

பிளாஸ்டிக்கை குளிர்ந்தப் பொருட்களுக்குதான் பயன்படுத்த வேண்டும் அல்லது எந்தப் பொருளை அதில் வைத்தாலும், அதனை குளிர்ந்த நிலையில் பாதுகாக்க வேண்டும். 

ஆகையால்தான், பிளாஸ்டிக்கில் அடைக்கப்படும் பொருட்களை, இத்தனை டிகிரி குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும் என அதிலேயே அச்சடித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

அப்படி வைக்கவில்லை என்றால், வெப்பத்தின் காரணமாக வேதி வினை புரிந்து மருந்தின் தன்மை கெட்டு விடும் அல்லது விஷமாக கூட மாறிவிடும். மொத்தத்தில், பிளாஸ்டிக்கை சூடான பொருட்களுக்கு  பயன்படுத்தவே கூடாது. 

குளிர்ச்சியான பொருட்களை பாதுகாக்க அல்லது அப்படிப்பட்ட பொருட்களை அதில் அடைத்து குளிர்ச்சியான இடத்தில் வைத்திருக்க நன்மையே அதிகம். 

ஆனால், நாமோ இலைக்கு பதிலாகப் போட்டு சாப்பிடவும், டீ வாங்கி குடிக்கவும், மிகவும் சூடான உணவு பொருட்களை பொட்டலமாக கட்டவும், இதரப் வாங்கவுமே அதிகமாக பயன்படுத்துகிறோம். 

இதெல்லாம் போதாது என்று, அவை அனைத்தையும் சேர்த்து வைத்து ஏரித்து, அதிலிருந்து வேதிவினை மூலம் வெளியேறும் காற்றை நாமும் சுவாசித்து, சுற்றுப் புறத்தில் உள்ளவர்களையும் சுவாசிக்க வைத்து உடல் நலக்கேடுகளை உண்டாக்குகிறோம். 

நீர் நிலைகளில் வீசியெரிந்து, கொசு உள்ளிட்ட வியாதிகளைப் பரப்பும் கிரிமிகளை உற்பத்தி செய்து ஆரோக்கியத்தை இழக்கிறோம்.  

கண்ணாடி போன்று உள்ள பிளாட்டிக்கை தவிர, மற்றபடி, குறைந்த விலையில் வண்ணத்தில் உள்ளதெல்லாம் மறு சுழற்ச்சி முறையில் செய்யப்படுபவை.  

இதில் மருத்துவ பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் உண்டாம்! இதில் மிக முக்கியமானது, திரவப் பொருட்களை உறிஞ்சி குடிக்கப் பயன்படும் குழாய்!! 

உயர்ந்த விலையில் உள்ள வண்ணப் பாட்டில்கள் எல்லாம், மறு சுழற்சியில் தயார் செய்யப்படுபவை அல்ல. மாறாக, உள்ளேயுள்ள திரவத்தின் ஆவி தெரியாமல் மறைப்பதற்காகவாம்!

வளர்ந்த நாடுகளில் எவ்வளவு புயல் அடித்தாலும் மழை பெய்தாலும், மின்சாரந்தாக்கி யாரும் உயிரிழந்ததாக செய்தி இருக்காது. காரணம், அம்மின்சாரத்தை பிளாஸ்டிக் கேபிளில் பூமிக்கு அடியில் கொண்டு செல்கிறார்கள். 

இதனால், என்ன கனமழை, புயல் காற்றிலும் பயமில்லாமல் தங்கு தடையின்றி மின்சார வினியோகம் இருக்கிறது. 

ஆனால், நம் வீடு உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் மிக குறைந்த அளவிலான, உயிருக்கு சேதம் விளைவிக்காத மின்சார ஒயர்களை சுவற்றுக்குள் செல்லும்படி அமைக்க வேண்டும் என்ற சட்ட விதியை வைத்திருக்கிறது, மின்சார வாரியம்.  

ஆனால், அம்மின்சார வாரியம் மிகவும் உயர்ந்த அளவில் மின்சாரத்தை கடத்திச் செல்லும் மின்சார ஒயர்களை, இதிலும் பிளாஸ்டிக் மூடாத ஒயர்களை திறந்த வெளியில் கொண்டு சென்று பலரின் உயிரை குடித்திருக்கிறது. இதுபற்றி யாரும் சிந்திக்கவும் இல்லை; கேள்வி கேட்கவும் இல்லையே!

இப்படியே சாலையையும் அமைக்கலாம் என்கிறார்கள். இப்படி அமைத்து விட்டால், ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையில் சாலைகள் உடையாது. ஆகையால், அரசியல் வியாதிகள் புதிது புதிதாக சாலைகளைப் போட்டு கொள்ளையடிக்க முடியாமல் போய் விடுமே!

ஆனால், இதையெல்லாம் செய்து காட்டி இருக்கிறார் பேராசிரியர் வாசுதேவன் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டால், உலக நாடுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் நாம் வாங்கினாலும் போதுமா என்பது சந்தேகமே!

இப்படி, நாம் எதற்காக பயன்படுத்த வேண்டுமென்கிற சரியான புரிதல் இல்லாமல், எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். பின்னர் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்ற தவறான நிலைப்பாட்டில் இருக்கிறோம். இதனை ஆராய்ந்தும், அறிந்தும் பயன்படுத்த தொடங்கினால், நமக்கு நன்மையே அதிகம். 

இதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதனை ஆதாரங்களுடன் எழுதினால், அதையும் இதன் இணைப்பாகவே வெளியிடலாம் அல்லது இதனை முழுமையாக நீக்கிவிட்டு அதனை வெளியிடலாம். தயாரா?! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, August 14, 2017

பெண்ணியவாதிகளின் பிழைப்பே பொய்ப் பித்தலாட்டம்தான்!


நான் பொதுவாக சமூக வலைத்தளங்களில் வலம் வருவதில்லை. காரணம், கருத்துக்கள் வளமானதாக இருப்பதில்லை. 

ஆகையால், இப்படியொரு முட்டாள்தனமான பதிவைக்கண்டால், அதுக்கு வேறு என் நேரத்தை செலவழித்து பல உண்மைகளைச் சொல்ல வேண்டியிருக்கும்.  

சரி விசயத்துக்கு வருகிறேன். 

ஒருபெண், கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் ஆண்களே, ‘‘கிருஷ்ணனைப் போல உள்ள ஆண் மகனுக்கு, உங்களது பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா’’ என்று கேட்டிருந்தாள்! 

இப்படி கேட்டவள் நிச்சயம் பெண்ணியவாதி என்ற போர்வையில் திரியும் பன்றியாகத்தான் இருப்பாள். இல்லையெனில், இதே கேள்வியை நியாயமாக பெண்களிடந்தான் கேட்டிருப்பாள். 

ஆமாம், ஒரு பெண்ணை தாயால்தான் பாதுகாக்க முடியும் என்பதே சட்டம். இது ஒரு பெண்ணாக அவளுக்கு தெரியாவிட்டால் கூட, இருபால் இனத்தவர்களிடமும் பொதுவாகத்தான் கேட்டிருப்பாள். 

ஆனால், இப்படி கேட்காததற்கு காரணம், உண்மை என்னவென்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

இதேயே, நான் கிருஷ்ண ஜெயந்தியை அதிகம் கொண்டாடுவது, ஆண்களா பெண்களா என்று நாம் அவளிடம் திருப்பிக் கேட்டால், ஆண்கள்தான் என்று கூசாமல் பொய்ச் சொல்லுவாள். 

பெண்ணிய வாதிகள் பொய்ச் சொல்வதில் சட்ட விரோத தொழில் பொய்யர்களுக்கு, சற்றும் சளைத்தவர்கள் அல்லர். ஆனால், எப்படிப் பார்த்தாலும் பெண்களே என்பதை கிருஷ்ணன் கோவிலுக்கு வரும் கூட்டத்தை வைத்து முடிவு செய்து விடலாம். 

கிருஷ்ணன் எல்லா பெண்களிடமும் தனித்தனியாக விளையாண்டானா அல்லது எல்லாப் பெண்களும் சேர்ந்து அவனுடன் விளையாண்டார்களா என்றால், பெண்களே அவனுடன் ஒருசேர விளையாண்டார்கள் என்பதுதானே உண்மை?!

இது அன்று மட்டுமல்ல; இன்றும் அதுதான் உண்மை!!

ஆமாம், பல ஆண்களோடு, ஒருபெண் கூத்தடிப்பதை இன்றும் கடற்கரை, இரயில் பயணம் போன்ற பல பொது இடங்களில் காணலாம். அப்போதுதான் அவனவனும் போட்டிப் போட்டுக் கொண்டு செலவழிப்பான். காசு கொடுத்து வாங்கி தின்ன முடியாததை எல்லாங்கூட தின்னலாம். 

ஆ சாமியார்கள் பெண்களை தேடிவந்து கூத்தடிக்கிறார்களா அல்லது பெண்கள் ஆ சாமியார்களை தேடிப்போய் கூத்தடிக் கிறார்களா என்றால், பெண்களே தேடிப்போய் கூத்தடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆ சாமி நித்தி கூத்தடித்த இரகசியங்கள் வெட்ட வெளிச்சமான போது, ஆஹா இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என எண்ணிய பெண்களே அதிகம் என்பதை, நித்திக்கு சட்ட ஆலோசனை வழங்க வேண்டுமென என்னிடம் வரிந்து கட்டிக் கொண்டு வந்த பெண்களது பேச்சுக்களின் மூலம் நான் நன்கு அறிவேன்.   

ஆனால், பெண்ணிய வாதிகள் என்ற பெயரில் ஏய்த்துப் பிழைக்கும் கூட்டம், ஆ சாமி(யார்)களை மட்டுந்தான் குற்றஞ் சொல்லுவார்கள். அவர்களுக்கு எதிராகப் பொங்கி எழுவார்கள். 

பெண்ணியவாதிகள் என்று சொல்லிக் கொ(ள்ளு, ல்ளு)ம் ஆண்களும் சரி, பெண்களும் சரி, தன்னை ஒத்த கருத்துள்ள எதிர்பாலினத்தவர்களோடு தன் உடல் தேவைக்காக தோழா தோழியாக இருப்பார்களே ஒழிய, பெரும்பா(ழா, லா)னோர் எதிர்ப்பாலினத்தவருடன் குடும்பம் நடத்துவதில்லை. 

அவர்களது நாறிய கொள்ளைக் கொள்கையின்படி குடும்பம் நடத்தவும் முடியாது. எனது இக்கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதற்கு, சமுதாயத்தில் பிரபலங்களாக உள்ள பெண்ணிய வாதிகள் சிலரைப் பற்றி அறிய முற்பட்டாலே, உண்மையை அறிந்து கொள்ள முடியும். 

ஆனால், இது இடது மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர் களுக்கு அவ்வளவாக பொருந்தாது. 

இப்படிப்பட்ட பெண்ணிய வாதிகளில் உள்ள சட்ட விரோத தொழில் செய்யும் பொய்யர்கள் மற்றும் பொய்யனிகளுக்கு பிரதான வேலையே, கணவன் மனைவியாக வாழும் குடும்பத்தில் ஏற்படும் சிற்சில சச்சரவுகளில், பெண்களை மூலைச்சலவை செய்து குடும்பத்தை பிரித்து வைக்கும் விவாகரத்தைப் பெற்றுத் தந்து தோழன், தோழியாக்கி விடுவார்கள். 

ஆமாம், நாம் மட்டும் தறுதலைகளாக இருந்தால் போதாது. நமக்கொரு கூட்டம் வேண்டும். அப்போதுதான் யார் வேண்டு மானாலும், யார் கூட வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதற்காகவே இதுபோன்ற ஈனத்தனமான வேலைகளை செய்கிறார்கள். 

இது, முற்றிலும் ஆண்களுக்கு எதிரான துரோகம் என்பதை மறைக்கும் முகமுடியே, ‘‘பெண்ணியவாதிகள் என்ற பெயரே அன்றி வேறில்லை’’. இவர்கள் பெண்ணியத்தை காப்பவர்களும் அல்லர். மாறாக, பெண்ணியம் என்றப் பெயரில் உலாவரும் பொறுக்கிகளே!

எந்தப் பெண்ணும் ஆணுக்கு செலவழிப்பதில்லை. ஆணிடம் இருந்து பிடுங்குவதற்கு என்றே இயற்கையால் படைக்கப்பட்டவளே பெண். இது, பணம், சொத்து, இன்ப சுகம், காம இன்பம் உள்ளிட்ட சகலத்துக்கும் பொருந்தும்.

உண்மையில், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்பதில் ஆணுக்கு எதிர்ப்பாலின பெண்ணாசையே அதிகமுண்டு. மற்ற தெல்லாம், பெண்களின் ஆசைக்காக ஆண்கள் செய்யும் அக்கப் போர்களே!

குறிப்பு: இதுபோன்ற உண்மைகள் பலருக்கு தெரிந்திருந்தாலும், வெளியில் சொன்னால் தேவையில்லாது, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் சொல்வதில்லை என்பதை நான் சொல்லவில்லை.


இந்தக் கட்டுரையை முகநூலில் பகிர்ந்தபோது, இப்படி யாராவது பிரச்சினையை சந்தித்தோர் பதிவிடுவர் என நினைத்தேன். அதன்படியே பதிவிட்டும் இருக்கிறார்கள். 

சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள் எல்லாம் தைரியமாகவும், சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள் எல்லாம் பயந்தும் ஏன் இருக்க வேண்டும்?!

இந்தப் பெண்ணியவாதிகள் என்ற பொறுக்கிகள் முடிந்தால், சட்டப்படி என்னிடம் வாலை ஆட்டட்டும், பார்க்கலாம்! ஓட்ட நறுக்கி உண்மைகளை வெட்ட வெளிச்சமாக்கி விடுகிறேன்!!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, August 7, 2017

புதிய பொருட்களை வாங்குவது எதற்காக?!


பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதிய பொருளை வாங்குகிறோம்.

நியாயந்தான் சட்டம் என்ற தத்துவத்தின்படி, அப்படி வாங்கும் பொருளில் பிரச்சினை வந்தால், அதனை பழுது நீக்கித்தராமல் புதிதாக தர வேண்டியது விற்றவரின் கடமை!


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி, அப்பொருளை வாங்கிய நுகர்வோரின் உரிமை!

இதற்கு இடையில் விற்றவர்கள், வாங்கியவர் களிடம் என்ன ஒப்பந்தத்தை எழுத்து மூலமாக பெற்றிருந்தாலும் செல்லாது என்று சொல்வதை விட, திட்டமிட்ட மோசடி என்றே கூட சொல்லலாம்.

ஆனால், அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவர்கள், இதுபோன்ற சட்ட விரோத ஒப்பந்தங்கள் எல்லாம் நம்மை கட்டுப் படுத்தும் என்றெண்ணி பழுது நீக்கி தருவதையே வாங்கிக் கொள்கிறார்கள்.

இதற்கு ஏன் இவர்கள் பொருட்களை புதிதாக வாங்க வேண்டும்? பழைய பொருளையே, மிகக் குறைந்த விலைக்கு வாங்கி பழுது நீக்கிக் கொள்ளலாமே!

குறிப்பு: இது நீதியைத்தேடி... வாசகர் அல்லாத Acu Healer Sathiya Bama என்ற முகநூல் அன்பருக்கு ஆலோசனையாக சொல்லப்பட்டதன் பொது வடிவம். உங்களுக்கும் பயன் படட்டும் என்று பகிர்கிறேன். 

மேலும் இது மற்ற சட்டப் பிரச்சினைகளைப் போல் இல்லாமல், மிக சுருக்கமாக சொல்லியே புரிய வைக்க முடியும். 

என்னுடைய வழிகாட்டுதலின்படி, நீதியைத்தேடி... வாசகர்கள் தங்களின் உலாப்பேசி உள்ளிட்ட பொருட்களை புதிதாகவே மாற்றி வாங்கி உள்ளனர்.

இப்படி, (நி, நீ)திப்பேராணை, குற்றவியல், உரிமையியல், தொழிலாளர், நுகர்வோர் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்கின் தன்மைகளைக் குறித்தும் ‘‘மநு வரையுங்கலை!’’ என்ற நூலில், அல்லல்ல 768 பக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய நூலில் எழுதி இருக்கிறேன்.

எனவே, தேவைப்படுபவர்கள் எப்படியாவது படித்துக் கொள்ள வேண்டுமே தவிர, ‘‘நூலை விற்க முயற்சிக்கிறேன் என முட்டாள் தனமாக சொல்லக் கூடாது’’. அவ்வளவே!  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, August 5, 2017

அதிகாரம் என்பது அயோக்கியத்தனமே!


சாதாரணமாகவே மனிதர்களுக்கு ஆசை அதிகம். இதில், அதிகாரம் என்கிற போதை வேறு அவனிடத்தில் இருந்தால், அவன் எப்படி அதீத ஆசைக்கு ஆளாகாமல் யோக்கியமாக இருக்க முடியும்?!

ஆனாலுங்கூட, யோக்கியமாக இருப்பதாக அவர்கள் சொல்லிக் கொ(ல், ள்)கிறார்கள். அவர்களின் மீதான (ப, பி)ற்றால் அவர்களைச் சார்ந்தவர்களும் அப்படியேச் சொல்லிக் கொ(ல், ள்)கிறார்கள்

இப்படி, நானுங்கூட சில காலங்களுக்கு முன்பு வரை, சிலரைப் பற்றி பொது மேடைகளில் கூட சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆனால், நான் யாரையெல்லாம் அப்படி சொல்லிக் கொண்டு இருந்தேனோ, பின் அவர்களே ‘‘உங்களிடம் பொய்ச் சொல்ல விரும்பவில்லை’’ என அவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியது குறித்து வாக்குமூலமே தந்திருக்கிறார்கள்.

‘‘உன்னிடத்தில் உண்மை இருந்தால், எந்தவொரு உண்மையும் உன்னிடத்தில் தானே வந்து தஞ்சமடையும்’’ என்பதற்கு ஏற்ப என்னிடம் யாரும் உண்மையை ஒப்புக் கொள்ள தயங்குவதில்லை.

இப்படி உண்மையைச் சொல்லாதவர்களின் ஆதாரங்களுங்கூட, தானாகவே வந்து தஞ்சம் அடைந்து இருக்கின்றன அல்லது எனது தனித்திறத்தால் சேகரித்து உள்ளேன் எனவும் சொல்லலாம்.

நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி என நூலெழுதிய எனக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான சங்கதிதான்!

எனவே, அதிகாரத்தில் உள்ள ஒருவர், உங்களுக்கு ஏதோவொரு விதத்தில் நன்மை செய்தார் அல்லது ஊருக்கு நன்மை செய்தார் என்பதற்காக அவர்களை உத்தமர்கள், யோக்கியர்கள், நேர்மையாளர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.

ஏனெனில், அவர்கள் ஏதோவொரு விதத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. அது தெரிய வரும்போது என்னைப் போலவே, நீங்களும் ஏமாந்து போவீர்கள் என எச்சரிக்கிறேன். இது நானாகவே இருந்தாலும் சரி!

இந்த அனுபவங்களுக்குப் பிறகுதான் நான் குறிப்பிட்ட யாரையும் எதற்காகவும் ஆதரிப்பது இல்லை. இதிலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் என்றால் அறவே கிடையாது.

ஏனெனில், இவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பிறன் மனை ஒழுக்கத்தில் தவறி இருக்கிறார்கள். பொதுநல வாதி களாக இருந்தால், பிரபலங்களின் பினாமிகளாகவும், தொழில் முறை போட்டியாளர்களை ஒழிக்கும் பினாமிகளாகவும், எதிலும் தங்களை முன்னிருத்திக் கொள்ளும் மிகக் கேவலமான நடத்தை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களை விட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தை அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களைப் பிடித்து, பாதுகாப்புடன் ஊர்வலம் வருகிறார்கள்.

இவர்களது சில்மிஷ வேலைகளை என்னிடமும் காட்ட முற்பட்ட போதே, அவர்களுக்கு எப்படி தக்கப் பதில் பாடம் புகட்டனுமோ, அப்படியே புகட்டி இருக்கிறேன். ஆகையால், எதற்காகவும் என் பக்கம் திரும்புவதில்லை.

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.

சத்தியவான் காந்தி, பகுத்தறிவுப் பெரியார் போன்றோர், தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தில் கூட அமரவில்லை என்பதோடு, அமர்ந்திருந்த அதிகாரத்தை கூட உதறித் தள்ளினர். ஆனாலுங்கூட, அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்யாத மகத்தான பற்பல பயன் மிக்க சாதனைகளைச் செய்தும் காட்டினர்.


ஆகவே, எதைச் செய்யவும் அதிகாரம் என்பது தேவையேயில்லை; இதைச் செய்ய வேண்டுமென்கிற மனத்துணிவு இருந்தாலே போதும்; எதையும் செய்து முடிக்கலாம் என்பதை புரிந்துக் கொண்டாலே போதும், எதையும் செய்யலாம்!

மாறாக, அதிகாரத்தில் இருந்தால், அந்த அதிகாரத்தை கூட சரியாக செய்ய முடியாது. அயோக்கியத்தனங்களைத்தான் அரங்கேற்ற முடியும். இதைத்தான் இன்றைய அதிகாரத்தில் உள்ளோர் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி செய்துக் கொண்டிருப்பவர்களில் வெளியில் தெரிபவர்களை சகட்டு மேனிக்கு திட்டுவதும், தெரியாதவர்களை பெரிதாகப் பாராட்டுவதும் எந்த விதத்திலும் நியாயமாகாது. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, August 4, 2017

உயிரை (கா, போ)க்க நிதியுதவி செய்பவரா நீங்கள்?!


அவ்வளவு எளிதில் வினோதியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். இவளது உயிரை காக்க நிதியுதவி செய்தவரில் நீங்களுங்கூட ஒருவராக இருக்கலாம். 


இதுபோன்ற சம்பவங்களில், ஊடகங்கள் தங்களை முன்னிருத்திக் கொண்டு நிதியுதவி கேட்க, இறக்க குணம் உள்ளவர்கள் நம்பி நிதியை அனுப்புகின்றனர். 

ஆமாம், ஊடகங்கள் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவரை நேரடியாக அணுக விடுவதில்லை. மாறாக, தங்களின் பெயருக்கே அனுப்பச் சொல்லுகின்றன. 

ஊடகப் பொறுக்கி நிருபர்களோ, இதிலும் ஊழல் செய்கிறார்கள். ஆனந்த விகடன் நிருபர் மட்டும் ரூபாய் 57 ஆயிரத்தை, வசூல் செய்ததற்கு லஞ்சமாக வாங்கிக் கொண்டுள்ளார். 

இப்படி வினோதினிக்கு மட்டும் சுமார் ஒருகோடி ரூபாய் பணம் கிடைத்தது. உதவுவதற்கு இவ்வளவு பேர் இருக்கிறார்களா என்று, எனக்கே பிரம்மிப்பாக இருக்கிறது. 

ஆனால், இது தொடர்பான எந்தவொரு செய்தியை, காணொலியை இப்பொழுது எடுத்துப் பார்த்தாலும் நிதி கிடைக்கவில்லை என்றே பேட்டிக் கொடுத்து  இருப்பார்கள்

இவ்வளவு தொகை கிடைத்துங்கூட, வினோதினியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் இருந்து வேறு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லாமல், இங்கேயே வைத்து திட்டமிட்டு கொலை செய்தனர். 

காரணம், அவள் இருந்து என்ன செய்யப் போகிறாள்? செத்தப் பிறகு, அவளது பெயரில் அறக்கட்டளை தொடங்கி, நாமும் சுகபோகமாக வாழலாம் என்ற உறவுகளின் நட்பாசைதான்! ஆனால், அவளின் சாபம், ஆசைப்பட்டவரை பிச்சை எடுக்க வைத்துள்ளது!! 

குற்றஞ் சாற்றப்பட்டவர், ஆயுள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். ஆனால், இக்குற்றம் நடந்ததற்கு மூலக்காரணமாக விளங்கிய அவள் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் தண்டிக்கப் படவில்லை. 

ஆமாம், அவன் காத்திருந்து ஆசிட் ஊற்ற வசதியாக இவள் ஊருக்கு கிளம்பியதை, குற்றவாளிக்கு தெரிவித்தது, இவள் குடியிருந்த வாடகை  வீட்டின் உரிமையாளரே! 

இதெல்லாம், நான் மேலோட்டமாக செய்த விசாரணையில் கிடைத்த சங்கதிகள். என்னுடைய பாணியில் புலன் விசாரணையை தொடங்கினால், இன்னும் பல பாழான உண்மைகள் எல்லாம் வெளி வரும். 

என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கை மத்தியக் குற்றப் புலனாய்வு விசாரிக்க வேண்டும் என புரிந்துரை செய்கிறேன்.  

சரி, உங்க விசயத்துக்கு வர்றேன். 

நீங்கள் அனுப்பிய சுமார் கோடிக்கு, ஓரிரு லட்சங்களே குறைவான பணமெல்லாம், அவளது அறக்கட்டளையின் பெயரில், இந்தியன் வங்கியில் முடங்கிக் கிடக்கிறது. இப்படி முடக்கி வைத்து வங்கி ஊழல் செய்கிறது. 

ஆமாம், இந்த தொகையை யார்யார் அனுப்பினார்கள் என கேட்டு, அவர்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தால், தேவை உள்ளவர்கள் பெற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் கூட பெற்றுக் கொண்டு தேவை உள்ளவர்களுக்கு வழங்குவார்களே!

தனக்கு வரவேண்டிய கடனை வசூலிக்க நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து அசிங்கப்படுத்தும் வங்கி, ஏன் இதனைச் செய்யவில்லை?

எனவே, நிதியுதவி செய்ய வேண்டுமென எண்ணினால், கூடுமான வரை பாதிக்கப்பட்ட நபரிடம் நேரடியாக கொடுக்க முயற்சியுங்கள். இதுவே பாதிக்கப்பட்டவருக்கு நற்பலனை அளிக்கும். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, August 3, 2017

தன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து கதறி அழும் இலங்கை நிதிபதி!


இலங்கையின் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். பல முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மாங்குளத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கடுமையாக தண்டித்தவர்.

கடந்த வாரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஒருவரை நீதிபதி இளஞ்செழியன் சிறையில் அடைத்தார். இப்படி நல்ல தீர்ப்புகளை வழங்கு வந்த இளஞ்செழியனை கொலை செய்ய அடையாளாம் தெரியாத சிலர் முயற்சி செய்தனர்.

அப்போது இளஞசெழியன் சென்ற கார் நல்லூரில் உள்ள சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.

** இதில், நீதிபதிக்காக பாதுகாவலராக இருந்த சரத் பிரேம சந்திரா என்பவர் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.**

தன்னை காப்பாற்ற வந்து பலியான பாதுகாவலரின் வீட்டுக்குச் சென்று நீதிபதி இளஞ்செழியன் பாதுகாவலர் சரத் பிரேமச் சந்திராவின் மனைவி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.


இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும் வேதனை யையும் ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதி தமிழர், மெய்பாதுகாவலர் சிங்களர். இன வேறுபாடின்றி இவரது செயல் போற்றப்படுகிறது.

மெய்பாதுகாவலரின் இரண்டு பிள்ளைகளை தத்து எடுத்துள்ளார். கல்வி முதல் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார் மனிதாபம் நிறைந்த நீதிபதி.

இது போன்ற நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்களா? என்ற கேள்வியோடு இச்செய்தி எங்களுக்கு வந்தது.

******

இப்படி இந்தியாவிலுங்கூட, நிதிபதிகளை தாக்கிய சம்பவங்கள் பல உண்டு என்பதை விட, அதிகார துஷ்பிரயோக பாதுகாப்பால்தான் நிதிபதிகள் உயிர் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்வதே மிகவும் சரியான உண்மை!

நீதி வழங்கும் நிதிபதிகளுக்கு எப்பொழுது பாதுகாப்பு தரப்பட்டதோ, அப்பொழுதே அவர்கள் சொல்வது நீதியல்ல; அநீதி என்றாகி விட்டது. இதைவிட கேவலம் மக்களாட்சியில் வேறெதுவும் இருக்க முடியாது. 

ஆமாம், பாதுகாப்பு எல்லாம் பாதுகாப்பு அல்ல. பாதுகாப்பு என்றப் பெயரில் அனுபவிக்கும் அதிகாரச் சிறைவாசமே அன்றி வேறில்லை

ஆமாம், சிறையில் உள்ள கைதிகள் எப்படி சுதந்திரமாக இருக்க முடியாதோ, அப்படித்தானே இவர்களும் இருக்கிறார்கள்?!

ஆகையால், எந்த நிதிபதியால் தனக்கு பாதுகாப்பே வேண்டாமென துணிந்து சொல்ல முடியுமோ, அவர் மட்டுமே நீதிபதியாக இருக்க முதலில் தகுதியானவர். ஆமாம், இது முதல் தகுதி மட்டுந்தான்! 

ஏனெனில், நீதிபதிக்கு என பல இலக்கணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் பூர்த்தி செய்பவரை மட்டுந்தான் நீதிபதியென என்னால் சொல்ல முடியும். 

குற்றவியல் வழக்குக்களில், குற்றஞ்சாற்றப்பட்ட நபரே, தான் குற்றவாளியென ஒப்புக்கொண்டு, குறைந்தபட்ச தண்டனையை கேட்டு வாங்கிக் கொள்ளும் அளவிற்கு விசாரணையை நடத்துவதே, ‘‘நியாயமான விசாரணை’’ முறையாகும். 

இப்படிப்பட்ட நபரே, ‘‘நீதிபதி’’ என்ற பெயருக்கு, இரண்டாவது நிலையில் தகுதியானவர். ஆமாம்,

1. இப்படிச் செய்து விட்டால், குற்றவாளிக்கு யார் மீதும் கோபம் வராது.

2. ஆகையால், தன் தண்டனைக்கு காரணமான புகார்தாரர், சாட்சிகள் மற்றும் நிதிபதி உட்பட யாரையும் பழிவாங்க வேண்டு மென தோன்றாது.

3. அதே சமயம் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் முடியாது.

4. ஆகையால், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முடியாது என சமூகத்திற்கு விளையும் பல நன்மைகளைச் சொல்லலாம்.

மேற்சொன்ன நான்கும், எவருக்கும் எளிதாக விளங்கும். அவ்வளவே!

இப்படியொரு விசாரணை முறை கையாண்டு இருந்தால், இலங்கை நிதிபதியின் பாதுகாவலர் கொல்லப்பட்டு இருக்க மாட்டார். இலங்கை நிதிபதிக்கும் காலில் விழ வேண்டிய நிலைமை வந்திருக்காது. 

இந்நிதிபதி என்னதான், காலில் விழுந்து கதறி அழுதாலும், போன பாதுகாவலரின் உயிரைத் திரும்பக் கொண்டு வரமுடியுமா? 

எவர் ஒருவருக்கும், அவரவர்களது உண்மையே பாதுகாப்பு என்றாலுங் கூட, அவரவரும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். 

ஆகையால், நிதிபதிகள் உள்ளிட்டோருக்கு பாதுகாவல் பணியில் உள்ள காவலூழியர்கள், முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொண்ட பிறகே, பிறரை பாதுகாக்க வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்காக தங்களின் உயிரை இழக்கக்கூடாது. 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, August 2, 2017

கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களே... எச்சரிக்கை!


கள்ளக் காதலில் ஈடுபடும் ஆண்கள் மற்றும் பெண்களின் தன்மைகள் எத்தகையது என்பதை, நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதி எச்சரித்து உள்ளேன்.
 
கள்ளக் காதலால் ஏற்படும் இன்னபிற விளைவுகளை என்னால் வெளிப் படையாக எழுத முடியவில்லை.
 
சில மாதங்களுக்கு முன் நல்லதொரு நண்பர் வீட்டுக்கு சென்றிருந்தேன். திருமணம் செய்யும் நிலையில் உள்ள மகள் மகன் மற்றும் மனைவியுடன் அமர்ந்து, ‘‘சொல்வதெல்லாம் உண்மை’’ நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். 

அன்றைக்கும் கள்ளக்காதல் விவகாரந்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆகையால், அந்நிகழ்ச்சியைப் பார்க்கவே எனக்கு கொஞ்சம் சங்கடமாகி விட்டது.

ஆனால், அவர்களோ எந்த விதமான சங்கடமும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியைப் பற்றி விவாதித்து பேசிக் கொண்டனர். அடுத்த நாள் அவரிடம் கேட்டேன். 

நம் மகனுக்கும் மகளுக்கும் நாம் வெளிப்படையாக  சொல்ல முடியாத பல சம்பவங்களை இந்நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். ஆகையால், இப்படி யெல்லாங் கூட சமுதாயத்தில் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் எச்சரிக்கையாக இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவசியம் என்றார். 

உண்மையில், இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்று எண்ணுபவர்களுக்கு மத்தியில், அவரின் இந்தப் பார்வை முற்றிலும் வித்தியாசமானது என்பதை விட, மனைவி, மகள் மற்றும் மகன் மீது கொண்டிருந்த நம்பிக்கை அதீதமானது.  

உண்மையில், அதற்கு முந்தைய நாள்தான், ‘‘வயதுக்கு வந்த பெண்ணுடன், மற்றொருவனுடன் ஓடிப்போன மனைவி, எதிர்க்காலத்தில் எப்படியெல்லாம் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவாள்’’ என்பதை அவளது கணவனுக்கு சொல்லி இருந்தேன். 

நான் சொன்னதில், ‘‘கீழுள்ள செய்தியில் நடந்துள்ளது போலவே, உன் மகளுக்கும் நடக்கும்; ஆகையால், அவளை எப்படி காப்பாற்ற வேண்டுமோ, அப்படியே காப்பாற்றக் கொள்’’ என சில முன் யோசனைகளை அவருக்கு எச்சரிக்கையாக சொல்லி இருந்தேன். 
நான் முன்னரே சொன்னதுபோல, இந்த செய்திப் போன்ற சில உண்மைகளை என்னால் வெளிப்படையாக எழுத முடியவில்லை. செய்தியாகவே வந்துள்ளதால் பதிவிடுகிறேன். 

இந்த செய்தி கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு நல்லதொரு பாடமாக அமையட்டும்!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

ரூபாய் விவகாரத்தில் ரூபாவின் விஸ்வரூபம்!


நாடு முழுவதும் உள்ள சிறைகளில், பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும், இதுபற்றி நூல்களில் அவ்வளவாக எழுதியதில்லை. ஏனெனில், இதுபோன்ற விடயங்கள் வெளியில் தெரிந்தால், எல்லோருமே தவறாகப் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்பதால்தான்!

ஆனால், தற்போது சிறையைப் பற்றிய தகவல்கள் பலவாறாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஆகையால், இனி மறு பதிப்பாக புதுப்பிக்க இருக்கும் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் சிறையில் நடக்கும் பல்வேறு விடயங்களைப் பற்றி எழுத எண்ணி உள்ளேன். 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா உள்ளிட்டோருக்கு, இரண்டு கோடி ரூபாயை லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறையில் வசதிகள் செய்து கொடுத்ததான விவகாரத்தில், தன் மீதான மான நஷ்ட வழக்கில் ரூபா  தானே வாதாடப் போவதாக அறிவித்து உள்ளார்.

உண்மையில் அரசூழியர்களுக்காக, அரசுப் பொய்யர்கள்தான் வழக்கு தொடுப்பார்கள், வாதாடுவார்கள். ஆனால், இங்கு வழக்கு தொடுப்பவரும், அதனை எதிர் கொள்பவரும் அரசூழியர்களே என்பதால், இவ்விரண்டு ஊழியர்களுக்காகவும் அரசுப் பொய்யர்கள் வாதாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனால் வழக்கு தொடுப்பவர் தனிப்பட்ட முறையில் பொய்யரை வைத்துதான் வழக்கு தொடர முடியும். இதுவே அவருக்கு பாதகமான, ரூபாவுக்கு சாதகமான நிலைதான்.

ஆமாம், அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு இருந்தால், அரசே அவருக்கு அதரவளிக்கும் விதமாக அரசுப் பொய்யரை வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தும். 

வழக்கை எதிர்கொள்ள இருக்கும் ரூபாவுங்கூட, எதிர்வழக்காட அரசின் உதவியை கோரலாம். ஆனால்,  அரசுப் பொய்யர்களையும், தனது பொய்யர்களையுங் கூட நம்பாமல் தானே வாதாடுவது என முடிவு செய்திருப்பது, நிச்சயம் திருப்பு முனைதான்!
எனவே, தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக இப்படியொரு முன்மாதிரி முடிவை எடுத்த ரூபாவுக்கு நம் வாழ்த்துக்கள்!!

இப்படியொரு முடிவை ஏற்கெனவே தேர்தல் வழக்கொன்றில் சகாயம் எடுத்திருந்தாலும், ரூபாவின் முடிவு சமூகத்தில் நல்லதொரு விழிப்பறிவுணர்வை ஊட்டும். குறிப்பாக, கன்னட மக்களுக்கு நல்லதொரு வழிகாட்டு செய்தி!

நம்மால் இயன்ற வழிகாயை ரூபாவுக்கு காட்டும் விதமாக நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலின் கன்னட பதிப்பையும், இந்திப் பதிப்பையும் அனுப்பி வைக்க உள்ளோம்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)