No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, July 25, 2017

அரசூழியர்கள் காரிய அடிமைகளே! கயமை கோமாளிகளே!!


நம் சட்ட விழிப்பறிவுணர்வு தொடர்பாக, தினந்தினம் ஏதோவொரு செய்தி, ஏதாவொரு வகையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது கடந்த வாரம் வந்த மின்னஞ்சல்.

I came to know about through one of my friend Sri.Thillaigovindan who is a retired Tasildar and also victimized by Tamilnadu Government guard with out any logic.

I am Thirugnanam, retired engineer from Ministry Of Defence and settled in my native place. (Edited)

I agree with your statement in connection in connection with court and lawyer. I want to discuss with you. Will you give your contact details if you wish.

இந்தச் செய்தியின் மூலம், இவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற ஊழியர்கள் (கெஸட்டேட் ரேங்க்) என்பது புரிந்திருக்கும். இவர்கள் எல்லாந்தெரிந்த அறிவாளிகள் என்பது மக்களின் மூட நம்பிக்கைகளுள் ஒன்று.

ஒழுக்கமாய் இருப்பவர்கள் அரசூழியத்துக்கு போகமாட்டார்கள். போனாலும் நிற்க மாட்டார்கள். ஆனால், அங்கேயே நின்று விட்டு அரசு பழிவாங்கி விட்டது, பாதிக்கப்பட்டு விட்டேன் என்பதெல்லாம் ஏற்க இயலாதது.

இப்படி நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் சட்ட அறியாமையைப் போக்கிக் கொள்ள நம்மிடம் இருந்து நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்குகிறார்கள்.

இவர்களிடம் நாம் ஒரு தகவலை கேட்டால், தெரிந்தாலும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஏனெனில், அவர்களைப் பற்றிய சட்ட விதிகள் யாருக்கும் தெரிந்து விடக்கூடாதாம்!

இதற்காக நம் நூல்களை வாங்குகிற வரை நாம் கேட்டதை தருவதுபோல எதையாவது சொல்லி நடிப்பார்கள். வாங்கியப்பின் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

நான் வழக்கமாக ஜெராக்ஸ் எடுக்கும் நம் வாசகரின் இடத்துக்கு தாசில்தார் மேனுவல் வந்திருந்தது ஜெராக்ஸ் வாசகரோ, அதனை பிரதி எடுத்து தரட்டுமா என்றார்.

அவர்களை கேட்காமல் எடுக்க வேண்டாம். அனுமதியைப் பெற்று எடுத்துதர சொல்லி இருந்தேன். அவர் கேட்க, அதன் பிறகு அந்த தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நகலெடுக்க எதையும் தருவதில்லை.

இப்படித்தான் நகலர்கள் விதிகள் 1971 ஐ நகல் கேட்டு கிடைக்கவில்லை. இவை இரண்டும் நம் கைக்கு கிடைக்குமா என சுமார் 15 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கிடைக்கவில்லை. கீழ்கண்ட கடிதத்தை எழுதிய நீதிமன்ற ஊழியர்கூட கொடுக்கவில்லை.


இதுபோன்ற முக்கியமான விலைக்கு கிடைக்காத சட்ட நூல்களை எல்லாம் திருடுவது பெரிய காரியம் அல்ல. ஆனால், அதனை நாமே செய்யக்கூடாது என்ற காரணத்தினால், என் கைக்கே கிடைத்த பல நூல்களை வேண்டாமென விட்டு விட்டேன்.

ஆமாம், எனக்கு எது தேவையோ, அது தானாகவே என்னைத்தேடி வரும் அல்லது நான் தேட எளிதில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இதற்கு தகுந்தாற் போல, யாரிடமும் இல்லாத நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இரு சட்ட நூல்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துதுறை அரசு விதிகள் கூட என்னிடம் வந்து தஞ்சமைந்து இருக்கின்றன. இது எனது ஆராய்ச்சி்க்கு உதவுமே அன்றி, எல்லோருக்கும் உதவாது.

இதில் முதலில் தஞ்சமடைந்தது, அரசின் வெளியீடான ‘‘கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலே!’’

எல்லோருக்கும் பயன்படும் என கருதுகிற, ‘‘கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலை’’ என்னுடைய குறிப்புகளுடன் வெளிக்கொண்டு வர கடந்த ஓராண்டு காலமாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்த பாடில்லை.

இதில் இரண்டு தொகுதிகள் உள்ளன. முதல் தொகுதிகள் முழுவதும் விதிகள். இதனை பல வருடங்களுக்கு முன்னர், சில வாசகர்களுக்கு கொடுத்துள்ளேன். இரண்டாம் தொகுதி படிவங்கள். இது யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை.

விஏஓ, தாசில்தாரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர்வரை அவரவரது சட்டக் கடமைகள் என்ன என்பது, குற்ற விசாரணை முறை விதிகளில் உள்ளதால், அவர்களுடைய சட்ட விதிகள் தேவையேப்படாது.

நீங்கள் சொல்வதுபோல இவர்களுக்கு குற்ற விசாரணை முறை விதிகளில் இல்லையே என நீங்கள் நினைத்தால், அது தவறு.

அவ்விதிகளில் ‘‘செயல்துறை நடுவர்கள்’’ என எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டு உள்ளதோ, அதெல்லாம் தாசில்தார் அல்லது வட்டாச்சியரையே குறிக்கும்.

‘‘மாவட்ட குற்றவியல் நடுவர்கள்’’ என்றால் மாவட்ட ஆட்சியர்களை குறிக்கும். வேறு செயல்துறை நடுவர்கள் என்று பொதுவாக குறிப்பிட்டால், வட்டாச்சியர், கோட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரையும் பொதுவாக குறிக்கும்.

‘நீதித்துறை நடுவர்’’ என்றால்தான் நடுவர்களை அல்லது நிதிபதிகளை குறிக்கும்.

மேலேகண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தாசில்தாரும் நம்மிடம் இருந்துதான் நூல்களை வாங்கியதாகவும், இவரிடமும் அவர்களது சட்ட விதி தொகுப்பை கேட்டது போலவும், மற்ற ஊழியர்களைப் போலவே கொடுக்க வில்லை எனவும் நினைவு.

இப்போது, அவர் சொன்னதுதாக கூறி இன்னொருவர் என்னைத் தொடர்புக் கொள்ள முனைகிறார். வழக்கம்போல, நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள். சந்தேகம் என்றால் கேளுங்கள் என்பதுதான் என் பதில்.

இன்னுஞ் சொல்லப்போனால், இதுபோன்ற அரசூழிய காரிய அடிமை கோமாளிகளுக்கு நம் நூல்களை கொடுக்க கூடாது என்றே தோன்றுகிறது.

நம் நூல்களைப் படிக்கும் இவர்கள் மிகுவும் ஆச்சரியத்தோடு சொல்வது, ‘‘எங்களைப் பற்றி எங்கேளுக்கே தெரியாத பல சங்கதிகளை எழுதி உள்ளீர்கள்’’ என்பதுதான்.

இதுதான், ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எழுதியதற்கான பலன். இதையே அவரவர்களையும் கேட்டு எழுதி இருந்தால், நூல்களை ரசித்து வாசிக்கும்படி இருந்திருக்காது.

இப்படிஆராய்ந்து எழுத இன்னும் எவ்வளவோ சங்கதிகள் இருக்க, இதனைச் செய்யாமல், நான் ஆராய்ந்து எழுதி உள்ளதை படித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே கூத்தடித்துக் கொண்டு இருக்கும் கோமாளி வாசகர்கள் ஒருபுறமென்றால்..,

இப்படியெல்லாம் ஆராய்ந்தறிந்து எவரும் உணரும்படி மிகமிக எளிமையாக எடுத்துச் சொல்லியுங்கூட, புரியவில்லை என்று ஒருவன் சொன்னால், அவனை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது. இப்படியுங்கூட இருக்கிறார்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)