நட்பு என்பதற்கான விரிவான இலக்கணமே வேறு! இதனை ஓரளவு அறிந்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்லப்போனால், ‘‘உன் நண்பன் யாரென்று சொல்லு; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்று சொல்வதுண்டு. அந்த அளவிற்கு துல்லியமாக சொல்ல முடியும்.
ஆனால், இன்று நம்மோடு படித்தவர்கள், விளையாடியவர்கள் என யாரும் யாரையும், நண்பர்கள் என எளிதாக சொல்லிக் கொ(ள், ல்)கிறார்கள்.
நம்மோடு படித்ததாலேயோ அல்லது விளையாடியதாலேயே அவர்கள் அனைவரும் நண்பர்களாகி விட முடியாது.
இது உண்மையல்ல என்றால், இன்று ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஆயிரமாயிரம் நண்பர்கள் இருக்க வேண்டும். ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருப்பார்கள்.
சரி, இன்றோ ஒருவரையொருவர் சந்திக்காத முகநூல் நட்பிலும் தங்களை ஒத்த கருத்துக்களின் அடிப்படையில் நண்பர்கள் என சொல்லிக் கொ(ள், ல்)கிறார்கள்.
முன்பெல்லாம் நான் வாசகர்களை கூட, நண்பர்களாகத்தான் கருதினேன். ஆனால், அவ்வாசசகர்கள் ஏதோவொரு காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக..,
என்னுடைய அன்பர்களைப் போல பழகியப்பின் அவர்களது காரியத்துக்கு எனது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றபோது, வம்பர்களாக மாறி இருக்கிறார்கள்.
மேலும், நியாயமான காரியத்தை சாதித்துக் கொண்டவர்கள், அவர்களைப்பற்றி நூல்களில் எழுதிய பிறகு, அதனை நற்சான்றாக எடுத்துக் கொண்டு, எப்படியெல்லாம் ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பன உட்பட அனைத்தையும் நூல்களில் எழுதியுள்ளேன். இது என்னுடைய முகநூல் வாசக நட்பு வட்டத்திலுங்கூட வெகுவாக நடந்திருக்கிறது.
உண்மையான நட்பில் விரிசல் வராது. அப்படியே தப்பித்தவறி வந்தாலுங்கூட, ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ள மாட்டார்கள். ஆகையால், சிறிது காலம் பிரிந்திருந்தப் பின் புதிய புரிதலின் அடிப்படையில் நட்பாகி விடுவார்கள். இவர்களே நட்புக்கு இலக்கணம்.
இவர்களில் ஒருவர், வீண் பிடிவாதக்காரராக இருந்தால் கூட, மீண்டும் சேர முடியாது. ஆனால், வேறு நட்புகளின் வழியில் அறிந்து கொள்வார்கள். மறைமுகமாக உதவுவார்கள். வலியச் சென்று பேசினால் மட்டும் பேசுவார்கள்.
ஆனால், போலியான அன்பு, தான் எதிர்பார்த்தது கிடைக்காத போது அல்லது கிடைத்தப்பின் எதையும் செய்யும். இது மிகவும் கீழ்த்தரமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் நிச்சயம் நடந்திருக்கும். நன்றாக யோசித்துப் பாருங்கள்.
ஆகையால், (அன், வம்)பர்களைப் பற்றி ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன். இதனை சிலர் படித்து இருக்கலாம். படித்தவர்களும் மறந்திருக்கலாம் பலர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தப் பதிவு அவசியமாகி விட்டது.
எனவே, என்னைப் போலவே நீங்களும் கடைப்பிடியுங்கள். இதனை உங்களது விருப்பப்படி மற்றவர்களிடம் கடைப்பிடிக்கவில்லை என்றாலுங்கூட, பரவாயில்லை. தவறாது, என்னிடம் கடைப் பிடியுங்கள்.
ஏனெனில், நான் ஆராய்ந்து முடிவெடுத்து விட்டால், பின் அது யாராக இருந்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன். இதனால் கோடான கோடி ரூபாய் இழப்பு என்றாலுங்கூட கவலைப்பட மாட்டேன்.
எனவே, எந்தவொரு எதிர்பார்ப்பிலும் என்னுடைய வாசக வட்டத்திலோ அல்லது நட்பு வட்டத்திலோ இருந்து ஏமாறாதீர்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment