பொய்யர்களே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளே...
கருப்பு அங்கி அணிந்துள்ள கயவர்களே...
நியாயந்தான் சட்டமென சொல்லுங்கள்...
சட்ட விதிகளை ஆராய்ந்து அறிந்து மதியுங்கள்...
யார் பொய்ச் சொன்னாலும் நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்...
உண்மையைச் சொல்வதில் தோல்வியே இல்லையென சொல்லுங்கள்...
இல்லையேல், நம் தேசத்தை அழிப்பவர் நீங்கள்...
ஆமாம், நம் தாத்தா காந்தி...
பகுத்தறிவுப் பெரியார்...
மாயுரம் வேதநாயகம் பிள்ளை...
கப்பலோட்டிய தமிழன்...
கவிமணிப் பிள்ளை...
என அத்துனை பேராலும், கண்டபடி காரி துப்பப்பட்டவர் நீங்கள்...
இதனை, ஒவ்வொரு நொடியும் நினைவில் கொள்ளுங்கள்...
நீங்கள் உண்மையிலேயே மனிதப் பிறவிகளாக இருந்தால்...
உங்களது பொய்த்தொழில்களை கைவிட்டு, தேசத்துக்கு நன்மை செய்யுங்கள்...
இந்த நன்மையைச் செய்யுங்கள்; இதனை இன்றே செய்யுங்கள்...
இனி என் வாழ்வில் பொய்யே இல்லையென சொல்லுங்கள்...
ஆமாம், பொய்யர்களே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளே...
கருப்பு அங்கி அணிந்துள்ள கயவர்களே...
குறிப்பு: இது, ‘என்னைப் போல் ஒருவன்’ என்ற தமிழ்ப்பட பாடலின் தழுவலில், என்னால் எழுதப்பட்ட இதனை அப்பாடலின் ராகத்திலேயே படித்தால் இனிமையாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
இப்படி, பாடல்களை தழுவி ராக ரசனையோடு பாடலாக எழுதத் தெரிந்தவர்கள் எழுதித்தந்தால், அதனை நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வெளியிட்டு, பாடல் வழியிலும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்தலாம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment