நீங்கள் எந்த சமூக வலைத்தளத்தில் வலம் வந்தாலும், உங்களுக்குப் படித்தமான பதிவுகளை பகிரும்போது, எதற்காக அப்பதிவை பகிருகிறீர்கள் என்பதை சுருக்கமாக அதற்கென அச்சமூக வலைத்தளம் ஒதுக்கியுள்ள பகுதியில் பதிவிட்டு பகிருங்கள்.
இதில், அப்பதிவு குறித்த தங்களின் ஆக்கப்பூர்வமான அல்லது ஆதாரப்பூர்வமான மாற்றுக் கருத்தையுங்கூட சொல்லலாம்.
இப்படிச் செய்ய வேண்டும் என்பதற்காகவேத்தான், சமூக வலைத்தள வல்லுநர்கள் இப்பகுதியை பிரத்தியேகமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
அப்போதுதான், நீங்கள் பகிர்வதன் நோக்கம், உங்களது நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் கவனத்தையும், அசல் பதிவாளரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதோடு, அதுகுறித்த உங்களின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தும்.
ஆனால், அரிதிலும் அரிதாக வெகுசிலரே இதனை செய்கிறனர். என்னுடைய நட்பு வட்டத்தில் இப்படி செய்யும் வெகுசிலரில் தவறாமல் தொடர்ந்து, தன் கருத்தோடு பகிர்பவர் Nanjil K Krishnan அவர்கள் மட்டுமே!
ஆகையால், இவர் எனது பகிர்ந்தார் என்ற செய்திச் சமிக்கை கிடைக்கும் போதெல்லாம், என்ன கருத்தை வழிமொழிந்துள்ளார் என நானும் பார்ப்பேன்.
மேலும், நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் உள்ள பதிவரைப் பற்றி எந்த வகையில் எழுதினாலும், அது அவரையும் ஈர்க்க அச்சமூக வலைப்பதிவரின் வலைப்பதிவு பெயரை இணையுங்கள். இதனை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்.
அப்போதுதான், அப்பதிவரின் கருத்துக்களை விரும்புவோர், எளிதாக அவரது பக்கத்திற்கு செல்ல முடியும் என்பதோடு, தம் கருத்தில் ஒத்த கருத்துடையவர்களாக அல்லது சிந்தனை உள்ளவர்களாக யார்யார் இருக்கிறார்கள் என்பதை அவரவர்களும் இனங்கண்டு கொள்ள முடியும்.
ஆனால், இதனை தவிர்த்து, யாருடைய கருத்தை பகிர்கிறார்களோ அவர்களுக்கே தெரியாத வண்ணம், அவர்கள் சமூக வலைத்தளத்தில் முக்கிய முகவரிப் பெயராக பயன்படுத்தாத பெயர்களை, நன்றியென குறிப்பிட்டு பதிவிடுகின்றனர். இப்படிச் செய்வதில் சில நல்ல நோக்கங்களும், சில கெட்ட நோக்கங்களும் இருக்கின்றன.
ஆமாம், உதாரணத்திற்கு என்னுடைய பெயரை முகநூல் பதிவில் இணைக்க வேண்டுமெனில், Warrant Balaw என்றுதான் பதிவிட வேண்டுமே ஒழிய, நன்றி திரு. வாரண்ட் பாலா என்று பதிவிட்டால், அப்பதிவு எனது கவனத்தை ஈர்க்காது.
எதிர்பாராத வகையில், பார்த்தால்தான் உண்டு. இப்படி, என்றோப் பதிந்து, இன்று பார்த்ததைத் தான் கீழே (ப, பா)டமாகப் பதிவு செய்துள்ளேன்.
இதற்கு பெயரை குறிப்பிடாமல் இருப்பதே மேல். ஏனெனில், குறிப்பிடுவேன். ஆனால், அப்படி குறிப்பிட்டது அவருக்கே தெரியக்கூடாது என்ற செய்தி எதற்காக... யாரை ஏமாற்றுவதற்காக?
இப்படியெல்லாந்தான் சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டுமென தெரியாதவர்கள் தெரியாதவாறும், தெரிந்தவர்கள் தெரிந்தவாரும், தெரியாதவாரும் தெள்ளத் தெளிவாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்விரு பிரிவினருக்காகவுந்தான் இப்பதிவு!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment