No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, July 10, 2017

(மெ, பொ)ய்யர்கள் (மெ, பொ)ய்யர்களே!!


பொய்ச் சொல்லி தப்பிப்பதை விட, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்! ஏனெனில், ‘‘பொய் உன்னை வாழவிடாது. உண்மை உன்னை சாகவிடாது’’ என்று வீரத்துறவி விவேகானந்தர் சொன்னதாக சொல்லுவார்கள். 

சட்டத்தொழில் புரியும் பொய்யர்களைப் பற்றி எச்சரிக்கும் எவ்வளவோ சங்கதிகளை எழுதி வருகிறேன். அப்படி இருந்துங்கூட பலர் எச்சரிக்கையாக இல்லாமல், அவர்களிடம் வழக்கை ஒப்படைத்து, ஒரு சிக்கலை நீதிமன்ற ஆவணங்களின் வழியில் பல்வேறு சிக்கல்களாக ஆக்கிக்கொண்ட பின்னர், புத்தி வந்தவர்களைப் போல தாங்களே வாதாடவும், போராடவும் முயல்கின்றனர். இது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை, யாராலும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. 

ஏனெனில், ‘‘கூடா நட்பு கேடாய்த்தான் முடியும்’’ என்பது இயற்கை நியதி கோட்பாடு. இது புரியாமல், நமக்கு நன்மையாய் முடியுமென முதலில் பொய்யர்களை நம்புவது அறிவு (வ, வெ)றுமையே! 

ஆமாம், உ(ய)ரிய கூலி கொடுத்து, நாம் பிடிக்கும் பொய்யர்களின் கூடா நட்பு, நமக்கு நீதியைப் பெற்றுத் தருமென நம்புவது அறிவு வறுமையின் உச்சமே!! 

ஏனெனில், பொய்யர்கள் என்றால், ‘‘உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி; நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும் ஆக்கி விடுவார்கள்’’ என்று தவறாக பொருள் கொண்டு, நமக்கு நன்மைதானே என்று கருதி இறுதியில் ஏமாறுகிறார்கள். 

இப்படி ஏமாந்தப் பின்னரே, நான் சொல்லும் உண்மைகள் புரிகிறது போலும்! ஆகையால், என்னிடம் தானே வாதாடுவது குறித்து ஆலோசனை கேட்கிறார்கள். இவர்களின் பல்வேறு சிக்கல்களையும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் நிலையில் நானில்லை. இது அவரவர்களின் வேலையே தவிர, என்னுடைய வேலையன்று. 

ஆகையால், தேவைப்பட்டால் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களைப் படித்து, தெரிந்ததை செய்துக் கொள்ளுங்கள். இந்நூல்களில் புரியாத சந்தேகம் என்றால் கேட்கலாம் என்ற நியாயமான அனுமதியை மட்டுந் தந்திருக்கிறேன். இதைக்கூட மற்ற நூலாசிரியர்கள் செய்வதில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். 

பொய்யர்கள் என்றால், உங்களது பொய்யை உண்மையாக்கு வார்கள் என்பது அர்த்தமல்ல; மாறாக, பொய்யை மேன்மேலும் பொய்யாக்கி விடுவார்கள் என்றே பொருள்.

உங்களது பொய்க்கே, உங்களுக்கு தீங்கு நேரிடுமென்றால், பொய்யர்களின் பொய்யால் பெருந்தீங்கே நேரிடும். இதுபோலத்தான் உண்மை மேன்மேலும், உண்மையாகி உங்களுக்கு நன்மை செய்யும். 

இதைத்தான், வீரத்துறவி விவேகானந்தர், ‘‘பொய்ச் சொல்லி தப்பிப்பதை விட, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்!’’ என்று இரத்தினச் சுருக்கமாக சொல்லி உள்ளார். 

ஒருவேளை உங்களது பொய்யர், தன் தொழில் வழிவந்த நிதிபதியை சரிகட்டி, அவரது பொய்யை உங்களுக்கு சாதகமாக்கி தந்தாலுங்கூட, இயற்கை நியதிக் கோட்பாட்டின்படி, வினை கூடச் செய்யுமே ஒழிய குறையாது என்பதைத்தான், ‘‘பொய் உன்னை வாழவிடாது. உண்மை உன்னை சாகவிடாது’’ என்றுங்  கூறியுள்ளார்.

இன்னுங் கொஞ்சம் புரியும்படி சொல்லப்போனால், உண்மையை ஒப்புக் கொள்வதன் மூலம், பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல மணக்கலாம். இல்லையெனில், துர்நாற்றத்தோடு சேர்ந்த  நறுமணத்தைப் போல சேர்ந்து நாற வேண்டியதுதான். 

ஆமாம், பொய்யர்களின் வழிவந்த நிதிபதிளின் தண்டனையில் இருந்து, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். ஆனால், இயற்கையின் தண்டனையில் இருந்து, உங்களை காப்பாற்றிய நிதிபதியே கூட தப்ப முடியாது. 

இனம் இனத்தோடுதான் சேரும் என்ற இயற்கை நியதி தத்துவத்தில், தங்களின் பக்கம் நியாயமில்லாதவர்கள் கூட பயத்தில் பொய்யர்களைத்தான் நம்பியாக வேண்டும். 

ஆனால், தங்களின் பக்கம் நியாயமிருக்கிறது என்று சொல்பவர்களுங்கூட, தங்களின் வழக்கை நடத்த பொய்யர்களை நம்புவது அபத்தமான அநீதிக்கே வழிவகுக்கும். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)