இன்னுங்கூட தங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்குன்னு நடிக்கிற நிதிபதிகளை விட, உலகமகா பைத்தியக்கார நடிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
ஆமாம், இவர்களைப்பற்றி சத்தியவான் காந்தி,
பகுத்தறிவுப் பெரியார், மாயுதம் வேதநாயகம் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, கவிமணி பிள்ளை மற்றும் நான் சொன்னதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது.
ஏனெனில், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நிதிபதிளுக்கே நூல்களைப் படிக்கக் கொடுத்து உள்ளோம்.
மேலும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள இந்தியத் தலைமை ஊழியருக்கான ஆங்கில வரைவை உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கும் அனுப்பி இருக்கிறோம்.
எனவேதான், மதிப்பும், மரியாதையும் இருப்பது போல நடிக்கிறார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். இப்படி நடிப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியுமில்லை. அய்யோ பாவம்!
நிதிபதி கர்ணனுக்கு கொடுத்தது போல, எனக்கும் திஹாருக்கு போக ஒரு வாய்ப்புக் கொடுத்தா, வட மொழியை சுலபமா கத்துக்கிட்டு வந்து, நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வடமொழியில் எழுதி, வட இந்தியர்களும் சட்டப்படி வறுத்தெடுக்க வசதி செய்து கொடுத்துடுவேன்.
நிதிபதிகள் மனமிறங்குவார்களா?!
சரி, நம்ம சங்கதிக்கு வருவோம்!
நிதிபதிகளை எதிர்ப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், நிதிபதிகளின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை கூட, சட்டப்படி சந்திக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.
ஏனெனில், நிதிபதிகள் தங்களுக்கு எதிரானவர்களை, தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பைத்தியக்கார பட்டம் கட்டப் பார்ப்பார்கள்.
அதாவது, கர்ணனுக்கு மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டது போல உத்தரவிட்டு, அரசு மருத்துவரிடம் இருந்து, பைத்தியம் என்று சான்றிதழ் பெற்று விடுவார்கள்.
இதற்கு நிதிபதி கர்ணன் ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் தான், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை ஏழு நிதிபதிகளை கொண்ட கூட்டுக்களவாணிகளின் உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
இதில் அவர்களின் காழ்ப்புணர்ச்சியும் வெளிப்படுகிறது. இதில், பல்வேறு இந்தியச் சாசன சட்டப் பிரச்சினைகளும், சாதிய அடக்கு முறைகளுங்கூட இருக்கின்றன.
சரி, நல்ல மனநிலையில் உள்ளவர் கூறிய குற்றச்சாற்று குறித்து விசாரணை செய்ய மறுப்பதே, அவரது கூற்றில் உண்மை இருக்கிறது என்பது மட்டுமல்ல; நிதிபதிகளும் ஊழல்வாதிகளே என்பது உலகமே அறிந்த உண்மைதான். இதனால்தான், நானுங்கூட நிதிபதிகள் என்றே நூல்களில் எழுதுகிறேன்.
தங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு பைத்தியக்கார பட்டைத்தை கட்டி விட்டால் அடங்கி விடுவார்கள் என பைத்தியக்கார நிதிபதிகள் நினைக்கிறார்கள்.
உண்மையில், நிதிபதி கர்ணனைப் போன்று சிறைக்குப் போகப் பயப்படுபவர்கள்தான் பயப்படுவார்கள். எதற்கும் துணிந்த வர்கள், நிதிபதிகளை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் துணிந்து விமர்சிப்பார்கள். இது அவர்களுக்கு கட்டப்பட்ட பைத்தியக்காரப் பட்டத்திற்கு பிறகு மேலும் அதிகமாகும்.
ஏனெனில், நிதிபதிகளே பைத்தியக்காரப் பட்டத்தை, பைத்தியக் காரதனமாக கட்டி விட்டதால், அவர்களை சட்டப்படி சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கவும் முடியாது. இது தங்களுக்கே ஆபத்து என்பதை பைத்தியக்கார நிதிபதிகளால் உணர முடியவில்லை.
இப்படியொரு சங்கதியைப்பற்றி, 2010 ஆண்டில் வெளியிட்ட நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் விரிவாக எழுதி உள்ளேன். படிக்காதவர்கள் படித்து தெளிவு பெறுங்கள்.
ஏனெனில், இந்தப் பைத்தியத்திம் சொல்வதெல்லாம் சட்டத்துக்கு விரோதமானது என்பது புரியாமல், அதன்படி நடந்த பலபேர் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஆமாம், பைத்தியத்தைத்தான் தண்டிக்க முடியாதே ஒழிய, அப்பைத்தியம் சொன்ன ஆலோசனையின் நடந்த உங்களை சட்டப்படியே தண்டிக்க முடியும். எச்சரிக்கை!
நான் சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு இதுவும் ஓர் உண்மை. அவ்வளவே!
ஏனெனில், இந்தப் பைத்தியத்திம் சொல்வதெல்லாம் சட்டத்துக்கு விரோதமானது என்பது புரியாமல், அதன்படி நடந்த பலபேர் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஆமாம், பைத்தியத்தைத்தான் தண்டிக்க முடியாதே ஒழிய, அப்பைத்தியம் சொன்ன ஆலோசனையின் நடந்த உங்களை சட்டப்படியே தண்டிக்க முடியும். எச்சரிக்கை!
நான் சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு இதுவும் ஓர் உண்மை. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment