No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, July 25, 2017

அரசூழியர்கள் காரிய அடிமைகளே! கயமை கோமாளிகளே!!


நம் சட்ட விழிப்பறிவுணர்வு தொடர்பாக, தினந்தினம் ஏதோவொரு செய்தி, ஏதாவொரு வகையில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இது கடந்த வாரம் வந்த மின்னஞ்சல்.

I came to know about through one of my friend Sri.Thillaigovindan who is a retired Tasildar and also victimized by Tamilnadu Government guard with out any logic.

I am Thirugnanam, retired engineer from Ministry Of Defence and settled in my native place. (Edited)

I agree with your statement in connection in connection with court and lawyer. I want to discuss with you. Will you give your contact details if you wish.

இந்தச் செய்தியின் மூலம், இவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற ஊழியர்கள் (கெஸட்டேட் ரேங்க்) என்பது புரிந்திருக்கும். இவர்கள் எல்லாந்தெரிந்த அறிவாளிகள் என்பது மக்களின் மூட நம்பிக்கைகளுள் ஒன்று.

ஒழுக்கமாய் இருப்பவர்கள் அரசூழியத்துக்கு போகமாட்டார்கள். போனாலும் நிற்க மாட்டார்கள். ஆனால், அங்கேயே நின்று விட்டு அரசு பழிவாங்கி விட்டது, பாதிக்கப்பட்டு விட்டேன் என்பதெல்லாம் ஏற்க இயலாதது.

இப்படி நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் சட்ட அறியாமையைப் போக்கிக் கொள்ள நம்மிடம் இருந்து நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்குகிறார்கள்.

இவர்களிடம் நாம் ஒரு தகவலை கேட்டால், தெரிந்தாலும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஏனெனில், அவர்களைப் பற்றிய சட்ட விதிகள் யாருக்கும் தெரிந்து விடக்கூடாதாம்!

இதற்காக நம் நூல்களை வாங்குகிற வரை நாம் கேட்டதை தருவதுபோல எதையாவது சொல்லி நடிப்பார்கள். வாங்கியப்பின் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

நான் வழக்கமாக ஜெராக்ஸ் எடுக்கும் நம் வாசகரின் இடத்துக்கு தாசில்தார் மேனுவல் வந்திருந்தது ஜெராக்ஸ் வாசகரோ, அதனை பிரதி எடுத்து தரட்டுமா என்றார்.

அவர்களை கேட்காமல் எடுக்க வேண்டாம். அனுமதியைப் பெற்று எடுத்துதர சொல்லி இருந்தேன். அவர் கேட்க, அதன் பிறகு அந்த தாசில்தார் அலுவலகத்தில் இருந்து நகலெடுக்க எதையும் தருவதில்லை.

இப்படித்தான் நகலர்கள் விதிகள் 1971 ஐ நகல் கேட்டு கிடைக்கவில்லை. இவை இரண்டும் நம் கைக்கு கிடைக்குமா என சுமார் 15 வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கிடைக்கவில்லை. கீழ்கண்ட கடிதத்தை எழுதிய நீதிமன்ற ஊழியர்கூட கொடுக்கவில்லை.


இதுபோன்ற முக்கியமான விலைக்கு கிடைக்காத சட்ட நூல்களை எல்லாம் திருடுவது பெரிய காரியம் அல்ல. ஆனால், அதனை நாமே செய்யக்கூடாது என்ற காரணத்தினால், என் கைக்கே கிடைத்த பல நூல்களை வேண்டாமென விட்டு விட்டேன்.

ஆமாம், எனக்கு எது தேவையோ, அது தானாகவே என்னைத்தேடி வரும் அல்லது நான் தேட எளிதில் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இதற்கு தகுந்தாற் போல, யாரிடமும் இல்லாத நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட இரு சட்ட நூல்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்துதுறை அரசு விதிகள் கூட என்னிடம் வந்து தஞ்சமைந்து இருக்கின்றன. இது எனது ஆராய்ச்சி்க்கு உதவுமே அன்றி, எல்லோருக்கும் உதவாது.

இதில் முதலில் தஞ்சமடைந்தது, அரசின் வெளியீடான ‘‘கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலே!’’

எல்லோருக்கும் பயன்படும் என கருதுகிற, ‘‘கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலை’’ என்னுடைய குறிப்புகளுடன் வெளிக்கொண்டு வர கடந்த ஓராண்டு காலமாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்த பாடில்லை.

இதில் இரண்டு தொகுதிகள் உள்ளன. முதல் தொகுதிகள் முழுவதும் விதிகள். இதனை பல வருடங்களுக்கு முன்னர், சில வாசகர்களுக்கு கொடுத்துள்ளேன். இரண்டாம் தொகுதி படிவங்கள். இது யாரிடமும் இருக்க வாய்ப்பில்லை.

விஏஓ, தாசில்தாரில் ஆரம்பித்து மாவட்ட ஆட்சியர்வரை அவரவரது சட்டக் கடமைகள் என்ன என்பது, குற்ற விசாரணை முறை விதிகளில் உள்ளதால், அவர்களுடைய சட்ட விதிகள் தேவையேப்படாது.

நீங்கள் சொல்வதுபோல இவர்களுக்கு குற்ற விசாரணை முறை விதிகளில் இல்லையே என நீங்கள் நினைத்தால், அது தவறு.

அவ்விதிகளில் ‘‘செயல்துறை நடுவர்கள்’’ என எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டு உள்ளதோ, அதெல்லாம் தாசில்தார் அல்லது வட்டாச்சியரையே குறிக்கும்.

‘‘மாவட்ட குற்றவியல் நடுவர்கள்’’ என்றால் மாவட்ட ஆட்சியர்களை குறிக்கும். வேறு செயல்துறை நடுவர்கள் என்று பொதுவாக குறிப்பிட்டால், வட்டாச்சியர், கோட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரையும் பொதுவாக குறிக்கும்.

‘நீதித்துறை நடுவர்’’ என்றால்தான் நடுவர்களை அல்லது நிதிபதிகளை குறிக்கும்.

மேலேகண்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தாசில்தாரும் நம்மிடம் இருந்துதான் நூல்களை வாங்கியதாகவும், இவரிடமும் அவர்களது சட்ட விதி தொகுப்பை கேட்டது போலவும், மற்ற ஊழியர்களைப் போலவே கொடுக்க வில்லை எனவும் நினைவு.

இப்போது, அவர் சொன்னதுதாக கூறி இன்னொருவர் என்னைத் தொடர்புக் கொள்ள முனைகிறார். வழக்கம்போல, நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள். சந்தேகம் என்றால் கேளுங்கள் என்பதுதான் என் பதில்.

இன்னுஞ் சொல்லப்போனால், இதுபோன்ற அரசூழிய காரிய அடிமை கோமாளிகளுக்கு நம் நூல்களை கொடுக்க கூடாது என்றே தோன்றுகிறது.

நம் நூல்களைப் படிக்கும் இவர்கள் மிகுவும் ஆச்சரியத்தோடு சொல்வது, ‘‘எங்களைப் பற்றி எங்கேளுக்கே தெரியாத பல சங்கதிகளை எழுதி உள்ளீர்கள்’’ என்பதுதான்.

இதுதான், ஒவ்வொன்றையும் ஆராய்ந்து எழுதியதற்கான பலன். இதையே அவரவர்களையும் கேட்டு எழுதி இருந்தால், நூல்களை ரசித்து வாசிக்கும்படி இருந்திருக்காது.

இப்படிஆராய்ந்து எழுத இன்னும் எவ்வளவோ சங்கதிகள் இருக்க, இதனைச் செய்யாமல், நான் ஆராய்ந்து எழுதி உள்ளதை படித்து வைத்துக் கொண்டு, ஆங்காங்கே கூத்தடித்துக் கொண்டு இருக்கும் கோமாளி வாசகர்கள் ஒருபுறமென்றால்..,

இப்படியெல்லாம் ஆராய்ந்தறிந்து எவரும் உணரும்படி மிகமிக எளிமையாக எடுத்துச் சொல்லியுங்கூட, புரியவில்லை என்று ஒருவன் சொன்னால், அவனை விட அடிமுட்டாள் யாரும் இருக்க முடியாது. இப்படியுங்கூட இருக்கிறார்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, July 21, 2017

(அன், வம்)பர்கள், நண்பர்கள் அல்லர்!


நட்பு என்பதற்கான விரிவான இலக்கணமே வேறு! இதனை ஓரளவு அறிந்திருப்பீர்கள். சுருக்கமாக சொல்லப்போனால், ‘‘உன் நண்பன் யாரென்று சொல்லு; உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்று சொல்வதுண்டு. அந்த அளவிற்கு துல்லியமாக சொல்ல முடியும்.

ஆனால், இன்று நம்மோடு படித்தவர்கள், விளையாடியவர்கள் என யாரும் யாரையும், நண்பர்கள் என எளிதாக சொல்லிக் கொ(ள், ல்)கிறார்கள். 

நம்மோடு படித்ததாலேயோ அல்லது விளையாடியதாலேயே அவர்கள் அனைவரும் நண்பர்களாகி விட முடியாது. 

இது உண்மையல்ல என்றால், இன்று ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஆயிரமாயிரம் நண்பர்கள் இருக்க வேண்டும். ஆனால், விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருப்பார்கள். 

சரி, இன்றோ ஒருவரையொருவர் சந்திக்காத முகநூல் நட்பிலும் தங்களை ஒத்த கருத்துக்களின் அடிப்படையில் நண்பர்கள் என சொல்லிக் கொ(ள், ல்)கிறார்கள். 

முன்பெல்லாம் நான் வாசகர்களை கூட, நண்பர்களாகத்தான் கருதினேன். ஆனால், அவ்வாசசகர்கள் ஏதோவொரு காரியத்தை சாதித்துக் கொள்வதற்காக..,

என்னுடைய அன்பர்களைப் போல பழகியப்பின் அவர்களது காரியத்துக்கு எனது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றபோது, வம்பர்களாக மாறி இருக்கிறார்கள். 

மேலும், நியாயமான காரியத்தை சாதித்துக் கொண்டவர்கள், அவர்களைப்பற்றி நூல்களில் எழுதிய பிறகு, அதனை நற்சான்றாக எடுத்துக் கொண்டு, எப்படியெல்லாம் ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பன உட்பட அனைத்தையும் நூல்களில் எழுதியுள்ளேன். இது என்னுடைய முகநூல் வாசக நட்பு வட்டத்திலுங்கூட வெகுவாக நடந்திருக்கிறது. 

உண்மையான நட்பில் விரிசல் வராது. அப்படியே தப்பித்தவறி வந்தாலுங்கூட, ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ள மாட்டார்கள். ஆகையால், சிறிது காலம் பிரிந்திருந்தப் பின் புதிய புரிதலின் அடிப்படையில் நட்பாகி விடுவார்கள். இவர்களே நட்புக்கு இலக்கணம். 

இவர்களில் ஒருவர், வீண் பிடிவாதக்காரராக இருந்தால் கூட, மீண்டும் சேர முடியாது. ஆனால், வேறு நட்புகளின் வழியில் அறிந்து கொள்வார்கள். மறைமுகமாக உதவுவார்கள். வலியச் சென்று பேசினால் மட்டும் பேசுவார்கள். 

ஆனால், போலியான அன்பு, தான் எதிர்பார்த்தது கிடைக்காத போது அல்லது கிடைத்தப்பின் எதையும் செய்யும். இது மிகவும் கீழ்த்தரமாகத்தான் இருக்கும். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு மட்டுமல்ல; உங்களுக்கும் நிச்சயம் நடந்திருக்கும். நன்றாக யோசித்துப் பாருங்கள். 


ஆகையால், (அன், வம்)பர்களைப் பற்றி ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன். இதனை சிலர் படித்து இருக்கலாம். படித்தவர்களும் மறந்திருக்கலாம் பலர் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்தப் பதிவு அவசியமாகி விட்டது. 

எனவே, என்னைப் போலவே நீங்களும் கடைப்பிடியுங்கள். இதனை உங்களது விருப்பப்படி மற்றவர்களிடம் கடைப்பிடிக்கவில்லை என்றாலுங்கூட, பரவாயில்லை. தவறாது, என்னிடம் கடைப் பிடியுங்கள். 

ஏனெனில், நான் ஆராய்ந்து முடிவெடுத்து விட்டால், பின் அது யாராக இருந்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன். இதனால் கோடான கோடி ரூபாய் இழப்பு என்றாலுங்கூட கவலைப்பட மாட்டேன். 

எனவே, எந்தவொரு எதிர்பார்ப்பிலும் என்னுடைய வாசக வட்டத்திலோ அல்லது நட்பு வட்டத்திலோ இருந்து ஏமாறாதீர்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, July 15, 2017

பாடல்: பொய்யர்களே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளே...பொய்யர்களே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளே...
கருப்பு அங்கி அணிந்துள்ள கயவர்களே...

நியாயந்தான் சட்டமென சொல்லுங்கள்...
சட்ட விதிகளை ஆராய்ந்து அறிந்து மதியுங்கள்...

யார் பொய்ச் சொன்னாலும் நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்...
உண்மையைச் சொல்வதில் தோல்வியே இல்லையென சொல்லுங்கள்...

இல்லையேல், நம் தேசத்தை அழிப்பவர் நீங்கள்...

ஆமாம், நம் தாத்தா காந்தி...

பகுத்தறிவுப் பெரியார்...

மாயுரம் வேதநாயகம் பிள்ளை...

கப்பலோட்டிய தமிழன்...

கவிமணிப் பிள்ளை...

என அத்துனை பேராலும், கண்டபடி காரி துப்பப்பட்டவர் நீங்கள்...
இதனை, ஒவ்வொரு நொடியும் நினைவில் கொள்ளுங்கள்...

நீங்கள் உண்மையிலேயே மனிதப் பிறவிகளாக இருந்தால்...
உங்களது பொய்த்தொழில்களை கைவிட்டு, தேசத்துக்கு நன்மை செய்யுங்கள்...

இந்த நன்மையைச் செய்யுங்கள்; இதனை இன்றே செய்யுங்கள்...
இனி என் வாழ்வில் பொய்யே இல்லையென சொல்லுங்கள்...

ஆமாம், பொய்யர்களே, பொய்யர்கள் வழிவந்த நிதிபதிகளே...
கருப்பு அங்கி அணிந்துள்ள கயவர்களே...

குறிப்பு: இது, ‘என்னைப் போல் ஒருவன்’ என்ற தமிழ்ப்பட பாடலின் தழுவலில், என்னால் எழுதப்பட்ட இதனை அப்பாடலின் ராகத்திலேயே படித்தால் இனிமையாகவும், அர்த்தம் உள்ளதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

இப்படி, பாடல்களை தழுவி ராக ரசனையோடு பாடலாக எழுதத் தெரிந்தவர்கள் எழுதித்தந்தால், அதனை நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வெளியிட்டு, பாடல் வழியிலும் விழிப்பறிவுணர்வை ஏற்படுத்தலாம். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் கவனத்திற்கு...


நீங்கள் எந்த சமூக வலைத்தளத்தில் வலம் வந்தாலும், உங்களுக்குப் படித்தமான பதிவுகளை பகிரும்போது, எதற்காக அப்பதிவை பகிருகிறீர்கள் என்பதை சுருக்கமாக அதற்கென அச்சமூக வலைத்தளம் ஒதுக்கியுள்ள பகுதியில் பதிவிட்டு பகிருங்கள்.

இதில், அப்பதிவு குறித்த தங்களின் ஆக்கப்பூர்வமான அல்லது ஆதாரப்பூர்வமான மாற்றுக் கருத்தையுங்கூட சொல்லலாம்.

இப்படிச் செய்ய வேண்டும் என்பதற்காகவேத்தான், சமூக வலைத்தள வல்லுநர்கள் இப்பகுதியை பிரத்தியேகமாக உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

அப்போதுதான், நீங்கள் பகிர்வதன் நோக்கம், உங்களது நட்பு வட்டத்தில் உள்ளவர்களின் கவனத்தையும், அசல் பதிவாளரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதோடு, அதுகுறித்த உங்களின் நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தும்.

ஆனால், அரிதிலும் அரிதாக வெகுசிலரே இதனை செய்கிறனர். என்னுடைய நட்பு வட்டத்தில் இப்படி செய்யும் வெகுசிலரில் தவறாமல் தொடர்ந்து, தன் கருத்தோடு பகிர்பவர் Nanjil K Krishnan அவர்கள் மட்டுமே!ஆகையால், இவர் எனது பகிர்ந்தார் என்ற செய்திச் சமிக்கை கிடைக்கும் போதெல்லாம், என்ன கருத்தை வழிமொழிந்துள்ளார் என நானும் பார்ப்பேன்.

மேலும், நீங்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்தில் உள்ள பதிவரைப் பற்றி எந்த வகையில் எழுதினாலும், அது அவரையும் ஈர்க்க அச்சமூக வலைப்பதிவரின் வலைப்பதிவு பெயரை இணையுங்கள். இதனை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன்.அப்போதுதான், அப்பதிவரின் கருத்துக்களை விரும்புவோர், எளிதாக அவரது பக்கத்திற்கு செல்ல முடியும் என்பதோடு, தம் கருத்தில் ஒத்த கருத்துடையவர்களாக அல்லது சிந்தனை உள்ளவர்களாக யார்யார் இருக்கிறார்கள் என்பதை அவரவர்களும் இனங்கண்டு கொள்ள முடியும்.

ஆனால், இதனை தவிர்த்து, யாருடைய கருத்தை பகிர்கிறார்களோ அவர்களுக்கே தெரியாத வண்ணம், அவர்கள் சமூக வலைத்தளத்தில் முக்கிய முகவரிப் பெயராக பயன்படுத்தாத பெயர்களை, நன்றியென குறிப்பிட்டு பதிவிடுகின்றனர். இப்படிச் செய்வதில் சில நல்ல நோக்கங்களும், சில கெட்ட நோக்கங்களும் இருக்கின்றன.

ஆமாம், உதாரணத்திற்கு என்னுடைய பெயரை முகநூல் பதிவில் இணைக்க வேண்டுமெனில், Warrant Balaw என்றுதான் பதிவிட வேண்டுமே ஒழிய, நன்றி திரு. வாரண்ட் பாலா என்று பதிவிட்டால், அப்பதிவு எனது கவனத்தை ஈர்க்காது.

எதிர்பாராத வகையில், பார்த்தால்தான் உண்டு. இப்படி, என்றோப் பதிந்து, இன்று பார்த்ததைத் தான் கீழே (ப, பா)டமாகப் பதிவு செய்துள்ளேன்.இதற்கு பெயரை குறிப்பிடாமல் இருப்பதே மேல். ஏனெனில், குறிப்பிடுவேன். ஆனால், அப்படி குறிப்பிட்டது அவருக்கே தெரியக்கூடாது என்ற செய்தி எதற்காக... யாரை ஏமாற்றுவதற்காக?

இப்படியெல்லாந்தான் சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டுமென தெரியாதவர்கள் தெரியாதவாறும், தெரிந்தவர்கள் தெரிந்தவாரும், தெரியாதவாரும் தெள்ளத் தெளிவாக செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்விரு பிரிவினருக்காகவுந்தான் இப்பதிவு!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, July 13, 2017

ஆர்வக் கோளாறுகளால் காவலூழியர்களை எதிர்க்க முடியாமல் போவதேன்?!


பொதுவாக, நான் சமூக வலைத்தலங்களில் என் கருத்தை பதிவிடுவதோடு சரி. மற்றபடி, பிறப் பதிவுகளை படிப்பதில்லை.
இதற்கு காரணம் மேதாவித்தனம் அல்ல. மாறாக, சமூக ஆர்வலர்கள் என்றப் பெயரில், சமூக வலைத்தலங்களில் சுற்றித் திரியும் ஆர்வக் கோளாறுகளின் உளரல்கள்தான்!
சரி, அரிதிலும் அரிதாக, சும்மா ஒரு எட்டு பார்த்துட்டு வலாம்னு படிக்க போனா படிக்கவே பிடிக்காத அறிவுவறுமை கருத்துக்களை பதிவிட்டு இருப்பாய்ங்க!
இதுல, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுகிறேன் என்று சொல்லிக் கொ(ள்ளு, ல்லு)ம் ஆர்வக் கோளாறுகளின் அலப்பரை களை தாங்க முடியவில்லை.
இதுல ஒன்னுதான், போலீஸை சட்டப்படி சமாளிக்க முடியவில்லை அல்லது சமாளிப்பது எப்படியென புரியவில்லையென புலம்புவது.
இதிலுங் கொடுமை என்னவென்றால், அம்முட்டாள்கள் எல்லாம் இம்முட்டாள்களின் சமூக வலைத்தள பதிவுகளைப் படித்து, பாவம் பார்த்து தங்களின் தவறுகளை திருத்திக் கொள்வது போல, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும், இதனை ஆதரித்தும், தங்களின் புலம்பலை பின்னூட்டமாக இடும் முட்டாள்களின் கூட்டம் வேறு பெருகிக் கொண்டே இருக்கிறது.
உண்மையில், அவர்களுக்கு இதுபோன்ற இயலாமைப் பதிவுகளைப் பார்த்தால், உற்சாகம் கூடி இன்னுங் கொஞ்சம் குமுறலாம் என்றுதான் எண்ணுவார்களே தவிர, கொஞ்ச மாட்டார்கள் என்பது கூட புரியாத முட்டாள்களால், இந்தச் சமுதாயத்திற்கு எப்படி உதவ முடியும்?
இதற்கெல்லாம், இப்படியொரு கட்டுரையை வேலை மெனக்கெட்டு எழுத வேண்டும். சரி, எழுதினாலாவது திருந்துவார்களான்னு பார்த்தா, திருந்த மாட்டார்கள். ஏன்னா, மண்டையில் ஏறினது ஏறினதுதான்! இரத்தத்தில் ஊறினது ஊறினதுதான்.
இது எனக்குந்தான்! அதனால்தான் இந்த கட்டுரையாக்கம்!!
என்னைப் பொறுத்தவரை, நன்றாக சட்டம் தெரிந்தவர்கள் என, இந்த உலகம் நம்பிக் கொண்டிருக்கும் பொய்யர்களுக்கும், இவ்வழிவந்த நிதிபதிகளுக்கும் சட்டத்தில் அடிப்படை அறிவே கிடையாது என்பதை ஆதாரப்பூர்வமாக நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் நிறுவி உள்ளேன்.
இதனை அந்நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய இதழ்களும் வெளிப்பட எடுத்துச் சொல்லி இருக்கிறன என்பதை, நம் நூல்களுக்கான மதிப்புரையில் சில... என்ற இந்த தொகுப்பில் அறியலாம்.
இப்படி எனக்கு சாத்தியப்பட்டது, மற்றவர்களுக்கு சாத்தியப் படாமல் போவது ஏனென்றால்.., சில சங்கதிகளை, வெளிப்படையா சொல்ல வேண்டாம்னு நினைத்தா, சொல்ல வச்சிடுறாய்ங்க!
Police எப்பவுமே நாங்க Foolish தான்னு நிருபிச்சிக்கிட்டேதான் இருப்பாங்க. ஏன்னா, அவங்க பிழைப்புக்காக தேர்ந்தெடுத்து இருக்கிற அத்தொழிலின் மகிமை அப்படி!

ஆமாம், அனுதினமும் சந்திக்கிற குற்றவாளிகளான குற்றவாளிகள், குற்றவாளிகள் வரிசையில் உள்ள பொய்யர்கள், நிதிபதிகளைத் தானே அவர்கள் அதிகம் சந்திக்கிறார்கள்... அவர்களைப் பற்றியே சிந்திக்கிறார்கள்?!

அப்படியானால், இதனுள் பொதிந்திருக்கும் உண்மையென்ன?!

இவர்களை சட்டப்படி சந்திக்க முடியவில்லை என்று எண்ணும் அல்லது சொல்லும் ஆர்வக்கோளாறு அலப்பரைகள் எல்லாம் தங்களது தரத்தில் இவர்களை விட மோசமானவர்கள் அல்லது அறிவு வறுமையாளர்களாக இருக்கிறார்கள் என்றே பொருள்.

ஆகையால், இப்படிப்பட்ட ஆர்வக் கோளாறு அலப்பரைகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டே! அவை

1. அவர்களோடு ஐக்கியமாகி விட வேண்டும்.
2. இல்லையேல், இவர்களை எதிர்த்து போராடாமல் ஒதுங்கிவிட வேண்டும்.

இல்லை எனில், நிச்சயம் பாதிப்பு இவர்களுக்குத்தானே அன்றி, அவர்களுக்கு அல்ல!

அவர்களோடு ஐக்கியமாகி விட்டால், தப்பித்து விடுதல் என்று பொருளல்ல; தப்பிக்கலாம், தப்பிக்காமலும் போகலாம். இவர்களிடம் இருந்து தப்பித்தாலுங்கூட இயற்கையிடம் இருந்து தப்ப முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இவர்களால் பாதிக்கப்பட்டேன் என்றெண்ணி புலம்பும், ஆர்வக் கோளாறு அலப்பரைகள் எல்லாம், நான் சொன்னதை கூட்டி கழிச்சி பார்த்து..,

எனது ஆராய்ச்சி அனுபவக் கணக்கு சரியான்னு சொல்லுமே தவிர, இந்த உண்மையைச் சொன்ன என் மீது கோபங் கொள்ளக் கூடாது. தவறு என சொல்பவர்கள், எப்படி என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். நான் ரெடி... நீங்க ரெடியா???
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, July 10, 2017

(மெ, பொ)ய்யர்கள் (மெ, பொ)ய்யர்களே!!


பொய்ச் சொல்லி தப்பிப்பதை விட, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்! ஏனெனில், ‘‘பொய் உன்னை வாழவிடாது. உண்மை உன்னை சாகவிடாது’’ என்று வீரத்துறவி விவேகானந்தர் சொன்னதாக சொல்லுவார்கள். 

சட்டத்தொழில் புரியும் பொய்யர்களைப் பற்றி எச்சரிக்கும் எவ்வளவோ சங்கதிகளை எழுதி வருகிறேன். அப்படி இருந்துங்கூட பலர் எச்சரிக்கையாக இல்லாமல், அவர்களிடம் வழக்கை ஒப்படைத்து, ஒரு சிக்கலை நீதிமன்ற ஆவணங்களின் வழியில் பல்வேறு சிக்கல்களாக ஆக்கிக்கொண்ட பின்னர், புத்தி வந்தவர்களைப் போல தாங்களே வாதாடவும், போராடவும் முயல்கின்றனர். இது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பதை, யாராலும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. 

ஏனெனில், ‘‘கூடா நட்பு கேடாய்த்தான் முடியும்’’ என்பது இயற்கை நியதி கோட்பாடு. இது புரியாமல், நமக்கு நன்மையாய் முடியுமென முதலில் பொய்யர்களை நம்புவது அறிவு (வ, வெ)றுமையே! 

ஆமாம், உ(ய)ரிய கூலி கொடுத்து, நாம் பிடிக்கும் பொய்யர்களின் கூடா நட்பு, நமக்கு நீதியைப் பெற்றுத் தருமென நம்புவது அறிவு வறுமையின் உச்சமே!! 

ஏனெனில், பொய்யர்கள் என்றால், ‘‘உண்மையை பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி; நீதியை அநீதியாகவும், அநீதியை நீதியாகவும் ஆக்கி விடுவார்கள்’’ என்று தவறாக பொருள் கொண்டு, நமக்கு நன்மைதானே என்று கருதி இறுதியில் ஏமாறுகிறார்கள். 

இப்படி ஏமாந்தப் பின்னரே, நான் சொல்லும் உண்மைகள் புரிகிறது போலும்! ஆகையால், என்னிடம் தானே வாதாடுவது குறித்து ஆலோசனை கேட்கிறார்கள். இவர்களின் பல்வேறு சிக்கல்களையும் ஆராய்ந்து ஆலோசனை சொல்லும் நிலையில் நானில்லை. இது அவரவர்களின் வேலையே தவிர, என்னுடைய வேலையன்று. 

ஆகையால், தேவைப்பட்டால் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களைப் படித்து, தெரிந்ததை செய்துக் கொள்ளுங்கள். இந்நூல்களில் புரியாத சந்தேகம் என்றால் கேட்கலாம் என்ற நியாயமான அனுமதியை மட்டுந் தந்திருக்கிறேன். இதைக்கூட மற்ற நூலாசிரியர்கள் செய்வதில்லை என்பதை இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டும். 

பொய்யர்கள் என்றால், உங்களது பொய்யை உண்மையாக்கு வார்கள் என்பது அர்த்தமல்ல; மாறாக, பொய்யை மேன்மேலும் பொய்யாக்கி விடுவார்கள் என்றே பொருள்.

உங்களது பொய்க்கே, உங்களுக்கு தீங்கு நேரிடுமென்றால், பொய்யர்களின் பொய்யால் பெருந்தீங்கே நேரிடும். இதுபோலத்தான் உண்மை மேன்மேலும், உண்மையாகி உங்களுக்கு நன்மை செய்யும். 

இதைத்தான், வீரத்துறவி விவேகானந்தர், ‘‘பொய்ச் சொல்லி தப்பிப்பதை விட, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்!’’ என்று இரத்தினச் சுருக்கமாக சொல்லி உள்ளார். 

ஒருவேளை உங்களது பொய்யர், தன் தொழில் வழிவந்த நிதிபதியை சரிகட்டி, அவரது பொய்யை உங்களுக்கு சாதகமாக்கி தந்தாலுங்கூட, இயற்கை நியதிக் கோட்பாட்டின்படி, வினை கூடச் செய்யுமே ஒழிய குறையாது என்பதைத்தான், ‘‘பொய் உன்னை வாழவிடாது. உண்மை உன்னை சாகவிடாது’’ என்றுங்  கூறியுள்ளார்.

இன்னுங் கொஞ்சம் புரியும்படி சொல்லப்போனால், உண்மையை ஒப்புக் கொள்வதன் மூலம், பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல மணக்கலாம். இல்லையெனில், துர்நாற்றத்தோடு சேர்ந்த  நறுமணத்தைப் போல சேர்ந்து நாற வேண்டியதுதான். 

ஆமாம், பொய்யர்களின் வழிவந்த நிதிபதிளின் தண்டனையில் இருந்து, யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தப்பித்து விடலாம். ஆனால், இயற்கையின் தண்டனையில் இருந்து, உங்களை காப்பாற்றிய நிதிபதியே கூட தப்ப முடியாது. 

இனம் இனத்தோடுதான் சேரும் என்ற இயற்கை நியதி தத்துவத்தில், தங்களின் பக்கம் நியாயமில்லாதவர்கள் கூட பயத்தில் பொய்யர்களைத்தான் நம்பியாக வேண்டும். 

ஆனால், தங்களின் பக்கம் நியாயமிருக்கிறது என்று சொல்பவர்களுங்கூட, தங்களின் வழக்கை நடத்த பொய்யர்களை நம்புவது அபத்தமான அநீதிக்கே வழிவகுக்கும். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, July 9, 2017

நிதிபதிகளின் பைத்தியக்கார பட்டத்தால், ஏற்படும் சட்டப் பிரச்சினைகள்...


இன்னுங்கூட தங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்குன்னு நடிக்கிற நிதிபதிகளை விட, உலகமகா பைத்தியக்கார நடிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ஆமாம், இவர்களைப்பற்றி சத்தியவான் காந்தி, 

பகுத்தறிவுப் பெரியார், மாயுதம் வேதநாயகம் பிள்ளை, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, கவிமணி பிள்ளை மற்றும் நான் சொன்னதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது.

ஏனெனில், தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நிதிபதிளுக்கே நூல்களைப் படிக்கக் கொடுத்து உள்ளோம்.

மேலும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள இந்தியத் தலைமை ஊழியருக்கான ஆங்கில வரைவை உச்சநீதிமன்ற நிதிபதிகளுக்கும் அனுப்பி இருக்கிறோம்.

எனவேதான், மதிப்பும், மரியாதையும் இருப்பது போல நடிக்கிறார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். இப்படி நடிப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழியுமில்லை. அய்யோ பாவம்!

நிதிபதி கர்ணனுக்கு கொடுத்தது போல, எனக்கும் திஹாருக்கு போக ஒரு வாய்ப்புக் கொடுத்தா, வட மொழியை சுலபமா கத்துக்கிட்டு வந்து, நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வடமொழியில் எழுதி, வட இந்தியர்களும் சட்டப்படி வறுத்தெடுக்க வசதி செய்து கொடுத்துடுவேன். 

நிதிபதிகள் மனமிறங்குவார்களா?!

சரி, நம்ம சங்கதிக்கு வருவோம்!  

நிதிபதிகளை எதிர்ப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், நிதிபதிகளின் சட்டத்துக்குப் புறம்பான செயல்களை கூட, சட்டப்படி சந்திக்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும். 

ஏனெனில், நிதிபதிகள் தங்களுக்கு எதிரானவர்களை, தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பைத்தியக்கார பட்டம் கட்டப் பார்ப்பார்கள். 

அதாவது, கர்ணனுக்கு மனநல பரிசோதனைக்கு உத்தரவிட்டது போல உத்தரவிட்டு, அரசு மருத்துவரிடம் இருந்து, பைத்தியம் என்று சான்றிதழ் பெற்று விடுவார்கள். 

இதற்கு நிதிபதி கர்ணன் ஒத்துழைக்க மறுத்த காரணத்தால் தான், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் என்பதை ஏழு நிதிபதிகளை கொண்ட கூட்டுக்களவாணிகளின்  உத்தரவு தெளிவுபடுத்துகிறது. 

இதில் அவர்களின் காழ்ப்புணர்ச்சியும் வெளிப்படுகிறது. இதில், பல்வேறு இந்தியச் சாசன சட்டப் பிரச்சினைகளும், சாதிய அடக்கு முறைகளுங்கூட இருக்கின்றன. 

சரி, நல்ல மனநிலையில் உள்ளவர் கூறிய குற்றச்சாற்று குறித்து விசாரணை செய்ய மறுப்பதே, அவரது கூற்றில் உண்மை இருக்கிறது என்பது மட்டுமல்ல; நிதிபதிகளும் ஊழல்வாதிகளே என்பது உலகமே அறிந்த உண்மைதான். இதனால்தான், நானுங்கூட நிதிபதிகள் என்றே நூல்களில் எழுதுகிறேன். 

தங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு பைத்தியக்கார பட்டைத்தை கட்டி விட்டால் அடங்கி விடுவார்கள் என பைத்தியக்கார நிதிபதிகள் நினைக்கிறார்கள். 

உண்மையில்,  நிதிபதி கர்ணனைப் போன்று சிறைக்குப் போகப் பயப்படுபவர்கள்தான் பயப்படுவார்கள். எதற்கும் துணிந்த வர்கள், நிதிபதிகளை எவ்வளவு கீழ்தரமாக வேண்டுமானாலும் துணிந்து விமர்சிப்பார்கள். இது அவர்களுக்கு கட்டப்பட்ட பைத்தியக்காரப் பட்டத்திற்கு பிறகு மேலும் அதிகமாகும். 

ஏனெனில், நிதிபதிகளே பைத்தியக்காரப் பட்டத்தை, பைத்தியக் காரதனமாக கட்டி விட்டதால், அவர்களை சட்டப்படி சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கவும் முடியாது. இது தங்களுக்கே ஆபத்து என்பதை பைத்தியக்கார நிதிபதிகளால் உணர முடியவில்லை. 

இப்படியொரு சங்கதியைப்பற்றி, 2010 ஆண்டில் வெளியிட்ட நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் விரிவாக எழுதி உள்ளேன். படிக்காதவர்கள் படித்து தெளிவு பெறுங்கள். 

ஏனெனில், இந்தப் பைத்தியத்திம் சொல்வதெல்லாம் சட்டத்துக்கு விரோதமானது என்பது புரியாமல், அதன்படி நடந்த பலபேர் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

ஆமாம், பைத்தியத்தைத்தான் தண்டிக்க முடியாதே ஒழிய, அப்பைத்தியம் சொன்ன ஆலோசனையின் நடந்த உங்களை சட்டப்படியே தண்டிக்க முடியும். எச்சரிக்கை!

நான் சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு இதுவும் ஓர் உண்மை. அவ்வளவே!


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)