இன்பச் சுற்றுலா என்பது பலருக்கும் எட்டாத கனியாகவே உள்ளது. எனக்கும் இதுதான் நிலைமை என்றாலும், ஏதோவொரு விதத்தில் எனக்கும் அவ்வப்போது அதிர்ஷ்டக்காற்று அடிக்கத்தான் செய்கிறது.
இப்படிச் சொல்வதை விட, உங்களுக்கெல்லாம் தகவல் சொல்வதற்காகவே இப்படிப்பட்ட வாய்ப்புக்கள் கிடைப்பதாகவே கருதுகிறேன்.
இப்படித்தான் சில தினங்களுக்கு முன், வாசக வம்பர்கள் சிலரின் வம்புக்காக, இன்பச் சுற்றுலாவாக கேரளாவுக்குள் செல்ல நேர்ந்தது. டில்லி, கல்கத்தா, குஜராத், திரிபுரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் நான் பயணம் செய்திருந்தாலுங்கூட, கேரளாவிற்குள் செல்வது எங்கள் அனைவருக்குமே இதுதான் முதல்முறை. ஆகையால் சிறு தயக்கம் இருந்தது.
ஆனால், அங்கு போனப்பின் வேற்று மாநிலத்திற்குள் சென்றுள்ள உணர்வே இல்லை என்கிற அளவிற்கு அங்கு தமிழ் பேசுகிறார்கள். ஆட்டோகாரர்கள் உட்பட அனைவருமே திறந்த மனதோடு நியாயமாக நடந்து கொள்கிறார்கள்.
ஆனால், அங்கு ஆட்டோ ஓட்டும் தறுதலை தமிழர்கள் நம்மைப் போன்ற தமிழர்களை ஏமாற்றத் தயங்குவதில்லை. ஆமாம், உடுமலையை பூர்வீகமாக கொண்ட ஆட்டோ ஓட்டும் தமிழர், எங்களை ஏமாற்றி அதிக கட்டணத்தை வாங்கி விட்டார்.
தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில், தங்குமிடம் உள்ளிட்டவகைளின் கட்டணம் உட்பட அனைத்தும் நியாயமாகத்தான் இருக்கின்றன. உதவி செய்வதிலும் தாராள மனதில் இருக்கின்றனர்.
அரசுப் பேரூந்துகளில், தமிழ் மற்றும் மலையாளப் பாடல்களுக்கு இடையில், பொதுமக்களுக்கு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை உட்பட முதல்வரின் தரமான அறிவுரைகள் மலையாளத்தில் ஒலிபரப்பப்படுகின்றன.
குளிர்சாதன வசதி கொண்ட பேரூந்துகளின் இருக்கைக்கு பின்னால், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீரை பாட்டிலில் வைத்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு செய்திகளைச் சொல்லலாம்.
இதையெல்லாம் சொல்வதால், தமிழனின் பெருமை தமிழனுக்கு தெரிவதில்லை என்றுகூட சிலர் எண்ணலாம். அப்படி எண்ணுவது அவரவர்களின் மடத்தனம் என்பது பின்வரும் சங்கதிகள் மூலம் நன்கு விளங்கும்.
ஆமாம், தங்களது மாநில சுற்றுலாப் பகுதிகளைப் பற்றி எவ்வளவு விரிவான தகவல்களை தரமுடியுமோ, அவ்வளவு தகவல்களை தொகுத்து தர இயலுமோ, அவ்வளவையும் தொகுத்து தந்திருக்கிறார்கள் என்பதோடு, தமிழ் உட்பட, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள பத்து மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகள் பதினொன்றிலும் கூட தொகுத்து தந்திருக்கிறார்கள்.
மேலும், இதிலுள்ள குறைகளை தீர்க்கவும், விடுபட்டவைகளை சேர்க்கவும் தேவையான தகவல்களை தருமாறு கேட்டுள்ளார்கள் என்பதால், இதனை மேம்படுத்தி மக்கள் பயனடைய தேவையான தகவல்களை நீங்களும் கேரளா சுற்றுலாத் துறைக்கு தரலாம்.
தொடர்புடைய இணையப் பக்க இணைப்புக்கள்
https://www.keralatourism.org/
https://www.keralatourism.org/languages/
https://www.keralatourism.org/tamil/
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment