இன்று காலை பத்து மணிக்கு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆனால், முன்பைப் போல கொண்டாட்டம் இல்லாமல் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.
ஆமாம், முன்பெல்லாம் மாநில அளவில் முதல் மூன்று இடங்களுக்கு ஒருவரோ அல்லது ஓரிருவர் மட்டுமே வருவர்.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை பத்து, நூறு ஆயிரம் என கூடியதால், ஏஞ் சாதிக்கார பயபுள்ளதான் முதலில் வந்தான் என்று சொல்லி பீற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது என்பதோடு கல்வியின் தரம் கேடுகெட்ட நிலைக்கு சென்று விட்டது என்ற என் கருத்தைப் போலவே, கல்வியாளர்களின் கருத்தும் இருந்தது.
இதுபற்றி தொல்லைக் காட்சிகளில் தொடர்ந்து விவாதங்கள் அரங்கேறின. பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த ஆண்டு முடிவுகளை வெளியிடும் அச்சமயம் வழக்கம்போல, மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களின் பட்டியலை வெளியிடப் போவதில்லை என்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை முடிவிற்கு, தமிழக பள்ளிக் கல்வித்துறை வந்திருக்கிறது. இது எதிர்க்காலத்திலும் தொடரும் எனவும் அறிவித்து இருக்கிறது.
காரணம், இதனால் மற்ற மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் மன இருக்கம், மன உலைச்சல் மட்டுமே காரணமாக சொல்லப்பட்டு ள்ளது. ஆனால், இதனால் பல நன்மைகள் இருக்கின்றன.
இதுபற்றி விரிவாக ஆராய வேண்டும். சுருக்கமாக சில சங்கதிகளை சொல்லி விடலாம்.
இப்படியொரு நிலை வரவேண்டுமென்று, எத்தனையோ வருடங்களாக நினைத்து இருந்தேன். அது தற்போது நனவாகி இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி!
முதல் மூன்று இடங்களை அறிவித்ததால், அம்மாணவ மாணவிகளை முன் வைத்து தனியார் பள்ளிகள் தங்களின் பிழைப்பை வெற்றிகரமாக நடத்தி வந்தன. இனி இதற்கு பெருத்தப் பின்னடைவு ஏற்படும்.
முதல் மூன்று இடங்களைப் பிடிக்காத பள்ளிகள் கூட, அந்தந்தப் பள்ளிகளில் முன்னிலையில் வந்த மாணவ மாணவிகளை தங்களின் கட்டவுட் உட்பட பல்வேறு வகையான விளம்பரங்களில் காட்சிப் பொருளாக முன்வைத்து பிழைப்பு நடத்தி வந்தன.
இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், இப்படியொரு முற்போக்கான முடிவை எடுக்காததால், இது தொடரும் என நம்பலாம். ஆனால், அம்மாணவ மாணவியரின் பெற்றோர்கள் நினைத்தால், எங்களின் எழுத்து மூலமான அனுமதியைப் பெறாமல் அப்படி வைக்கக்கூடாது என எழுத்துப் பூர்வமாகவே சொல்லி விடலாம்.
ஆனால், பெற்றோரே பேனர் வைத்துத்தான் ஊரறிய வாழ்த்து சொல்ல வேண்டுமென்ற மனநிலைக்கு சென்று விட்ட பிறகு, அடுத்தவன் வைப்பதை வேண்டாமென சொல்லுவார்களா என்பது சந்தேகந்தான்.
இவர்களை ஊடகங்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஊதிப் பெரிதாக்கி வந்தன. இதுவும் குறையுமென நம்பலாம். இவர்களை தங்களின் பக்கம் இழுக்க நினைக்கும் கல்லூரிகளுக்கும், நாங்கள் பிற்காலத்தில் இப்படியெல்லாம் சேவை செய்வோம் என பீலா விட நினைக்கும் மாணவ மாணவிகளுக்கும் வழி இல்லாமல் போகும்.
இம்முறையை உண்மையான கல்வியாளர்கள், என்னைப் போலவே வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment