‘‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’’ என்ற வகையில் ‘‘நாலுபேர் சேர்ந்தா நல்லா இருக்கலாம்’’ என்ற காலம்போய், ‘‘இன்று நாலுபேர் சேர்ந்தா நாசமாய் போகலாம்’’ என்றாகி விட்டது.
ஆணாக அல்லது பெண்ணாக இருந்தாலும், தனியாக இருக்கும்போது, அமைதியாகத்தான் இருக்கின்றனர். இது இரண்டு மூன்றுபேர் வரையிலுங் கூட ஒரளவிற்கு தொடர்கிறது.
ஆனால், இதுவே நாலுபேர் அல்லது அதற்குமேல் என்றாகி விட்டால், எவ்வளவுக்கு எவ்வளவு நாசமான காரியங்களில் ஈடுபட முடியுமோ, அப்படி செய்கிறார்கள் என்பதை, நீங்கள் எந்தவொரு இடத்திலும் ஆராய்ந்துப் பார்க்கலாம்.
இதற்கு அடிப்படைக் காரணம், நால்வர் மத்தியில் தன்னை (ந, வ)ல்லவராக காட்டிக் கொள்ளவேண்டும் என்ற அற்பத்தனமான ஆசையை தவிர, பெரிதாக வேறொன்றும் இருப்பதாக தெரியவில்லை.
முதலில் ஒருவர் செய்யும் செயலுக்கு, மற்றவர்கள் ஒவ்வொருவரும் ஆதரவு தருவதால், மற்றவர்கள் எல்லை மீறிப்போய் விடுகிறார்கள். எனவே, இதுபோன்ற ஆபத்து நிறைந்த ஒருவரின் செயலை கண்டுங்காணாமல் இருந்து விட்டால், அவரவர்களும் அமைதியாகி விடுவார்கள். ஆகையால், அனைவரும் நன்மை அடையலாம்.
இப்படித்தான், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் காவலூழியரின் மகன் ஒருவன், ஒருத்தியை காதலித்து இருக்கிறான். இதனை அவனது நான்கு நண்பர்களும் ஊக்குவித்து இருக்கிறார்கள்.
ஒருநாள் அவளிடம், எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆகையால், நீயும் யாரையாவது திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாய் இரு என உறுதியாய் சொல்ல, அவளோ காதலை ஊக்குவித்த அவனது நண்பர்களிடம் தூதுக்கு சென்றிருக்கிறாள்.
அவர்களும், அவன் காவலூழியரின் மகன். உன்னை போழுது போக்குக்காக காதலித்தான். அதனை நீ நம்பினால் எப்படி என சொல்லவே மனம் உடைந்து போன அவள், தன்னை தீயிட்டுக் கொண்டாள்.
கூடவே, இதையெல்லாம் மரண வாக்கு மூலத்தில் சொல்லி விட்டதால், உயர்நீதிமன்ற நிதிபதிகள் வரை ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்து விட்டார்கள். இதற்கும், அவர்கள் ஒவ்வொருவரது சொத்துக்களும் பொய்யர்களிடம் போய்விட்டன.
ஆகையால், உச்சநீதிமன்ற நிதிபதிகளிடம் மேல்முறையீடு செய்ய வசதி இல்லாமல், வேலூர் சிறையில் நான்கு பேரும் தண்டனை அனுபவித்தனர்.
அந்த காவலூழியரின் குடும்பம், தன் மகனை தண்டனையில் இருந்து காப்பாற்றி விட வேண்டுமென, எவ்வளவே அலைந்தார்கள். மற்ற நால்வரின் குடும்பத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
இதில் கொடுமை என்னவென்றால், உண்மையிலேயே காவலூழியரின் மகன், அவளை காதலித்து இருக்கிறான். சும்மா, விளையாட்டுக்காகப் பொய் சொன்னது, நண்பர்களையும் அப்படியே சொல்லி வெறுப்பேற்றச் சொன்னது எல்லாம், அவனது வாழ்க்கையை மட்டுமல்ல; நண்பர்கள் நால்வரின் வாழ்க்கையையும் பாழாக்கி விட்டது என்பதுதான்!
இவனது பெயர்கூட, எனக்கு தற்போது நினைவில் இல்லை. நினைவுக்கு வருது; ஆனா வரமாட்டேங்குது.
சட்ட ஆராய்ச்சியில் நான் சந்தித்த ஆயிரமாயிரம் நபர்களில் யாருடைய பெயரைத்தான் நினைவில் வைத்துக் கொள்வது? மேலும், சந்தேகத்தின் பேரில் சிந்தித்து, தவறாக சொல்வதைவிட, இதுவே மேல்!
இவன்தான், வேலூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு யோகா சொல்லிக் கொடுத்தது. ஆகையால், வேலூர் சிறைக் கைதிகள் யார் என்னிடம் உதவியை கோரினாலும், இவனைதான் அணுகச் சொல்லுவேன்.
நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில், தலைமறைவாக இருப்பது அருமையா! பெருமையா!! பாதிப்பா? என்ற தலைப்பில் அமெரிக்க டாலரையே கள்ள நோட்டாக அச்சடித்த பெரியவரை, வேலூர் சிறைக்கு மாற்றியபோது, அங்கு நான் சந்திக்க சொன்னவர்களில், இவரே முதன்மையானவர்.
இவர்கள் எல்லாம் தண்டனையை முடித்து விடுதலை ஆனார்களா, என்ன ஆனார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. இப்படி, நான் (ச, சி)ந்தித்த பல்வேறு அனுபவங்களைச் சொல்லமுடியும்.

ஆனால், மேற்சொன்னதோடு சம்பவத்தோடு, இப்பத்திரிகை செய்தியே புத்தியுள்ளவர்களுக்கு போதுமானது என்பதால், மேன்மேலும் எழுதி, என் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை.
எனவே, நீங்கள் நாலுபேரில் ஒருவராக இருந்தால், மற்றவர்கள் செய்யும் விளையாட்டுத்தனமான காரியங்களை ஆதரிக்காதீர்கள், வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்பது எனது அ(ற, றி)வுரை!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment