நம் பிரச்சினை செய்தியாக வெளியானால், தீர்ந்து விடும் என எண்ணும் முட்டாள்களே அதிகம். ஆகையால், லஞ்சங் கொடுத்தாவது செய்தியை வெளியிடுகிறார்கள். படத்தோடு செய்தி வெளிவர வேண்டுமெனில், கூடுதல் லஞ்சங் கொடுக்க வேண்டும்.
இதனால் பிரச்சினைகள் தீர்வதற்கு பதில் கூடுகிறது என்பதே உண்மை. எனது இக்கருத்து தவறு என்றால், முதல்நாள் வெளியான செய்தியால், பிரச்சினை தீர்ந்தது என எல்லா செய்திகளுக்கும் மறுநாள் செய்தி வெளிவர வேண்டும்.
ஆனால், இதுபோன்று எங்காவது, எப்பொழுதாவது அரிதாக நடவடிக்கை நடந்தால்தான் உண்டு என்பதற்கு, இதுபோன்ற அரிதிலும் அரிதாக என்றாவது ஒருநாள் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் செய்தித்தாள்களே ஆதாரம்.

இப்படி வரும் செய்திகள் பலவும் பொதுநலனை பாதிப்பதாகத்தான் இருக்கும். இதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டுங்காணாமல் இருந்த சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதால், நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதையே தனியொருவராக எவர் வேண்டுமானாலும், குற்ற விசாரணை முறைவிதி 133 இன்கீழான பொது ஒழுங்கீனமாக கருதி சாதாரண அஞ்சலட்டையை எழுதியே நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய முடியும்.
பொது ஒழுங்கீனம் என்றால், பொது இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், பொது மக்கள் பயன்படுத்தக்கூடிய ஆறு கால்வாய் உள்ளிட்டவற்றில் போடப்பட்டு உள்ள சட்ட விரோத தடுப்புகள்,
பொது மக்களின் நலத்துக்கு கேடாக யாதொரு காரணத்திற்காகவும் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சரக்குகள்
கீழே விழுந்து ஆபத்தை உண்டாக்கும் நிலையில் உள்ள கட்டிடங்கள், கம்பங்கள், மரங்கள், அபாயகரமான மிருகங்கள் உள்ளிட்டவை என கு.வி.மு.வி 133 இல் விளக்கப்பட்டு இருந்தாலுங்கூட, அதில் சொல்லப்படாத விளம்பர பதாகைகள், அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் என பலவும் உண்டு.
இதுபற்றி நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலில், மனு மாதிரிப் பகுதியில் எழுதி உள்ளேன். குறிப்பாக, இவ்விதியில் குறிப்பிடப்பட்டு உள்ள செயல்துறை நடுவர் என்பது, அரசூழியர்களான வட்ட ஆட்சியரை குறிக்கும்.
நீதித்துறை நடுவர் என்று குறிப்பிட்டு இருந்தால் மட்டுமே, பொது ஊழியர்களான நீதித்துறை ஊழியர்களான நடுவர்ளை குறிக்கும்.
இந்த சாதாரண காரியத்தைத்தான், நான்காவது தூணாக குடியரசை தாங்கி நிற்பதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு, இதனை சாதனைகளாக வேறு விளம்பரம் தேடிக் கொள்கின்றன.

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment