இந்த விளம்பரத்தின்படி, தாமோதரன் போட்ட அஞ்சலட்டை அப்போதே போய் சேர்ந்திருக்கிறது. ஆனால், இந்த நபர் பயிற்சிக்காக வேறு மாநிலத்துக்கு சென்று விட்டு, நேற்று 05-03-2017 அன்றுதான் பணிக்கு திரும்பி இருக்கிறார்.
வழக்கு முகவரி பணியிட முகவரி என்பதால், நாம் போட்ட வழக்கு குறித்த கடிதத்தை சக பணியாளர்கள் படித்து இருக்கிறார்கள். இதனை அறிந்த இவர், மன உலைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். ஆகையால், அறிவு வேலை செய்ய வில்லை போலும்.
எனவே, இன்று அய்யப்பனை தொடர்பு கொள்ள, அவர் வேலையில் இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை.
வழக்கு முகவரி பணியிட முகவரி என்பதால், நாம் போட்ட வழக்கு குறித்த கடிதத்தை சக பணியாளர்கள் படித்து இருக்கிறார்கள். இதனை அறிந்த இவர், மன உலைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். ஆகையால், அறிவு வேலை செய்ய வில்லை போலும்.
எனவே, இன்று அய்யப்பனை தொடர்பு கொள்ள, அவர் வேலையில் இருந்ததால் அழைப்பை எடுக்கவில்லை.
ஆகையால், நம் மனைவி மாலா நம் மீது தொடுத்துள்ள வழக்கு குறித்து, மாப்பிள்ளையான நமக்கு வெற்றிலை பாக்கு, பூ பழங்களோடு தாம்பூலத் தட்டில் வைத்து அழைப்பாணையை கொடுக்காமல் அல்லது நானே கையொப்பமிட்டு வாங்குவது போல பதிவுத்தபாலிலும் அனுப்பாமல் திருவண்ணாமலையில் இருந்து சாதாரண அஞ்சலட்டை வர காரணமென்ன என கோபம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், தன் வேலையை முடித்த அய்யப்பன், மதிய உணவு நேரத்தில் தவறிய அழைப்பு இருந்ததை கண்டு, இந்த நபரை அழைக்க, தன்னுடைய மன உலைச்சளை சொல்லி தாட்பூட் தஞ்சாவூர் என குதித்து இருக்கிறார்.
இவர் மீதான வழக்கு விபரத்தை சரி பார்த்து சொல்ல முடியாத அய்யப்பன் எனக்கு தகவல் சொல்ல, நான் சரி பார்க்க அந்த நபரிடம் பேசினால், அந்தாள் பேசுவதே சரியாக கேட்கவில்லை. வெளியில் வந்து பேசு என்றாலும் பேசவில்லை.
பின்னர் இந்த விளம்பரத்தை, வழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் என்ற முகநூல் குழுவில் தேடிக்கண்டு பிடித்து, ‘‘உன் பொண்டாட்டி மாலா என்பவள் விவாகரத்து கேட்டு வழக்கு போட்டு இருக்கிறாள்’’ என்ற தகவலை சொல்லி விட்டேன்.
கூடவே, உனக்கு உதவுவதற்காக எங்களின் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து கடிதம் எழுதி உள்ளோம் என என் பாணியில் நாலு ஏத்தும் ஏத்தினேன். மொத்தத்தில், இதுக்காக எனக்கு பத்து ரூபாய் காலி!
2003 ஆம் ஆண்டு வாக்கில், இப்படி நான் எழுதிய கடிதம் ஒரு காவலூழியருக்கு போய்சேர, அந்த அரை கிறுக்கனோ, ‘‘நானே போலீசு எனக்கு தெரியாம என் மீது எப்படி வழக்கு வரும்’’ என என்னை கேட்க, ‘‘ஒன்னு பத்திரிகையை பாரு; இல்லேன்ன கோர்டுல போய் பார்த்துட்டு பேசு’’ என பதில் சொன்னதும், கோர்டுல பார்த்துட்டு, பின்னர் மன்னிப்பு கேட்டு நன்றியும் தெரிவித்தார்.
இப்படி தாமோதரன் போடும் கடிதங்கள் பலருக்கும் கிடைத்து, உலாப்பேசியில் அழைத்து நன்றி சொல்கிறார்கள். ஓரிருவர் மட்டும், இப்படி நன்றியை கடிதமாக எழுதி உள்ளார்கள். இவர்கள் எல்லாம் சாதாரண மக்கள்.
ஆனால், அரசூழியத்தில் இருப்பவர்கள் எல்லாம் காரிய அடிமைகளும், கோமாளிகளுமான அரை கிறுக்கர்களே என்பதற்கு, நான் மேலே சொன்ன இவ்விரண்டு கிறுக்கர்களே நல்லதொரு உண்மை! ஆகையால்தான், இந்த ஆக்கத்திற்கு, அரசூழியர்களும் அரைகுறை ஊழியர்களும், அரை கிறுக்கர்களே! என்று பொருத்தமாக வைத்தேன்.
மேலும், இந்த ரயில்வே கிறுக்கர் அய்யப்பனை தொடர்பு கொண்டால், அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை தெரிவிக்க வசதியாக, இந்த தகவலை அய்யப்பனுக்கும் சொல்லி விட்டேன்.
அதாவது, விவாகரத்து தானே கேட்டிருக்கிறாள்; எப்படியோ ஒழிந்து போகட்டும் சனியன் என, வழக்கில் ஆஜராகாமல் இருந்து விட்டால், ஒரு தரப்பாக தீர்ப்பாகும். ஆனால், அவளோ இருபதாயிரம், முப்பதாயிரம் என ஜீவனாம்சத்துடன் தான் விவாகரத்து கேட்டிருப்பாள்.
ஆகையால், அதுவும் தீர்ப்பாகி விடும். அதன்படி கட்டவில்லை எனில், நீதிமன்ற உத்தரவு ஊழியரின் கூலி வழங்கல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, அவர்களே கூலியில் பிடித்து செலுத்தும்படி ஆகிவிடும். பின் இந்த கிறுக்கர் சோத்துக்கு பிச்சைதான் எடுக்கனும்.
நாம் எழுதிய அஞ்சலட்டையை சக பணியாளர்கள் படித்து விட்டார்கள் என்பதற்கே இந்த ஊழியர் மன உலைச்சல் அடைந்தார் என்றால், நாம் நிதிபதிகளைப் பற்றி எழுதும், நூல்களையும் கடிதங்களையும் படிக்கும் நீதிமன்ற ஊழியர்கள் நிதிபதிகளைப்பற்றி என்னென்ன நினைப்பார்கள்?
நிதிபதிகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை எல்லாம் எண்ணிப்பார்த்து, உண்மையை உள்ளபடியே விமர்சித்து கடிதம் எழுதுவதின் மூலம், அவர்களின் தவறுகளை குறைக்கு முடியும் என்று நூல்களில் ஆங்காங்கே எழுதி உள்ளதை நினைவில் கொண்டு தாராளமாக எழுதுங்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment