No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, February 18, 2017

பதவி விலகல்களில் விடுபட்ட கூடுதல் தீர்வுகள்!


இது, பதவி விலகல்களில் எழும், பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களும், தீர்வுகளும்! கட்டுரையில் விடுபட்ட கூடுதல் தீர்வுகள் என்பதால், அந்தக் கட்டுரையைப் படித்தப்பின் இதனை தொடரவும். 

எவருமே எதையுமே நிர்ப்பந்தத்தில் செய்யக்கூடாது என்பதைப் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதியுள்ளேன். 

இந்த வகையில், நான் யாருடைய நிர்ப்பந்தத்திற்கும் ஆளாவதில்லை. ஆனால், அரிதிலும் அரிதாக, எப்பொழுதாவது என்னுடைய நிர்ப்பந்தத்திற்கு,  நானே ஆளாகி விடுகிறேன். 

ஆமாம்! சமூகத்தில் நிலவும் மிக முக்கியமான புதியப்புதிய சட்டப் பிரச்சினைகள் குறித்து ஆராயும்போது, அவசரமாக தீர்வை சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில், எனக்கு நானே அழுத்தம் கொடுத்துக் கொண்டு விடுவதால், ஓரிரு சட்ட சங்கதிகளை சரியாக ஆராய முடியாமல் போய் விடுகிறது. 

சமூகத்திற்கான சட்டத் தேவையைத்தான் ஆர்வத்துடன் ஆராய்கிறேன். அரசியல் சட்டப் பிரச்சினைகள் தொடர்பான ஆராய்ச்சிகளில், எனக்கு அவ்வளவாக ஆர்வமும் இல்லை; அதற்கான நேரமும் இல்லை. ஆனாலும் இவற்றிலுங்கூட, என் கருத்தை சிலர் எதிர் பார்ப்பதாலேயே, ஆராய்ந்து சொல்கிறேன். 

மேலும், ஆராய்ச்சி என்பது, அதனை மேற்கொள்வோர் விரும்பும் வரை தொடர வேண்டும். இதில், எக்காரணத்தைக் கொண்டும் அவசரம்  காட்டுவது சரியான முடிவை தெரிவிக்காது.

மேலும், அச்சமயம் பார்த்து புதிது புதிதாக அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை கவனிக்க வேண்டும். இணைய அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது வேறு வேலை பளுக்கள் என வெவ்வேறு விதங்களில் சில நிர்ப்பந்தங்களும் சேர்ந்து, ஆராய்ச்சி சிந்தனையை திசை திருப்பி விடும்.  

சரி விசயத்துக்கு வருவோம்! 

இதற்கு முன்பு படித்த ஆய்வுக் கட்டுரையில்.., 

எப்படிப்பட்ட ஒரு பதவி விலகல் கடிதத்தையும், அவர்கள் கைப்பட எழுதித்தந்தால் மட்டுமே கட்டாயம் ஏற்கப்படும் என்ற சட்ட விதியை, முதலில் பொதுவில் அமல்படுத்த வேண்டும். அதாவது, இவ்விதி சாதாரண குடிமகனில் இருந்து, இந்தியத் தலைமை ஊழியரான குடியரசுத் தலைவர் வரை என, அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும்.., 

ஆனாலிது, தற்போது இந்திய சாசனத்தின் நிர்வாகிகளாக இருக்கும், இந்தியத் தலைமை ஊழியர், மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக ஊழியர்கள் மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நிதிபதிகள் மற்றும் இந்தியத் தலைமை ஊழியரால் ஊழியத்தில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மட்டுமே இருக்கிறது என்றும் சொல்லி உள்ளேன் அல்லவா?

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பிரதிநிதிகளான நாடாளு மன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முறையே கோட்பாடுகள் 101(3) மற்றும் 190(3) இன்படி இருக்கிறது என்பது விடுபட்டு விட்டது. 

அப்படியென்றால், இது கையால் எழுதப்படாத பன்னீரின் பதவி விலகல் கடிதத்துக்கும் பொருந்துமே என நீங்கள் நினைக்கலாம். 

ஆனால், மந்திரிகளுக்கான பதவி விலகல்களில், இதுபற்றிய விளக்கம் எதுவும் இல்லை என்பது, நான் ஏற்கெனவே அக்கட்டுரையில் சொன்னபடி காப்பியடித்து தொகுத்தவர்களின் அறிவுவறுமை என்றே பார்க்க முடிகிறது.

ஆமாம், மந்திரிகளுக்கு இல்லாத உரிமை, நிச்சயம் உறுப்பினர்களுக்கு இருக்கப் போவதில்லை என்ற எண்ணத்தினாலும், அக்கட்டுரையின் பிரதான நோக்கமே, மந்திரியின் பதவி விலகலில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைக்கான தீர்வு மட்டுமே என்பதாலும், இதை எல்லாம் ஆராய வேண்டுமென நான் யோசிக்கவில்லை. அப்போது, அதற்கான கால அவகாசமும் இல்லை. அவ்வளவே! 

மேலும், இந்திய சாசனக் கோட்பாடு 190(3) - இன்படி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அல்லது அவருக்கு நிகரான பொறுப்பில் உள்ளவரிடம் மட்டுமே வழங்க முடியும். 

இதனை தாமாக முன்வந்து கொடுக்கவில்லை அல்லது கொடுக்கப்பட்ட கடிதம் பொய்யானது என தெரியவந்தால், அதுபற்றிய விசாரணையை நடத்தி, தான் அறியும் உண்மைக்கு முடிவெடுக்க வேண்டும்.

உறுப்பினர்கள் பதவி விலகினால், அவர் வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டி இருக்கும். 

ஆனால், மந்திரி பதவியில் இருந்து ஒருவர் விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் தேவைப்படாது என்பதோடு, மாநில பரிந்துரையாளர்களின் (மந்திரிகளின்) பதவி விலகல் கடிதத்தை மாநில தலைமை ஊழியர் (ஆளுநர்) மட்டுமே ஏற்கமுடியும். 

ஆனால், கட்டாயத்தின் பேரில் கொடுக்கப்பட்ட கடிதமாக இருந்தால், அதனை திரும்பப் பெறுவதற்கான வழிகள் எதுவும் சொல்லப்படவில்லை. 

உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள உரிமையை, பரிந்துரை யாளர்களுக்கு வழங்காததை அறிவுவறுமை என சொல்வதா அல்லது பரிந்துரையாளர்களை எல்லாம் பதவி விலக யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று அர்த்தம் கொள்வதா அல்லது எதிர்கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட ஏதோவொரு நிர்ப்பந்தத்திற்கு ஆளானதன் பேரில் பதவி விலகும் பரிந்துரையாளர்களுக்கு வசதியாக வைக்கவில்லையா என்பது, அரசியல் வியாதிகளுக்கே வெளிச்சம்.   


ஆனால், பன்னீருக்கு ஆதரவான இந்த பத்திரிக்கை செய்தியில், பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற முடியும் என்ற வகையில், இந்திய சாசன கோட்பாட்டையே திரித்து எழுதி இருக்கிறார்கள். 

இது உண்மையல்ல என்பது முதல் தற்போதைய முதல்வர் யார் என்பது வரை, இப்போது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அவ்வளவே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)