இவிங்களோட விளக்கம் எல்லாமே, ‘‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’’ என்பதை, சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது.
முதல் நாள் இரவு 11.30 மணிக்கு இறந்தவரை, அடுத்த நாள் மாலைக்குள் அடக்கம் செய்யும்போது, எதற்காக உடலைப் பதப்படுத்தனும்?
நீண்டநாள் படுத்த படுக்கையா இருந்தவங்களுக்கு, முதுகில் சில புண்கள் ஏற்படுமே ஒழிய, ஓட்டை விழாது. முதுகிலேயே ஓட்டை விழாதபோது, கன்னத்தில் எப்படி, நான்கு ஓட்டைகள் விழும்?
அதுவும் அவர் மெல்ல மெல்ல குணமடைந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியப் பின், இதிலும் அவர் விரும்பும்போது வீட்டுக்கு செல்லலாம் என்று சொல்லி இருந்த நிலையில், எப்படி ஓட்டைகள் விழும்?
சொல்லுற பொய்யை பொருத்தமாக சொல்ல வேண்டாமா??
பொய்யை பொருத்தமாக சொல்ல முடியாது என்ற உண்மையாவது தெரிய வேண்டாமா?!
கால்களை அகற்றவில்லை என்றால், சிகிச்சையில் இருந்த ஜெயாவின் உயரம், திடீரென அபூர்வ சகோதரர்கள் கமல்போல குறையக் காரணம் என்ன?
சிகிச்சை செலவு விபரத்தை, எந்த குடும்பத்திடம் கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு ஏன் பதில் சொல்ல முடியவில்லை?
தவலை தன் வாயால் கெடுங்கிற மாதிரி, நீங்களே பிரஸ்மீட் வெச்சி மாட்டுறீங்க... போங்கய்யா நீங்களும், உங்களின் (புண், பன்)நாக்கு விளக்கமும்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment