நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, February 4, 2017

நான் சொன்னால், சொன்னதுதான்! - ஜல்லிக்கட்டு


நான் சட்டத்தில் ஆராய்ந்து சொன்னால், சொன்னதுதான் என்பதற்கு எத்தனையோ உண்மைச் சம்பவங்கள் இருக்கின்றன. இதில், இறுதியாக சொன்னபடி நடந்துள்ளது, ‘‘இந்தியத் தலைமை ஊழியரின் அனுமதி இல்லாமல் கொண்டு வரப்படும் ஜல்லிக்கட்டு சட்டம் செல்லாது’’ என்பது ஆகும். 

ஆமாம், இந்த பதிவை 21-01-2017 அன்றே சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்தேன். இதில் சுட்டுரைப் பதிவை அரசியல் வியாதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக அவர்களது பெயர்களையும், நட்பில் உள்ள ஆர்வலர் ஒருவர் இணைத்தார். 


இதன் அடுத்த கட்டமாக, 22-01-2017 ஜல்லிக் கட்டுக்கு நிரந்தர தீர்வாக இந்தியத் தலைமை ஊழியரின் ஒப்புதலை ஏன் பெற வேண்டும், என்பதற்கான இரண்டு பக்க வரைவை அச்சிட்டு, சென்னை மெரினாவில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் வினியோகிக்க முடிவு செய்திருந்த நிலையில், 23 ஆம்தேதி அதிகாலையிலேயே, காவலூழியர்கள் அறப்போராட்டத்தை கலவரப் போராட்டமாக மாற்றி விட்டனர். 

ஆகையால், அச்சிட்டு விநியோகிக்கும் திட்டம் கைவிடப்பட்டு, வழக்கம் போலவே நீதியைத்தேடி... இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டு, அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டது. 

இந்நிலையில், நான் சொன்னபடியே கடந்த 31-01-2017 அன்று, இந்தியத் தலைமை ஊழியரின் ஒப்பத்தைப் பெற்ற தமிழக அரசின் ஜல்லிக்கட்டுக்கான சிறப்பு அதிகாரச் சட்டமானது, தமிழக அரசின் அரசிதழில் 02-02-2017 அன்று வெளியிடப்பட்டு உள்ளது. 



எனவே, இச்சிறப்பு அதிகாரச் சட்டத்தை, இனி (பே, பீ)ட்டா உட்பட வேறு யாரும் சட்ட ரீதியாக தடை செய்ய கோர முடியாது; கோரினாலுங்கூட, நிதிபதிகள் தடை விதிக்க முடியாது என்பதை, 31-01-2017 அன்றைய வழக்கு விசாரணையில் தெளிவுபடுத்தி விட்டனர்.

சத்தியவான் காந்தி உலகிற்கே முன்மொழிந்துச் சென்ற அகிம்சை அறப்போராட்டம், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, அதுவும் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ளது! எனவே, இனி இந்தியா முழுவதும் மக்கள் தொடருவார்கள் என உறுதியாக நம்பலாம்!! 

ஆமாம்! ஜல்லிக்கட்டுக்கான அறப்போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை, 23-01-2017 அன்றே நானுங்கூட உறுதியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தேன்


ஆகவே, மேன்மேலும் இதுபோன்று உரிமைகளை மீட்டெடுக்கும் அறப் போராட்டங்களை தொடர்ந்தால், மக்களின் மீது அரசு உட்பட, அரசின் கூலிக்கு மாரடிக்கும் அரசூழியரில் இருந்து, பொதுவூழியர்களான நிதிபதிகள் வரையென எவரும் ஆதிக்கம் செலுத்த முடியாது. 

இதைத்தான் சத்தியவான் காந்தியும் அவரது முதல் தத்துவ நூலான இந்திய தன்னாட்சி அல்லது சுயராஜியம் என்கிற நூலில் எழுதியுள்ளார். ஆனால், நாம்தான் அவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக படிக்கவில்லை. 

சென்னையில் நடந்த அறப்போராட்டத்தை, நான் நேரிலும், வேறுசில வழிகளிலும் ஆராய்ந்த வரை, நம்ப முடியாத பல வேற்றுமையில் ஒற்றுமையை மக்களிடத்தில் கண்டேன். 

ஆனாலுங்கூட, இப்படிப்பட்ட அறப்போராட்டங்களில் மேலும் பல சீர்த்திருத்தங்கள் தேவையென நம்புகிறேன். இதுபற்றி தனியாக கட்டுரை ஒன்றை வாய்ப்பு இருக்கும்போது எழுதுகிறேன். அவ்வளவே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

பயின்றோர் (20-08-16)