மிகுந்த நம்பிக்கையோடு, நான் ஏற்படுத்திய வழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் குழுவில் உங்களின் கடமையாக கடிதம் எழுதி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இக்குழுவின் நோக்கம், சம்பந்தப்பட்டவருக்கு தகவல் சொல்லுவது மட்டுமே அல்ல. இது ஆயுள் முழுவதும் இயலாத காரியமும் கூட!
இதில், என்னென்ன தவறுகள் நடக்கின்றன என்பதை எல்லாம், ஆதாரப்பூர்வமாக கண்டு பிடித்து, இந்த அறிவிப்பு வெளியிடும் முறையை முற்றிலும் ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான்.
இதற்கு ஏதுவாக நாம் சில சங்கதிகளை, பதிவிடும்போது கவனிக்க வேண்டும். அதனை பதிவு செய்யவும் வேண்டும்.
1. உரிமையியல் விசாரணை முறை விதிகள் கட்டளை 5 இன் விதி 20 இன்படி, யாருக்கு அறிவிப்பு கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் வசிக்கும் பகுதியில் வெளிவரும் நாளிதழில் கொடுக்கப்பட வேண்டும்.
2. சென்னை உட்பட பிற பகுதிகளுக்கு, மதுரைமணி நாளிதழில், வெளிவந்த சில விளம்பரங்களை பதிவிட்டு உள்ளீர்கள்.
3. மதுரைமணி நாளிதழ், மதுரையில் இருந்து மட்டுமே வெளிவரும் என யூகித்து, இணையத்தில் தேடியதில் சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
4. எனவே, இந்நாளிதழுக்கு இணையப்பக்கம் கூட இல்லை என தெரிகிறது.
5. எங்கெல்லாம் பதிப்பு வெளிவருகிறது என்பது, முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைப் பார்த்து தெரிவிக்கவும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.